*மயான கிணறு*
👆👇🏻
நாளை(31-3-25) பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் கங்கை பெருகும் திருக் கடவூர் மயானக் கிணற்றில் நீராடினால் திருமணத் தடைகள் விலகும் !
நாளை(31-3-25)ஒரு நாள் மட்டுமே பக்தர்களுக்கு திருக்கடவூர் மயானக் கிணற்றில் நீராட அனுமதி…
காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட வேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் இருக்கும்.
ஆனால், வசதி வாய்ப்புகள் இடம் கொடுப்பதில்லை.
அப்படியான பக்தர்களுக்கும் கங்கையில் நீராடிய புண்ணிய பலனை அருள வேண்டும்' என்று திருவுள்ளம் கொண்ட சிவ பெருமான், அத்தகைய புண்ணிய பலனை பக்தர்கள் அடைவதற்காக கோயில் கொண்ட திருத்தலம்தான் திருக்கடவூர் மயானம் என்ற புனிதத்தலம்.
பிரசித்திபெற்ற அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்திருக்கும் திருக்கடவூருக்கு அருகிலேயே அமைந்துள்ளது திருக்கடவூர் மயானம்.
இந்த ஆலயத்துக்கு வெளியில் தென் புறத்தில் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது.
அதற்கு அருகிலேயே ஒரு தீர்த்தக் கிணறும் உள்ளது. இந்தத் தீர்த்தக் கிணற்றின் புனித நீரில்தான் திருக்கடவூர் அமிர்த கடேஸ்வரருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.
இந்தத் தீர்த்தத்தில் பக்தர்கள் ஆண்டுக்கு ஒரு முறைதான் புனித நீராடலாம்.
அந்த விசேஷமான நாள் பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாள் ஆகும்.
சிவத் தலங்களில் ஐந்து கோயில்கள், 'பஞ்ச மயான தலங்கள்' என்று அழைக்கப் படுகின்றன.
அவை காசி மயானம், கச்சி மயானம் (காஞ்சி புரம்), காழி மயானம் (சீர்காழி), நாலூர் மயானம், கடவூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம்) ஆகும்.
மயானம் என்பது பிரம்மாவை சிவபெருமான் எரித்து நீறாக்கிய தலங்களைக் குறிப்பதாகும்.
ஒவ்வொரு பிரம்ம கர்ப்பத்தின் பல யுகங்களின் முடிவில் சிவ பெருமான், 'தான்' என்ற அகந்தை கொண்ட பிரம்ம தேவரை எரித்து விடுவார்.
அவ்வாறு சிவபெருமான் பிரம்மதேவரை எரித்த தலங்களில் ஒன்றுதான் திருக்கடவூர் மயானம் என்னும் திருமெய்ஞ்ஞானம்.
அப்படி சிவ பெருமான் பிரம்மதேவரை இந்தத் தலத்தில் எரித்தபோது, தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி திருக்கடவூர் மயானத்தை அடைந்து, பிரம்ம தேவரை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
தேவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கிய சிவ பெருமான், பிரம்மதேவரை உயிர்ப்பித்து, அவருக்குச் சிவ ஞானம் உபதேசம் செய்ததுடன், படைக்கும் ஆற்றலையும் அருள் புரிந்தார்.
*பிரம்மா சிவஞானம் உபதேசம் பெற்ற தலம் திருக்கடவூர் மயானம் என்பதால், இந்தத் தலத்துக்கு திருமெய்ஞானம் என்ற பெயர் ஏற்பட்டது.*
அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம் இது.
இந்தக் கோயிலிலுள்ள பிரம்ம தீர்த்தத்துக்கு அருகிலுள்ள கிணற்றில்தான் கங்கை பெருகியது
என்றும் 16 வயதுடன் சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தை சிவனாரிடமிருந்து பெற்ற மார்க் கண்டேயர், கங்கை நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய விரும்பினார்.
மார்க்கண்டேயரின் விருப்பத்தை நிறைவேற்றத் திருவுள்ளம் கொண்ட சிவ பெருமான், அந்தக் கிணற்றில் கங்கையை வரவழைத்து அருள்புரிந்தார் என்கிறது தல வரலாறு.
திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் அருளால் கங்கை சங்கமித்த தீர்த்தக் கிணறு என்பதால், இந்தக் கிணற்று நீர் அமிர்தகடேஸ் வரருக்கு அபிஷேகம் செய்ய மட்டுமே பயன் படுத்தப்படுகிறது.
இந்தக் கோயிலில் அருள்புரியும் பிரம்மபுரீஸ்வர ருக்குக்கூட இந்தக் கிணற்று நீர் கொண்டு அபிஷேகம் செய்ய படுவதில்லை.
ஒருமுறை பாகுலேயன் என்ற மன்னன் ஒருவன், இங்குள்ள இறைவன் பிரம்ம புரீஸ்வரருக்கு கிணற்று நீர் கொண்டு அபிஷேகம் செய்தான்.
அப்போது திடீரென்று சிவலிங்கத்தின் உச்சியில் வெடிப்பு ஏற்பட்டது.
அந்தத் தழும்பு இன்றும் சிவ லிங்கத் திரு மேனியில் காணப்படுகிறது.
எனவே, திருக் கடவூர் மயானம் இறைவனுக்குக்கூட இந்தக் கிணற்று நீரால் அபிஷேகம் கிடையாது.
''இந்தக் கிணற்றில் தான் பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று ஒரு நாள் மட்டும் கங்கை பெருகும்.
அன்றைக்கு மட்டுமே பக்தர்கள் கிணற்று நீரை எடுத்து புனித நீராடலாம் .
"இந்தக் கோயிலில் இறைவன் மேற்கு நோக்கி, திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்.
அம்பிகையின் திருநாமம் அருள் மிகு நிமல குசாம்பிகை.
*இந்தத் தலத்து இறைவனை வழிபட திருமணத் தடைகள் விலகும்* .
*வருடத்துக்கு ஒரு முறை பங்குனி மாதம் வரும் அஸ்வினி நட்சத்திரத்தன்று இந்தக் கோயிலுக்கு வந்து புனித நீராடி இறைவனையும் இறைவியையும் மனமுருக வழி பட்டால், எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.*
*காசிக்குச் சென்று கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைப்பதுடன், பித்ரு தோஷங்கள் உள்ளிட்ட சகல தோஷங்களும் விலகும் என்பது மற்றுமொரு ரகசிய செய்தி.*
*இந்தக் கோயிலில் முருகப் பெருமான் வில், அம்புடன் காட்சி அருள்கிறார்* .
*அவரை வழி பட்டால் எதிரி களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.*
*எனவே,நாளை 31-3-25 அன்று நடை பெறவிருக்கும் இந்த அற்புதமான புனித நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு,
புனித நீராடி இறைவனையும் இறைவியையும் வழிபட்டு அனைத்து நலன்களையும் பெறலாம்''*
*அமைவிடம்* ,
மயிலாடுதுறை
யிலிருந்து சுமார்
23 கி.மீ தொலை விலுள்ள, திருக் கடவூர் அமிர்த கடேஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுர வாயிலி லிருந்து, சுமார் 1 கி.மீ தொலை விலுள்ளது திருக்கடவூர் மயானம் அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்.
உலகின் முதல்வனே அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை யாரே உன் மலர் பாதம் சரணம் . 🌿🌿
**சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம் .
No comments:
Post a Comment