. கீதாச்சார்யன் கீதைல 'என்னை சதா சிந்தனை பண்ணிண்டு இரு'. #சர்வ_தர்மான்_பரித்யஜ்ய' - 'எல்லா தர்மங்களையும் விட்டுட்டு என்னிடம் சரணாகதி அடைஞ்சுடு' அப்டிங்கறார் - "#தஸ்மாத்_ஸர்வேஷு_காலேஷு_மாம்_அநுஸ்மர". அப்போ அதுவே பழக்கமாகி அந்திமஸ் ஸ்மரணயும் தானாவே என்னை பத்தி இருக்கும்கறார்.
பெரியாழ்வார் அப்போதைக்கு இப்போதே சொல்லி வெச்சுட்டேன்னு பெருமாளண்ட சரணாகதி அடைஞ்சுட்டார்.
ராம சரம ஸ்லோகத்துல ஸ்ரீராமன் - 'தவாஸ்மி' - என்னோட திருவடிகள்ல ஒரே ஒரு தடவை ஒருத்தன் சரணாகதி பண்ணிட்டான்னா அவனை நான் எல்லாத்துலேர்ந்தும் காப்பாத்தறேன். இது நான் பண்ற சத்யம்' அப்டிங்கறார். ஒரே ஒரு தடவை 'ராமா. சரணாகதோஸ்மி' அப்படின்னு சொல்லிட்டாலே இவ்ளோ அனுக்கிரஹம்.
கிருஷ்ணன் சொன்னா மாதிரி எல்லா தர்மங்களையும் தியாகம் பண்ண முடியல. கர்மாவினால ஏற்படற மாயை நம்மளை படுத்தறது. எது சாஸ்வதம்னு உணர வெக்காம கண்ணை மறைக்கறது. அதனால பஞ்சேந்திரியங்கள் உண்டாக்கற சுக துக்கங்கள்ல மாட்டிண்டு ஒரே ஒரு தடவை கூட ராமான்னு சொல்லலை. அப்போ நம்மளுக்கு கதி மோக்ஷமே கிடையாதா? திரும்பத் திரும்ப இந்த நரகத்துல வந்து பொறந்து ஜராவ் (மூப்பு) வியாதின்னு அனுபவிச்சு உழண்டுன்டே இருக்கணுமா?
படைச்சவனுக்கு தெரியாதா நம்மளோட வேதனை. அதுவும் அவனோட சொத்தான ஆத்மாவை அபஹரணம் பண்ணிண்டு வந்திருக்கோம் நம்மளோட கர்மாக்களை இந்த ஒடம்புலே ஒக்காந்துண்டு கழிக்க. மேலே சொன்ன எதையுமே நம்மளால பண்ண முடிலேன்னாலும், நம்மள காப்பாத்தறதுன்னு சங்கல்பம் பண்ணிண்டவன் அவன்.
வராஹப் பெருமானை நாமெல்லாம் 'எனக்கு வீடு வாங்க சக்தி குடு. நிலம் நீச்சு வாங்க அனுக்கிரஹம் பண்ணுன்னு' கேக்கறோம். கோல வராஹ மூர்த்தியா அவன் நிலமகளை பேர்த்தெடுத்து மீட்டதனால் அவர்ட்ட வேண்டிண்டா நிலம் நீச்சு வீடு வாசல் கிடைக்கும்னு காம்யார்த்தமா அவரோட சந்நிதிக்கு போறோம். ஆனா வராஹப் பெருமான் பரம காருண்யம் உடையவர். கருணா மூர்த்தி. மோக்ஷம் அப்படிங்கற வீட்டை அனுக்கிரஹம் பண்றவர். செங்கல் சிமென்ட்டிலான வீடு இல்லை. வீடு பேறு. அவர் தாயாரண்ட நமக்காக பண்ற அனுக்கிரஹம் தான் அவரோட சரம சுலோகம்.
'பூமி தேவியே. இந்த அண்டம் என்னோட சரீரம். எனக்கு பிறப்பு இறப்பு கிடையாது. எவன் ஒருவன் 'நான் தான் எல்லாவற்றிற்கும் ஆதாரம், எல்லாவற்றையும் இயங்கச் செய்பவன் நானே, போற்றத்தகுந்தவன் நானே (#மாம்_ஏகம்_சரணம்_வ்ரஜ), எல்லா இடத்திலும் நிறைந்திருப்பவன் நானே (ந்ருஸிம்ஹன்), அருகிலேயே இருந்து ரக்ஷிப்பவன் நானே (ந்ருஸிம்ஹன்) என்பதனை உணர்ந்து ஸ்திரபுத்தியுடன் இருக்கற காலத்துலேயே நானே சரணாகதின்னு என்கிட்டே வர்றானோ, அவனோட அந்திம காலத்துலே அவன் மரக்கட்டை மாதிரி ஸ்மரணை இல்லாமல் இருக்கற நிலைமை ஏற்பட்டாலும் கூட, என்னைப் பற்றி அவனால ஸ்மரணை பண்ண முடியாத நெலைமைல இருந்தா கூட, நான் அவனை நெனைச்சுக்கறேன். அவன் காலம் முடிஞ்சப்பறம், அவனை அர்ச்சிரார்தி மார்க்கமா பரமபதத்திற்கு கூப்பிட்டுண்டு போய் அவனுக்கு நித்ய கைங்கர்யம் பண்ண அனுக்கிரஹம் பண்றேன்' அப்டிங்கறார்.
எவ்ளோ கருணை. எவ்ளோ காருண்யம். அவன் நம்மளை நெனைச்சுட்டான்னா அதை விட வேறென்ன வேணும். (#த்வயி_ரக்ஷதி_ரக்ஷகை_கிமண்யை_ஹி) நான் நெனைச்சுக்கறேன்னு சொல்றானே. வேறாரு இதை சொல்லுவா. அதுவும் தாயாருண்ட சத்யம் பண்றான் அந்த சத்ய சங்கல்பன்.
ந்ருஸிம்ஹனும் தூணிலும் துரும்பிலுமா தான் இருக்கோம்ங்கறதை நாமோ நம்பறோமான்னு பாக்கறான். நம்பிட்டோம்னா, நம்ம கூடயே இருக்கான். ப்ரஹ்லாதனுக்கும் அதையே தானே பண்ணினான். அவன் கிட்டே வந்துட்டான்னா பக்தாளோட எதிரிகளுக்கு அந்திம காலம் தான் ஹிரண்யனுக்கு ஏற்பட்டாற்போல. '#அடியானிவனென்று_எனக்காரருள்_செய்யும்' அப்டிங்கறார் ஆழ்வார். இதோ நானிருக்கேன்னு ந்ருஸிம்ஹனா ஓடி வர்றான் அந்த கருணாமூர்த்தி. #ந்ருஸிம்ஹா..... #ந்ருஸிம்ஹா...#இம்மைக்கும்_ஏழேழ்_பிறவிக்கும்_பற்றாகும்_ந்ருஸிம்ஹா... #சரணாகதோஸ்மி. #காப்பாத்து..
ஸ்ரீமதி பழவேரி ரமா ராகவசிம்ஹன்
No comments:
Post a Comment