''குழந்தைக்கு பால் தரட்டுமா?'' -- நங்கநல்லூர் J K SIVAN
''பத்து நாள் முன்பு பிறந்த குழந்தைகள் அனைவரையும் கொல்ல வேண்டும். ராஜ்யம் முழுதும் சரியான ஆட்களை அனுப்புங்கள். அவர்கள் கொன்ற விவரங்கள் எனக்கு உடனே வந்து சேரவேண்டும்'' கம்சன் கட்டளை இது.
ராஜ்யம் முழுதும் சென்ற கொலையாளிகளில் ஒருவள் கை தேர்ந்த மாயாஜாலக்கார அரக்கி பூதனை. அழகான இளம்பெண்ணாக கோகுலத்தில் நுழைந்தாள் . கிருஷ்ணன் என்ற குழந்தை இருப்பதை அறிந்து யசோதை வீட்டு வாசலுக்கு வந்து கையில் தாமரை மலரோடு நின்றாள்.''யாரம்மா நீ?''''குழந்தையை ஆசையாக பார்க்க வந்தேன் மா''''வாம்மா ''உள்ளே வந்தவள் கிருஷ்ணன் தொட்டிலில் படுத்திருப்பதை பார்த்தாள் . எத்தனையோ குழந்தைகளைக் கொன்ற போதனையின் முகத்தை பார்க்க பிடிக்காமல் கிருஷ்ணன் தன்னையும் கொல்லவந்ததும் கண்ணை மூடிக்கொண்டான். ஒருவேளை பார்த்தால் அவள் மேல் இரக்கம், கருணை, கொண்டுவிடுவேனோ? ஓஹோ, ராக்ஷஸர்களைக் கொல்லவந்த நான் பிள்ளையார் சுழி போடப்போவதே தாயாக பால் கொடுக்க வந்த இந்த பேய் தானா. ?''''அம்மா, குழந்தை பசியோடு தூங்குறான்னு தோணுது.. நான் கொஞ்சம் பால் கொடுக்கட்டுமா?''
''சரிம்மா''''அரைத்தூக்கத்தில் இருப்பதாக நினைத்து கண் மூடிய கிருஷ்ணனை எடுத்து மடியில் விட்டுக்கொண்டாள் பூதனை.சாதாரண ஒயர் என்று நினைத்து தெரியாமல் தொட்டு உடனே அதிக மின்சார ஓட்டம் கொண்ட கம்பியை தீண்டியதால் அந்தக் கணத்திலேயே கருகி இறந்தவர்களில் ஒருவளோ இந்த பூதனை!தயாராக ஏற்கனவே மிகக் கொடிய விஷத்தை தனது முலைகளின் மேல் நிறைய தடவிக் கொண்டு வந்தவள் அவள். முலைக் காம்பை கிருஷ்ணன் வாயில் அழுத்தினாள்.
''வா, உன் மரணத்தை தழுவு என்று அவள் அளித்த முலைக்காம்பை வாயில் வைத்து அவள் உயிரையே உறிஞ்சினான் கிருஷ்ணன். ''வசமாக வந்தவளே வந்தனம்''..என சிரித்தான் .என்ன ஆயிற்று எனக்கு? பூதனைக்கு தலை சுற்றியது, அறை சுற்றியது, வீடே வேகமாக சுழன்றது. தாங்க முடியாத ஒரு வலி உடலெங்கும். நெருப்பென எரிச்சல். ஐயோ ஐயோ, என்னை விடு..என்னை விட்டுவிடு''. கத்தினாள் பூதனை.கண் இருண்டது . ஸ்வாசம் தடைபட்டது. பெருமூச்சோடு அவள் உடல் தடால் என சாய்ந்தது. தலைவிரி கோலமாக கை கால்கள் விரிந்து அங்கு ஒரு நெடிய ராக்ஷஸி கோரைப்பற்களுடன், சிவந்த கண்களுடன் பெரிய வயிறோடு உயிரற்று கோரமாக கிடந்தாள்.
''ஹா'' என்று கத்திக்கொண்டே எல்லோரும் அங்கே சேர்ந்துவிட்டார்கள். ஒன்றுமறியாத சிசுவாக கண்ணன் அவள் வயிற்றின் மேல் கைகால் அசைத்து விளையாடிக் கொண்டிருந் தான். யசோதை வாரி எடுத்து அவனை அணைத்துக் கொண்டாள் .ராக்ஷஸி உடல் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தம் செய்யப்பட்டது.
''என்ன கும்பல் நம் வீட்டுக்கு முன்பு? ஏற்கனவே வசுதேவர் எச்சரிக்கை கொடுத்ததில் கவலையோடு வீடு திரும்பிய நந்தகோப மஹாராஜா விஷயம் அறிந்து அதிர்ந்து போனார்.
No comments:
Post a Comment