Monday, January 6, 2025

After death 100 srAddhams

Courtesy:Sri.Ghanu Vadyar

இப்போதுள்ள கால கட்டத்தில் விறகு வைத்து எரிப்பதிற்கு இடம் குறைந்த நிலையில் தான் உள்ளது எங்கோ தேடி அலைய வேண்டிய நிலை அப்படி கிடைத்தாலும் நமக்கு நேரமில்லை எரிவாயு தகனம் ஆனால் ஒரு மணி நேரத்தில் அஸ்தி கிடைக்கிறது அதை வைத்து ஸஞ்சயனம் நடக்கிறது அதற்கு சில ப்ராயச்சித்தங்கள் பண்ணி பால் தெளித்து ஜலம் ஊற்றிஸ்ருதம் ஆக்கிய பிறகு அந்த அஸ்தியை ஒவ்வொன்றாக மந்த்ரம் சொல்லி எடுத்து பானையில் அடைக்கிறோம் பிறகு பால் ஊற்றி அகமர்ஷண ஸூக்தம் சொல்லி அபிஷேகம் பண்ணி அந்த பானையை வடிகட்டி ஒரு துணியில் கட்டி அஸ்தி ஸ்தாபனம் பண்ண வேண்டும் அதாவது ஒரு நதி தீரத்தில் குழி தோண்டி அந்த அஸ்தி பானையை புதைக்க வேண்டும் இப்ப உள்ள ஸ்திதியில் ஸமுத்ரம் அல்லது குளம் அல்லது ஏரிகளில் விஸர்ஜனம் செய்கிறோம்
பிறகு ஆத்துக்கு வந்து ஸ்நானம் செய்து இரண்டாம் நாள் நித்யவிதி பிண்டதானம் செய்கிறோம்
 இந்த கர்மாவில் மொத்தம் 100 ஸ்ரார்த்தம் ஆம ரூபமாக அதாவது அரிசி வாழைக்காய் கொடுத்து செய்கிறோம் அதாவது முதல் நாள் தகனம் பண்ணும் சமயத்தில் எப்படி பிறந்தோமோ (எந்த துணியும் இல்லாமல் அது இப்ப உள்ள சூழ்நிலையில் நமக்கு இயலாது)
ஆதலால் துணியோடு தான் தகனம் செய்கிறோம் அதற்கு ப்ராயச்சித்தமாக
1.நக்ன ப்ரச்சாதன ஸ்ரார்த்தம்
பிறகு நித்யவிதியில் தடாக தீரம் அதாவது வெளியே ஊன்றும் கல்லில் திலோதகம் ததாமி என்று 75 தடவை எள்ளும் தீர்த்தமாக விடுகிறோம் அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்ரார்த்தம் ஏகோத்தர வ்ருத்தி என்று சொல்லுவோம்
முதல் நாள் மூன்று
இரண்டாம் நாள் நான்கு
மூன்றாம் நாள் ஐந்து
நான்காம் நாள் ஆறு
ஐந்தாம் நாள் ஏழு
ஆறாம் நாள் எட்டு
ஏழாம் நாள் ஒன்பது
எட்டாம் நாள் பத்து
ஒன்பதாம் நாள் பதினொன்று
பத்தாம் நாள் பன்னிரெண்டு
இதை கூட்டினால் எழுபத்தைந்து கணக்கு வரும் இந்த எழுபத்தைந்து ஸ்ரார்த்தம்
76.ஏகோத்தர வ்ருத்தி ஸ்ரார்த்தம்
பிறகு நவ ஸ்ரார்த்தம் ஆறு இது ஒற்றை படை நாட்கள் கணக்கு
முதல் நாள்
மூன்றாம் நாள்
ஐந்தாம் நாள்
ஏழாம் நாள்
ஒன்பதாம் நாள்
பதினோராம் நாள்
82.நவ ஸ்ரார்த்தம்
