101/004 ஸஹஸ்ரநாமம்
(34) விச்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத் ப்ரபு: | பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவன: || (1)பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமாகதி:| அவ்யய: புருஷ: ஸாக்ஷீ க்ஷேத்ரக்ஞோக்ஷர ஏவ ச || (2)யோகோ யோக விதாம் நேதா பிரதாந புருஷேச்வர: | நாரஸிம்ஹ வபு: ஸ்ரீமாந் கேசவ புருஷோத்தம: || (3)
முதல் ஸ்லோகத்தில் ஒன்பதும், இரண்டாவதில் எட்டும், மூன்றாவதில் ஏழு திருநாமங்களும் உள்ளன. இந்த 24"திருநாமங்களும் காயத்ரியின் 24 அக்ஷரங்களை விவரிக்கின்றன. ஸஹஸ்ர நாமத்துக்கே ஈராக இருப்பது அதிலுள்ள மூன்றாவது ஸ்லோகம்.
(35) யோகோ யோக விதாம் நேதா பிரதாந புருஷேச்வர:|
நாரஸிம்ஹ வபு: ஸ்ரீமாந் கேசவ புருஷோத்தம: ||
ஆயிரம் திருநாமங்களும் நரஸிம்ஹனுடைய பெருமையே காட்டும். பகவான் வாசுதேவன் எதிரே உட்கார்ந்திருக்கிறான். பீஷ்மாசார்யர் எதிரேயுள்ள வாசு னதேவனை விட்டுவிட்டு ஸஹஸ்ரநாமத்திலே "நரம் கலந்த ஸிம்ஹமான சுந்தர ஸிம்ஹன்" என்று போற்றுகிறார். காயத்ரியில் ஒளிப்பிழம்பாக இருப்பது ந்ருஸிம்ஹன்."ஸர்வ ப்ரஹரணாயுத:" -- பகவான் ந்ருஸிம்ஹனாக அவதாரம் பண்ணிய போது நகங்கள் கூட ஆயுதம் ஆயிற்று என்கிறார் ஆதி சங்கரர். ஆரம் பத்தில் ந்ருஸிம்ஹன். கடைசியில் ந்ருஸிம்ஹன். இடையிலும் ந்ருஸிம்ஹன். ஸஹஸ்ர நாமத்தில் ஆயிரம் திருநாமங்களும் ந்ருஸிம்ஹனையே சொல்கிறது.
(36) "அம்ருத்யுஸ் ஸர்வத்ருக் ஸிம்ஹஸ்
ஸந்தாதா ஸந்திமான் ஸ்த்திர: |
அஜோ துர்மர்ஷணச் சாஸ்தா
விச்ருதாத்மா ஸுராரிஹா ||
"அம்ருத்யு" என்கிற நாமத்திற்கு ம்ருத்யுவுக்கு விரோதி என்று ஆசார்யர்கள் வ்யாக்யானம் பண்ணு கிறார்கள். ஹிரண்ய கசிபுவிடம் ப்ரஹ்லாதன் சொல் கிறான். "பயமே பயந்து ஓடி விடும் என்று அளவிற்கு பயபீகர ரூபத்துடன் விளங்கும் அபயங்கரனான எம்பெருமான் என் முன் நிற்கும் போது நான் யாரிடம் . வேண்டும்:; "ஸர்வ த்ருக் என்றால் எங்கும் பார்வையை உடையவன் என்று அர்த்தம். ஸிம்ஹத்தின் பார்வை தீக்ஷண்ய மானது. ஆனால் தன் குட்டியை வாத்ஸல்யத்துடன் பார்க்கும். நரஸிம்ஹன் ப்ரஹ்லாதனை வாத் ஸல்யத்துடன் பார்த்தான். ஹிரண்ய கசிபுவை விழித்து தீக்ஷண்யமாகப் பார்த்தான். "த்ருக்" என்றால் சம நோக்கு என்று அர்த்தம். பக்ஷபாதம் கிடையாது பகவானுக்கு. தன்னிடத்தில் சரணாகதி செய்கிற எல்லோரையும் அனுக்ரஹம் பண்ணுவான். தான் ஸர்வ வ்யாபி என்பதைக் காட்டவே ந்ருஸிம்ஹா வதாரம் பண்ணினான். பாஞ்சராத்ர