Saturday, January 4, 2025

After death 1st day karyam

Courtesy: Sri.Ganu Vadyar

நமது சனாதனத்தில் எல்லா ஜீவ ராசிகளுக்கும் பிறப்பு இருந்தால் இறப்பு நிச்சயம் உண்டு பிற ஜீவராசிகள் போல  அல்லாத மனுஷ்ய ஜன்மா வேறு சில ஸம்ப்ரதாயங்கள் அதையும் போல் தான் நமக்கு மனுஷ்ய ஜன்மா கிடைத்தது பெரும் பாக்யம் அதையும் தாண்டி நாம் விப்ர ( ப்ராஹ்மண )ஜன்மா பெரும் பாக்கியம்
40 ஸம்ஸ்காரங்கள் விதிக்கப்பட்டுள்ளது கர்பாதானம்
பும்ஸுவனம் சீமந்தம் ஜாதகர்மா
நாமகரணம்
அன்ன ப்ராசனம் கர்ணவேதனம்
சௌளம் உபநயனம் இத்யாதி கடைசியாக அந்த்யேஷ்டி இறப்பு அந்திம க்ரியைகள்
இப்ப உள்ள காலகட்டத்தில் இதை பண்ண நமக்கு ரொம்ப ஸ்ரமமாக உள்ளது இதை பித்ரு யக்ஞம் மாத்ரு யக்ஞம் என்று பெரியவர்கள் சொல்வார்கள் ஏனெனில் இந்த யக்ஞம் ஒரு வருட காலம் நியமம் அனுஷ்டிக்க வேண்டும்.
முதலில் ஒருவர் இறக்கும் சமயத்தில் ஜீவ ப்ராயச்சித்தம் என்று பழங்காலத்தில் உயிர் ஊசலாடும் போது பண்ணுவார்கள் அதை பண்ணினால் இறப்புக்கு கொஞ்சம் கால அவகாசம் எடுக்க வாய்ப்பு உண்டு உதாரணமாக என் பிதாமஹர்க்கு இரண்டு தடவை இது மாதிரி பண்ணி உள்ளார்கள் என் பிதா சொல்லி கேள்வி பட்டு இருக்கேன் நானும் இந்த ஜீவ ப்ராயச்சித்தம் சில வருடங்கள் முன்பு ஒரு பாட்டிக்கு ஊசலாடும் சமயத்தில்  பண்ணி வைத்தேன் இரண்டு வருடங்கள் கழித்து தான் அவர்கள் காலகதி அடைந்தார்கள்.
ஒரு உயிர் பிரிந்த உடன் 3.45 நாழிகை அதாவது 1.30 மணி நேரம் வரை  தீண்டல் கிடையாது ஏனென்றால் யம தூதர்கள் ஆன்மாவை எடுத்து கொண்டு அந்த ஆன்மா தானா சரி தானா என்று தீர்மானம் பண்ணி
கொண்டு விடுவார்கள்
அதன் பிறகு ஸம்ஸ்காரங்கள் ஆரம்பித்து
புண்யாஹவாசனம்
ஸர்வ ப்ராயச்சித்தம் தானங்கள்
கர்ண மந்திரம்
ப்ரேதாக்னி ஸந்தானம் ஒரு தம்பதிக்குள்   யார் ப்ராணன்  முதலில் போகிறதோ அவாளுக்கு ஔபாசனாக்னி பின்பு உத்தபனாக்னி
ப்ரஹ்மசாரி என்றால் கபாலாக்னி கன்யா என்றால் துஷாக்னி இது மாதிரி நிறைய உள்ளது
அடுத்து தக்ஷிணாயனத்தில் போனால் ப்ராயச்சித்தம்
க்ருஷ்ண பக்ஷத்தில்
போனால் ப்ராயச்சித்தம்
அஸ்தமனம் ஆன பிறகு போனால் நிஸி மரண ப்ராயச்சித்தம்