83.ஆத்ய மாசிகம் அதாவது ஏகா ஹோமம் என்று சொல்லுவார்கள்  இதை முதல் நாள் செய்ய வேண்டும் சாதம் வெடித்து
ஒரு ப்ராமணரை வரித்து  32 முறை மந்திரம் சொல்லி 32 உருண்டை சவத்தை கர்தா தொட்டு கொண்டு அந்த ப்ராமணர் கையில் கொடுக்க வேண்டும் அதை அவர் சாப்பிட வேண்டும் அவருக்கு தக்ஷிணையாக  நிறைய த்ரவ்யங்கள் அவர் குடும்ப ஸம்ரக்ஷணத்திற்காக கொடுத்து அவரை கானகத்தில் விட வேண்டும் அவர் சில நாட்கள்‌ கழித்து காலமாகி விடுவார் அதெல்லாம் இப்ப உள்ள சூழ்நிலையில் சரியாக  நடக்காது என்று மஹரிஷிகள் அப்போதே இப்படி செய்ய வேண்டாம் இதை அக்னியில் ஆவாஹனம் செய்து 32 ஆஹுதிகள் கொடுத்து பண்ணலாம் என்று இப்போது அப்படி தான் நடைமுறையில் செய்கிறோம்
என்ன தான் அக்னியில் ஆஹுதி கொடுத்தாலும் அது போறாது அதற்கு பின்னர்
84.ஆவ்ருத்த ஆத்ய மாசிகம்  பழக்கத்தில் (ஒத்த ப்ராமணர் சாப்பாடு)அதாவது ஒரு ப்ராமணரை வரித்து அவருக்கு வஸ்திரங்கள் சில தானங்கள் தக்ஷிணை கொடுத்து போஜனம் செய்கிறோம்.
பிறகு பஞ்சதச  மாசிகம் அதாவது ஸபிண்டீகரனம் ஒரு வருட காலம் கழித்து தான் செய்ய வேண்டும் அது வரை கர்தா எங்கும் செல்ல கூடாது நியமத்தோடு இருக்க வேண்டும் அதெல்லாம் நடைமுறையில் இயலாது ஆதலால் அந்த 12 மாதத்தை 12 நாட்களாக சுருக்கி ஸபிண்டீகரனம் செய்கிறோம் அதற்கு முன்னர் இந்த பஞ்சதசம் செய்ய வேண்டும்
27ம் நாள் ஊனமாஸிகம் முதல் ஊனாப்திக மாசிகம் வரை  இதை பஞ்சதசம் என்று சொல்லுகிறோம்
இதை அன்ன ரூபமாக 15 ப்ராமணர்களை  வரித்து வஸ்திரங்கள் கொடுத்து ஹோமம் பண்ணி போஜனம் செய்விக்க வேண்டும்
இல்லை எனில் 15 பேருக்கு ஆம ரூபமாக அரிசி வாழைக்காய் தக்ஷிணை கொடுத்து பண்ண வேண்டும்
இப்ப உள்ள சூழ்நிலையில் வெறும் ஹிரண்யமாக செய்கிறோம்
85. ஊனமாசிகம் 27ம் நாள் 86.  2வது மாசிகம்
87..ஊனமாசிகம் 45ம் நாள்
88.  3வது மாசிகம்
89..4வது மாசிகம்
90...5வது மாசிகம்
91..6வது மாசிகம்
92..ஊனமாசிகம்
93...7வது மாசிகம்
94...8வது மாசிகம்
95...9வது மாசிகம்
96...10வது மாசிகம்
97...11வது மாசிகம்
98..12வது மாசிகம்
99...ஊனாப்திக மாசிகம்
இதை முடிந்தால் தான் ஸபிண்டீகரனம் செய்ய அதிகாரம் உண்டு
100 வது ஸ்ரார்த்தம் ஸபிண்டீகரனம்
இந்த கர்மாவில் 100 ஸ்ரார்த்தம் கணக்கு முடிந்தது

No comments:

Post a Comment