Thursday, November 14, 2024

Yàanta paanta thyagaraja kriti meaning - Periyavaa

1970களில் திருவையாறு தியாகப்ரம்ம சபா கமிட்டித் தலைவர் பொறுப்பில் ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியார் இருந்தார்...

அப்போது ஸ்ரீ தியாகையர் சமாதியைச் சுற்றி வரும் பிரகார சுவற்றில் ஸ்ரீ தியாகையர் அவர்களின் கீர்த்தனைகள் யாவற்றையும்.... தமிழ் அர்த்தத்துடன் சலவைக் கற்களில் பதிந்து வைக்க தீர்மானித்து 90% பணிகள் முடிந்தும் விட்டது...

எம்பார் அவர்களுக்கு மிகப்பெரிய சங்கடம்... 10% வேலைகள் பாக்கி... சில கீர்த்தனங்களில்... *#யாந்த_பாந்த* என்ற வார்த்தை ப்ரயோகத்துக்கு அர்த்தம் தெரியவில்லை...

ஆந்திர கலாசாலை/ தெலுகு அறிஞர் பெருமக்கள் அகராதிகள் என எங்கு தேடியும் அந்தப் பதத்துக்கு பொருள் காண முடியவில்லை...

மகான்களின் வாக்கு.... மகான்களுக்கு புரியும்... என்பதில் நம்பிக்கை உடைய எம்பார்... ஒருநாள் காரில் காஞ்சிபுரம் புறப்பட்டார்... ஸ்ரீ பரமாசாரியா ஸ்வாமி சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் முன்பு நமஸ்ரித்தார்... பரஸ்பர மரியாதை/ குசலம் விசாரிப்புகள்...

எம்பார் விஜய ராகவாச்சாரிக்கு எப்படித் துவக்குவது என்று தெரியவில்லை...

திடீர் என்று ஸ்வாமி எம்பாரிடம், திருவையாறு தியாகராஜ ஸ்வாமி திருப்பணி விஷயமாக, 

*#யாரையாவது_பாத்தோமா* காரியத்தை முடித்தோமா என்று இருக்கணும்... இந்த ஆராதனை க்குள் வேலையை முடிச்சுடலா மோனோ?!

எம்பார்: அது விஷயமாகத்தான் ஒரு பிரச்சனை எடுத்துண்டு பெறியவா கிட்டே வந்து இருக்கேன்...

ஸ்வாமி:-

உனக்கு தெரியாததா... ப்ரவசன ரத்னத்துக்கே... சந்தேகமா?!  

*#யார் நம்புவா?!
*#பாந்தமா புரியறா மாதிரி சொல்லு... எனக்கு தெரிஞ்சா சொல்றேன்...

எம்பார்:÷ ஸ்வாமி... அடியேன்... தாசன்... நிஜமாகவே என் முயற்சி எல்லாம்... இந்த விஷயத்தில் தோல்வி... 

ஸ்வாமி:÷

ராகவா... கலியுகதில் நாம ஜெபம் மோக்ஷம் தரும் என்பது... வியாக்யான கர்த்தாக்கள் அபிப்பிராயம்... 

ஆனால்... திவ்ய நாம ஸங்கீர்தனம்... அதாவது இசை கலந்து நாமம் சொல்லவேண்டும்... அதைத்தான் பாகவதாள் குறிப்பாக மருதாநல்லூர் ஸ்வாமிகள் போன்றவர்கள் செய்து வருகிறார்கள்...

பக்தி வேதாந்த இயக்கம் 1966இல் அமெரிக்காவில் ஆரம்பிச்சி, அதில் ஸ்ரீ ப்ரபுபாதர் சொல்வது கூட சங்கீதமாக ஹரே /ஹரே என்ற prefix/suffix சேர்த்து இசை/ஸ்வரம் கூட்டித்தான் பகவான் நாமாக்கள் சொல்லி இருக்கா... தனியாக இல்லை...

ராம சிவ நாம ஜெபங்கள் கூட குரு முகமாகவே உபதேசிக்கப் படணும் என்று வழக்கம் இருக்கு...

நாரத மஹரிஷி கூட வால்மீகிக்கு ராம நாமத்தை நேரடியாக உபதேசிப்பதற்க்கு பதிலாகவே *#மரா_மரா* என்று உபதேசித்து இருக்கலாம் என்று தோன்றுகிறது...

தியாகராஜ ஸ்வாமிகள் காலத்தில் கூட ராமநாமா என்பது சூக்ஷ்ம மந்த்ர உபதேசமாகவே இருந்து இருக்கு... 

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதி என்கிறார் வள்ளலார் ஸ்வாமிகள்... ஆதி என்றால் ஆரம்பம்... அந்தம் என்றால் முடிவு...அதனாலே தான் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் ஸம்ஸ்க்ருத மொழியில் "ய" य என்ற அக்ஷரத்தின் அந்தமாக (முடிவாக) வரும் "ரா" रा என்ற அக்ஷரம்... ஸம்ஸ்க்ருத மொழியில் வரும் 4 ப வரிசை எழுத்துக்களின் प फ ब भा Pa Pha Ba Bha முடிவில் வரும் म ம என்ற எழுத்தையும் குறிக்கும் *#ராம* நாமத்தை மந்திரமாக வார்த்தையாக *#யா_அந்த_பா_ந்த* * #யாந்த பாந்த* என்று குறிப்பிட்டு உள்ளார் என்று நிறுத்திய மகா ஸ்வாமி...

இதைத்தான் நீ வந்த உடனேயே யாரையாவது பாத்தோமா காரியத்தை முடித்தோமா என்று நாசூக்கா சொன்னேன்... 

யார் நம்புவா
பாந்தமா புரியற மாதிரி சொல்லு என்று திரும்பவும் சொன்னேன்...

பெரியவர் சொல்லச் சொல்ல எம்பார் கண்களில் இருந்து ஆனந்தபாஷ்பம்...

மரா மரா மரா மரா...
யாந்த பாந்த....
ஹரே ராம ஹரே ராம ...
ராம ராம ஹரே ஹரே ...

No comments:

Post a Comment