ஆகமத்தில் ந்ருஸிம்ஹனுக்கு முப்பத்திரண்டு ரூபங் கள் சொல்லப்பட்டுள்ளன. ப்ரஹ்லாதன் சொன்னதையே நடத்திக் காட்டினான். "வனத்கதோ யத்ஹரிமாச்ரயேதா" என்று காட்டிற்குச் சென்று ஹரியை உபாஸனை பண்ண வேண்டும் என்றான். ஹரி என்றால் நாராயணன். ஹரி என்றால் ஸிம்ஹம் . ஸிம்ஹத்தை உபாஸனை பண்ண வேண்டும் என்று சொன்ன தால் ஸிம்ஹ வடிவில் வந்தான். பிராணிகளில் உயர்ந்தது ஸிம்ஹம். ஜந்துக்களில் மனுஷ்ய ஜென்மா உயர்ந்தது. இந்த இரண்டையும் சேர்த்து அவதாரித்தான் பகவான். "ப்ரஹ்லாதோ நரதாம் நிரீஷ்ய தத்தாதே ம்ருகதாம் நிரீஷ்ய" அசுரக் குழந்தை ப்ரஹ்லாதன்.ஆனால் அவனுக்கு அசுர பாவம் கிடையாது. மனுஷ்ய பாவனையை அந்த குழந்தையினிடத்தில் பார்த்தான் பகவான். ஹிரண்ய கசிபுவினிடத்தில் அசுரத் தன்மை இருந்தது. அப்பாவின் செய்கையை தன் முகமாகவும் குழந்தையின் ஸ்வபாவத்தை தன் மீதி சரீரமாகவும் அவர்களின் நிலையை தனக்குள் ஆக்கிக்கொண்டான் பரமாத்மா.
(37) ந்ருஸிம்ஹன் குகையில் இருப்பான். நித்யம் இளமை யுடன் இருப்பவன். வைகுண்டத்தில் இருப்பவனும் நரஸிம்ஹனே. குகை என்றால் ஹ்ருதய குகை. ஹ்ருதயத்தில் அந்தர்யாமியாக இருப்பவனும் நரஸிம்ஹனே. இன்னொரு இடத்தில் வேதம் பரமாத்மா பர்வத குகையில் மனிதனும் அல்லாத ம்ருகமும் அல்லாத ரூபத்துடன் இருக்கிறான் என்கிறது. பர்வதம் என்றால் வேதங்கள். "ஸந்தாதா" -- வைரிகளை, விரோதிகளை அழிப்பவன்..உத்தமமான பக்தி உள்ளவர்களிடத்தில் அன்பு கொண்டவன் என்று இந்த நாமத்திற்கு பொருள். .பக்தி இருப்பவர்களிடத்தில் நெருக் கமாக வருவான். பக்தி இல்லாதவர்களால் கிட்ட நெருங்க முடியாத வன். "ஸந்திமான்" தன்னை அடிபணிந்தவர்களிடம் வ்யா மோகம் கொண்டு அனுக்ரஹம் பண்ணுவான். "அஜ:" என்றால் நம்மைப் போன்று பிறப்பற்றவன். ஸ்தம்பத்திலிருந்து ஆவிர் பவித்தவன் ந்ருஸிம்ஹன். ந்ருஸிம்ஹன் பிறக்கும் போதே தன் தாயான ஸ்தம்பத்தை பாட்டியாக்கிவிட்டது. ப்ரஹ்மா பகவானின் பிள்ளை. தன் பிதாவைப் பெற்ற அம்மா என்பதால் ப்ரஹ் மாவுக்கும் பிதாமஹி ஆகியது தூண்இனிமேல் வரப் போகிறது எல்லா ப்ரஹ்மா வுக்கும் பிதாமஹி ஆகியது. "துர்மர்ஷண"ஸர்வத்தையும் அடக்கி ஆளக்கூடிய வன் எதிர்த்து வரக்கூடிய வர்களை சிக்ஷிப் பவன். "சாஸ்தா" -- எல்லோருக்குள் ளும் புகுந்து ஆவேசிப் பவன். வழி நடத்தக் கூடியவன். "விச்ருதாத்மா" -- எங்கும் பரவிய கீர்த்தியை உடையவன். "ஸுராரிஹா" -- ஸூரர்களை ஹிம்சித்த ஹிரண்யகசிபுவை நிரஸனம் பண்ணி னான். நம்முள் உள்ள அகங்கார மமகாரங்களை நிரஸனம் பண்ணுகிறான்.
(38) ந்ருஸிம்ஹ மந்திரத்தில் பீஷணம் பத்ரம் என்று அடுத்தடுத்து வருகிறது. பீஷணம் என்றால் துஷ்டர்களுக்கு பயங்கரமானவர்கள். பத்ரன் என்றால் நல்ல வர்களுக்கு மங்களமானவன். ந்ருஸிம்ஹமந்திரத்தில் 32 அக்ஷரங்கள் இருப்பது போன்று விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் இந்த பதினோரு திருநாமங் களிலும் 32 அக்ஷரங்கள் உள்ளன. இந்த திருநாமங்களால் சொல்லப்படுபவன் "நாரஸிம்ஹ வபு: ஸ்ரீமாந்--ஸர்வ ப்ரஹரணாயுத:" ஸஹஸ்ரநாமத்தில் முதல் முதலில் சொல்லப்பட்ட அவதாரம் நரசிம்ஹாவதாரம் தான். அதற்கு முன்பு சொல்லப் பட்ட நாமங்கள் பொதுத்தன்மையானவை. முதல் அவதாரம் நரஸிம்ஹாவ தாரம். கடைசியிலும் "ஸர்வ ப்ரகரணாயுத:" என்று அவன் திரு நாமமே வரு கிறது. இதுதான் ஆயுதம் என்றில்லை. எதை வேண்டுமானாலும் அவன் ஆயுதமாக்கிக் கொள்வான். ஸஹஸ்ரநாமத்தின் நடுவிலும் நர ஸிம்ஹனே பேசப்படுகிறான். ஒன்று பார்த்தோமே யானால், அது நரஸிம்ஹ ப்ரபாவம் என்று தெளிவாகத் தெரியும்.ஆயிரம் திருநாமங்களும் அவன் பெருமையைப் பேச வந்தது. வேதம் பகவானை "ஸதஸத்பதிம் அத்புதம்" என்று கொண்டாடு கிறது. சபைக்கு ஸதஸுக்கு அதிபதியாய் இருப்பவன் நரஸிம்ஹன். சூரியன் அவனுக்கு ஒரு நேத்ரம். சந்திரன் இன்னொரு நேத்ரம். நரஸிம்ஹன் விசேஷ மாய் மூன்றாவது நேத்திரத்தை (அக்னியை) உடையவனாக இருக்கிறான். அது மாத்திரமல்ல. ஸ்ரீதேவி, பூதேவி,ஜநீளாதேவி என்று மூன்று திவ்ய மஹிஷிக ளோடு எழுந்தருளியிருக்கிறான். அதனால் த்ரயம்பகன் என்று பெயர் அவனு க்கு உண்டு. அவனுக்கு மூன்று நேத்ரங்கள். மூன்று பட்டமஹிசிகளை உடைய வன். ம்ருத்யுஞ்சயன் அவன். ம்ருத்யு ம்ருத்யுவே நம: ம்ருத்யுவுக்கு ம்ருத்யுவாக இருப்பவன். பரிபூரண ஆயுளை நமக்கு அளிக்கக்கூடியவன். நரஸிம்ஹ பீஜாக்ஷரங்களைக் கொண்டு யந்திரத்தை ப்ரதிஷ்டாபனம் பண்ணினால், அந்த யந்திரத்தைச் சேதனம் பண்ணக்கூடிய இன்னொரு யந்திரமோ மந்திரமோ கிடையாது.நரஸிம்ஹ மந்திரத்தினால் திக்பந்தனம் பண்ணி, நரஸிம்ஹ மந்திரத்தினால் ஒரு யந்திர த்தை ப்ரதிஷ்டாபனம் பண்ணிவிட்டால் உள்ளே வேறு எதுவும் நுழைய முடியாது.
