அபாத்திரத்தில் (தகாதவர்கட்கு) செய்யும் தானம் தீமையை தோற்றுவிக்கும். நரகத்தையே கொடுக்கும்.
ஒரு அந்தணர் தொடர்ந்து வைதிக கர்மாக்களை அனுஷ்டிப் பவர். அவர் பசி என்று வந்த ஒரு செண்படவனுக்கு நிறைய சாப்பாடு போட்டார். அந்தணர் கிழவர்.ஒரு நாள் இறந்தார்.
யமபடர்கள் நீர் பாபி. நரகத்திற்கு வாரும் என அழைத்தார்கள். "நானா பாபி. யமனையே கேட்கிறேன்" எனக்கூறி யம லோகத் திற்குப் போனார். அங்கு போனதும் "என்னை அழைக்க என்ன காரணம்? "என்று கேட்டார். யமதர்மர் சித்ரகுப்தனைப் பார்த்தார். அவர் நபர் பதிவேட்டைபா பார்த்தார். இவரைப் பற்றிய குறிப்பை வாசித்தார். "'இவர் ஒரு நாள் ஒரு கூடை நிறைய மீன்களைப் பிடித்து விற்றார். அதன் பயனை அனுபவிக்க இங்கு வந்து இருக்கிறார்" என்றார்.
அந்தணர் "குப்தரே! இது என்ன விசித்திரமான பொருத்த மில்லாதக் குற்றச்சாட்டு. நானோ வைதிக பிராமணன். மீன் வாடை அடித்தாலே மூக்கைப் பிடித்துக் கொண்டு வேகமாக செல்வேன்" என்றார்.
சித்ரகுப்தன் "அந்தணரே ஒருநாள் செயலாற்ற முடியாதபடி பசியினால் வாடி வதங்கிய ஒருவனுக்கு வயிறு நிறைய சோறு போட்டீர். உமது பிச்சையின் பலத்தினால் சோர்வு நீங்கி அவன் மீன்களைப் பிடித்து சென்று விற்பனை செய்தான். அந்தப் பாவம் உமது கணக்கில் ஏறிவிட்டது. அபாத்திரத்தில் தானம் செய்ததின் பலன் இது" என்றார். எனவே ச்ரோத்தியரகட்கு (வேதம் ஓதியவர்கட்கு) செய்யும் தானமே உத்தமமாகும்.
**ஆர்ஜிதம் யத்னேன பாலயேத் பாலிதம் வர்தயேத் |
நீத்யா வ்ருத்தம் பாத்ரேஷு நிக்ஷிபேத் \||
(யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி)
நல்வழியில் ஈட்டிய பொருளை முயன்று காக்க வேண்டும்.
காப்பாற்றியதை அற வழியில் வளர்க்க வேண்டும். வளர்த்த பொருளை சத்பாத்திரத்தில் விநியோகிக்க வேண்டும்.
No comments:
Post a Comment