Friday, June 27, 2025

Vidyaa daanam - HH Bharati teertha Swamigal

*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்* 

மனிதன் க்ஷேமம் அடைவதற்கு தர்மத்துக்கு உயர்ந்த இடம் உண்டு. சகல தர்மங்களிலும் உத்தமமான தானம் ஒருவருக்கு ஏதோ ஒன்றை மகிழ்ச்சியுடன் கைமாறு எதுவும் எதிர்பார்க்காமல் கொடுப்பது. 

ஸாத்விக, ராஜஸிக, தாமஸிக என்று மூன்று வகையான தானங்களில் தகுதியுள்ள மனிதனுக்கு சரியான சமயத்தில், தகுந்த இடத்தில், கொடுப்பது ஸாத்விக தானம். இஷ்டமில்லாமலும் கைமாறு எதிர்பார்த்தும் கொடுப்பது ராஜஸிக தானம். பண்பற்று தாழ்வுபடுத்தும் முறையில் சமயம் இடம் பெறுபவன் தன்மை எல்லாவற்றையும் லக்ஷியம் செய்யாமல் கொடுப்பது தாமஸிக தானம். ஸாத்விகதானம்தான் கொடுக்கப்பட வேண்டும். மற்ற தானங்கள் நிஷித்தம் (பயனற்றது). 

தானங்களில் வித்யா தானம் உண்மையில் பெரியது. குரு வித்யயை கொடுப்பதால் மிகவும் மதிப்புக்குரியவர். 

தானமாக கொடுத்த வஸ்துக்கள் உபயோகத்தில் கரைந்து விடுகின்றன. தானம் அளித்த வித்தை அப்படிப்பட்டதல்ல. அது மேலும் வளரும். ஆதலால் தன்னிடம் எள்ளளவில் உள்ள வித்தையை சுலபமாக மற்றவர்களுக்கு அளிக்கலாம். இதுவும் சத்காரியமாகும். 

ஆதிசங்கரர் போன்ற ஞானிகள் உலகத்துக்கு ஞானத்தை தானம் அளித்து அழியாத கீர்த்தி பெற்றிருக்கிறார்கள். அதே மாதிரி பண்டைய காலத்து அரசர்கள் பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் விசேஷ இனாம்களை கொடுத்து புகழ் அடைந்து இருக்கிறார்கள். 

தன் சக்திக்கேற்ப தானம் அளித்து எல்லோரும் கீர்த்தி பெறட்டும்.

 பாவத்திலிருந்து நரகமும், ஏழ்மையிலிருந்து பாவமும் தானமின்மையிலிருந்து ஏழ்மையும் உண்டாகின்றன. ஆதலால் எல்லோரும் தானம் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment