*#இராமாயணத்தில்_இருந்து_கேட்கப்பட்ட_கேள்விகளுக்கு_பதில்கள்*
1.ஜனக மகாராஜனுடைய மந்திரியின் பெயர் என்ன?
*சதாநந்தர்*
2.லெட்சுமனன், பரதன். சத்ருக்னன் ஆகியோரின் மனிவியர் பெயர் என்ன?
*லெட்சுமணன் மனைவி ஊர்மிளா*
*பரதன் மனைவி மாண்டவி*
*சத்ருக்கனன் மனைவி ஸ்ருகீர்த்தி*
3.ராம சேது எனப்படும் கடல் பாலம் அமைத்த பெருமை யாரைச் சாரும்?
*நளன் நீலன் ஆகிய வானர சகோதரர்கள் *
4.சீதை எந்த நாட்டு இளவரசி? அந்த நாட்டின் தலை நகரம் எது?
*விதேஹ நாட்டின் இளவரசி
தலை நகரம் மிதிலை*
5.ராவணனுடைய தாய் தந்தையர் யார்?
*விஸ்ரவஸ் என்ற முனிவர் கைகசி என்ற அரக்கி*
6.ராவணனுடைய மந்திரிகள் பெயர் என்ன?
*மகோதரன் , மால்யவான்*
7.வாலி, சுக்ரீவர்களுடைய தந்தையின் பெயர் என்ன?
*ரிக்ஷராஜன்*
8.ராமாயணத்தில் சத்ருக்னனுக்கு எந்த இடத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது?
*மது என்ற அரக்கனின் மகனான லவணாசுரனைக் கொன்று அவனுடைய மதுராபுரியை ராமராஜ்யத்தில் சேர்த்தார் ராமன்.பிறகு அதற்கு அரசனாக சத்ருகனை பட்டம் சூட்டினார்*.
9.சீதையைக் கண்டு பிடிப்பதர்காக சுக்ரீவனிடம் நட்புகொள்ள வேண்டிய அவசியத்தை ராமனுக்கு சுட்டிக்காட்டியவன் யார்?
*கபந்தன் என்னும் அரக்கன்*
10.வாலி, சுக்ரீவர் மனைவியர் பெயர்கள் என்ன?
*வாலியின் மனைவி தாரா*
*சுக்ரீவர் மனைவி ருமா*
11.வாலி, அர்ஜுனன் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
*இருவருமே தேவேந்திரனின் அருளால் பிறந்தவர்கள்*
12. லெட்சுமணனிடம் ஒருதலைக் காதல்கொண்ட ஒரு பெண் சூர்ப்பநகை. மற்றொரு பெண் யார்? எங்கே நடந்தது?
*அயோமுகி என்னும் அரக்கி, மதங்க முனிவரின் ஆசிரமத்தில்*
13.தசரதர் ஏற்பாடு செய்த புத்ர காமேஷ்டி யாகத்தை முன்னின்று நடத்தி வைத்த முனிவர் யார்?
*ரிஷ்யஸ்ருங்கர்*
14.ராம,லெட்சுமண பரத சத்ருக்னர் பிறந்த நட்சத்திரங்கள் எவை?
*ராமன் புனர்வசு / புனர்பூசம் நட்சத்திரம்*
*லெட்சுமணன் ஆயில்யம் நட்சத்திரம்*
*பரதன் பூசம் நட்சத்திரம்*
*சத்ருக்கனன் ஆயில்யம் நட்சத்திரம்*
15. அவர்களுடைய லக்னங்கள் அல்லது ராசி என்ன?
*ராமன் கடக லக்னம்*,
*லெட்சுமணன் சிம்ம லக்னம்*,
*பரதன் மீன் லக்னம்*
*சத்ருக்கனன் சிம்ம லக்னம்*
16. ராமர் ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சம்?
*ஐந்து கிரகங்கள்*
17.ராமர் வாழ்வில் எண் 2, 7, 14 ஆகியன மறக்க முடியாதவை .ஏன்?
*இரண்டு வாரங்கள் மூலம் காட்டுக்கு அனுப்பப்பட்டார்*.
*ஏழு மரா மரங்களைத் துளைக்கும் போட்டியில் வெற்றி பெற்றவுடனேயே வானரசேனை உதவி கிடைத்தது*.
*பதினாங்கு ஆண்டு வனவாசம்*.
18.வால்மீகியின் கூற்றுப்படி தசரதனுக்கு ஒரு பெண் உண்டு. அவள் பெயர் என்ன?
*சாந்தி*
19.தண்டகாரண்யத்தில் ராமர் சந்தித்த அகத்திய முனிவரின் தம்பி பெயர் என்ன?
*சுதர்சனன்*
20.ஜடாயுவின் சகோதரர் பெயர் என்ன?
*சம்பாதி*
21.அனுமனின் தந்தை யார்?
*கேசரி*
22.ராவணன் எந்த ரிஷியின் வம்சத்தில் வந்தவன்?
*புலஸ்த்ய ரிஷி*
23. ரிஷ்யமுக பர்வதத்தில் வாலி நுழையமுடியாதபடி சாபம் இட்ட முனிவர் யார்?
*மதங்க முனிவர்*
24.கைகேயியின் தந்தை யார்?
*அஸ்வபதி*
25.ரிஷ்யஸ்ருங்கருக்கும் தசரதருக்கும் என்ன உறவு முறை?
*தசரதரின் மருமகன் ரிஷ்யஸ்ருங்கர்*
26.வசிஷ்டரின் மகனிடம் சீதாதேவி எல்லா நகையையும் கொடுத்துவிட்டு கானகம் சென்றாள். யார் அந்த மகன்/ முனிவர்?
*சுயஜ்னன்*
27.ராமர் கொடுத்த பாதுகைகளை பரதன் எங்கே வைத்து பூஜை செய்தான்?
*நந்திக்ராமம்*
28.ராமரிடம் காட்டும்படி அனுமனிடம் சீதை கொடுத்த நகை எது?
*சூடாமணி*
29.இந்திரஜித்தையும், கும்பகர்ணனையும் போரில் யார் கொன்றார்கள்?
*இந்திரஜித்தை லெட்சுமணனும்*
*கும்பகர்ணனை ராமர் கொன்றார்*
30.வாலியின் மகன் பெயர் என்ன?
*அங்கதன்*
*ஜெய் ஶ்ரீராம்! ஜெய் ஶ்ரீராம்!! ஜெய் ஶ்ரீராம் !!!*
ஸர்வம் ஸ்ரீராம மயம் 🙏
No comments:
Post a Comment