8 மணி நேரத்திற்குள் தஹனம் பண்ண வேண்டும் இல்லை என்றால் பழையதாகிறது அதற்காக பர்யுஷித ப்ராயச்சித்தம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்ரட்டாதி ரேவதி இந்த நக்ஷத்ரத்தில் போனால் தனிஷ்டா மரண ப்ராயச்சித்தம் இது மாதிரி சில ப்ராயச்சித்தங்கள்
 பண்ணி ஆத்திலிருந்து கிளம்பும் முன்னர் வாக்கரிசி போடுகிறார்கள் அது ரொம்ப தவறு தாயாதிகள் புருஷர்கள் மட்டுமே அதுவும் மயானத்தில் தான் போட வேண்டும் ஸ்த்ரீகள் கூடாது இப்ப உள்ள கட்டத்தில் வரும்  எல்லோரும் போடுகிறார்கள் இதை தவிர்க்க வேண்டும் என்று சொன்னால் வாத்தியார்க்கு ஒன்றும் தெரியவில்லை என்று குறை கூறுகிறார்கள் இனியாவது இதை தவிர்ப்போம் ஆத்தில் இருந்து கிளம்பி மயானம் சென்ற உடன் அங்கு ஓர்
 இடத்தில் வைத்து மூன்று முறை ப்ரதக்ஷிணம் மற்றும் அபாரதக்ஷிணமாக சரீரத்தை வலம் வந்து அரிசியினால் பலி போடுவார்கள்
பிறகு கை துடைத்த காசு இந்த இடத்தில் ஸ்வர்ணம் தான் சொல்லி இருக்கு அதுவும் கர்தாவுக்கு வேற யாருக்கும் கொடுக்கலாகாது அதன் பிறகு சில காரியங்களை முடித்து தஹன மேடையில் வைத்து தான் வாக்கரிசி போட வேண்டும் பிறகு சரீரம் எப்படி பிறந்ததோ அதே போல் தான் தஹனம் செய்ய வேண்டும்
அக்னி போட்ட உடன் சில வைதிக காரியங்களை முடித்து கொண்டு கர்தா க்ஷவரம் பண்ணி கொண்டு க்ரஹத்திற்கு வந்து கல் ஊன வேண்டும் ஏனென்றால் அந்த ஆத்மா அக்னி ப்ரதானம் ஆன உடன் சூடு தாங்காமல் தாஹத்திற்காக  சுற்றும் அதற்கு தான் என்றே இரவு எத்தனை மணி ஆகினாலும் கல் (கருங்கல் ஆகர்ஷண சக்தி உண்டு) ஊன்றி அந்த ஆத்மாவை அதில் ஆவாஹனம் செய்து தஹன ஜனித
க்ஷுத்ருஷ்ண தாஹ தாப உபஸமனார்த்தம் என்று சொல்லி தீர்த்தம் விடுகிறோம் க்ராமங்களில் நதி தீரத்தில் ஒரு கல் ஆத்தில் ஒரு கல் ஊன்றுவார்கள் இப்ப நகரத்தில் தனி வீடு இருக்கணும் அப்படி இருந்தால் ஆத்தில் பண்ணுவதற்கு அவாளுக்கு முடிய வேண்டும் ஆத்து வெளியிலும் ஆத்து உள்ளேயும் கல் ஊன்றி  பண்ணுகிறோம் அதுவும் இல்லையா சாவடியில் எப்போது இடம் கிடைக்கிறதோ அப்போது தான் அது வரை அந்த ஆத்மா சுற்றி கொண்டு தான் இருக்கும்
கல் ஊன்றி பிண்ட தானம் முடித்து பிண்டத்தை கரைத்து விட்டு க்ரஹத்திற்கு வந்து ஸ்நானம் செய்ய வேண்டும்
தஹனம் பண்ணின தினத்தில்  கர்தா போஜனம் செய்ய கூடாது 

No comments:

Post a Comment