*நீதி மஞ்ஜரீ*
*நல் வாழ்க்கை*
ஒருவர் ஸுகமாயிருந்து வருவதை நாம் பார்க்கும் போது நாமும் அவர்போல இருந்தால் நல்லது என்ற ஆசை உண்டாகிறது. அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லையென்றால் அவரிடம் அஸூயை ஏற்படுகிறது. அஸூயை முற்றினதேயானால் தனக்கு ஸுகம் கிடைக்காமல் போனாலும் அவருடைய ஸுகத்தைக் கெடுக்க வேண்டுமென்ற மாதஸணியம் உண்டாகிறது. அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள அவரிடம் போட்டி போடத் தோன்றுகிறது. ஆசை நிறைவேறிவிட்டால் தானும் அந்த ஸுகத்தை ஸம்பாதித்து விட்டோம் என்ற மதம் ஏற்படுகிறது. செய்யும் பிரயத்தினம் நன்கு பலித்து அவரை விட அதிகமான ஸுகம் கிடைத்துவிட்டால் அவரிடம் அவமதிப்பு ஏற்படுகிறது. இவ்விதமாகப் பல விதத்தில் மனதின் சாத்தியைக் கெடுக்கக்கூடிய விருத்திகள் ஏற்படும். இவைகளுக்கெல்லாம் மூல் காரணம் தனக்கில்லாத ஸுகம் வேறொருவரிடம் இருக்கிறதே என்ற எண்ணம்தான். இதை நிவிருத்தி செய்வதற்கு ஒரே வழி தான் உண்டு. எவ்வித ஆசையுமற்று இங்கே சொல்ல வரவில்லை. ஆத்ம நிஷ்டையிலிருப்பதை இங்கே ஸாமான்ய தசையிலிருப்பவர்களுக்கே வழி சொல்லப்படுகிறது. அதாவது, யாரிடம் ஸுகமிருப்பதாகக் காண்கிறோமோ அவரை வேற்று மனுஷியராகப் பார்க்காமல் நம்மைச் சேர்ந்தவர் என்றே பாவித்துவிட்டால் மேலே கண்ட கெட்ட விருத்திகள் யாதொன்றும் ஏற்படாது. இந்த பாவனையைத்தான் மைத்ரீ, மித்ரத்தன்மை, ஸ்நேஹம் என்று சொல்லுகிறது.
நாம் மிகவும் ஆசையுடன் ஏதோ ஒரு பழத்தை சாப்பிட்டு ஸுகமடைய வேண்டுமென்று நினைத்து சிரமப்பட்டு ஸம்பாதித்து வீட்டுக்குக் கொண்டு வந்து வைத்திருப்போம். ஏதோ அவஸர காரியமாக உள்பக்கம் போய்விட்டுத் திரும்பி வந்து பார்க்கையில் அப்பழத்தைக் காணவில்லை என்றால் நமக்கு துக்கம் கவலை எல்லாம் ஏற்படுவது ஸஹஜம். யார் எடுத்துக்கொண்டு போனாறென்று தெரியாதபோதே அந்தத் தெரியாதவரிடம் கோபமும் வரும். அப்படியிருக்க முன்பின் ஸம்பந்தமில்லாதவர் ஒருவர் வந்து "நான்தான் எடுத்து சாப்பிட்டுவிட்டேன்" என்று சொன்னால் கோபம் வரும் என்பதில் ஸந்தேஹமில்லை. அப்படிக்கன்னியில் நம் குழந்தையே வந்து "அப்பா, நான் தான் எடுத்து சாப்பிட்டேன்" என்று சொன்னால் அந்தக் கோபம் வருகிறதில்லை. 'சரி போ, நீ தானே சாப்பிட்டாய்' என்று ஸமாதானம் செய்து கொள்ள முடிகிறது. வேற்று மனுஷியர் சாப்பிட்டாலும், நம் குழந்தை சாப்பிட்டாலும், நமக்கு இல்லையென்று போய்விட்ட அம்சம் பொதுவாக அப்படியே இருக்கிறது. ஆனாலும், மனஸுக்கு ஸமாதானமாகாத நிலை, ஸமாதானமாகும் நிலை என்ற வித்யாஸமிருக்கிறது. இதற்குக் காரணம் அந்த மனுஷியர் வேறு, குழந்தை நம்மைச் சேர்ந்தது என்ற எண்ணம்தான். அந்த மனுஷியரிடத்திலும் தன்னைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் இருந்துவிட்டால் கோபம் வராது.
No comments:
Post a Comment