(39) "உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் |
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம் ||:
என்று பதினோரு பதங்களோடு கூடிய, அனுஷ்டுப் சந்தசில் அமைந்த மந்திரம். மந்திர ராஜம் என்று அதற்கு பெயர். அனைத்துக்கும் ராஜாவாக இருக்கக் கூடியது. எல்லாவற்றைக் காட்டிலும் ஏற்றமுடையது. ஈச்வரனாலேயே எடுத்துக் காட்டப்பட்டு உயர்ந்ததாக இதில் முப்பத்திரண்டு அக்ஷரமிருக்கிறது. நரஸிம்ஹமந்திரத்தைக் காட்டிலும் சின்ன மந்திரமில்லை. நரஸிம்ஹ மந்திர த்தைக் காட்டிலும் பெரிய மந்திரமும் இல்லை. "அணோரணீயான், மஹதோ மஹீயான்" என்று உபநிஷத் சொன்ன மாதிரி சின்ன மந்திரத்தினுள்ளேயும் எம்பெருமான் இருக்கிறான். பெரிய மந்திரத்தின் உள்ளவேயும் அவனே இருக் கிறான். மந்திர சாஸ்திரம், யந்திர சாஸ்திரம் யாவுமே அவனுக்கு உரியவை. பீஷணம் பத்ரம் இரண்டுமே நரஸிம்ஹ னுக்குரிய குணங்கள். பீஷணம் மேலோங்கிறபோது அவனைக் கிட்டேநெருங்க முடியாது. பத்ரம் மேலோங்குகிற போது நெருங்கிவரலாம். நரஸிம்ஹன் பத்ரனாகவும் இருக்கிறான். பீஷண மாகவும் இருக்கிறான். ஹிரண்ய கசிபு மாதிரி இருக்கக் கூடியவர்களுக்கு பீஷணன்.ப்ரஹ்லாதன் மாதிரி இருக்கக் கூடியவர்களுக்கு பத்ரன்.
(40) "விச்வ" சப்தத்தினாலே பத்து அவதாரங்களும் பேசப்படு கின்றன.. இந்த அவதாரங்கள் எல்லாமே ஸஹஸ்ரநாமத்தில் வருகின்றன.வேதத்தை மீட்க பரமாத்மா மத்ஸ்ய அவதாரம் எடுக்கிறான். அப்போது விச்வத்தினாலே வேதங் கள் மீட்கப்பட்டன என்று பொருள்பட ஸ்லோகம் இருக்கிறது . பகவான் தான் வேத சம்ரக்ஷணம் அதிகமாகப் பண்ணுகிறான். ஏனென்றால் வேதம் அழிந்து விட்டால் நாம் அவனை உணர முடியாது. வேதம் இருக்கிறதென்றால் பரமாத்மா இருக்கிறான். வேதம் இல்லை என்றால் பரமாத்மா இல்லை என்பது சாஸ்திரம் சொல்லும் உண்மை. வேதம் இல்லை என்றால் பரமாத்மா இல்லை என்று எப்படிச் சொல்லலாம். இவ்வுலகில் வேத பாராயணமே யாரும் பண்ணவில்லை என்றால் அப்போது பரமாத்மாவே இல்லை என்று சொல்லிவிட முடியுமா? இதன் பொருள் என்னவென்றால் வேதம் இருந்தால் தான் அதன் மூலமாக பரமாத்மாவை நாம் உணர முடியும் வேதம் தான் பரம ப்ரமாணம். எனவே தான் வேதங்களைக் காப்பாற்ற அவன் எடுத்து மத்ஸ்யாவதாரம் விச்வம் என்கிற சப்தத்தினால் அறியப்படுகிறது.
💥💥💥💥💥💥
No comments:
Post a Comment