Tuesday, October 15, 2024

Maha Narayana Upanishad - Meaning in tamil part1

மஹா நாராயண உபநிஷத்
தைத்திரிய நாராயணவல்லீ
🧧🙏🧧🙏🧧🙏🧧🙏🧧🙏🧧🙏
தைத்திரீய ஆரண்யகத்தின் கடைசியில் அமைந்துள்ளது மஹா நாராயண உபநிஷதம்.  தொடக்கத்தில் பரமாத்மாவை பற்றியும், பின்னர் பரமாத்மாவை அடையும் வழியான ஸந்நியாஸமும் கூறப்பட்டுள்ளன.

மேலும் யஜ்ஞங்களில் கூறப்படும் மந்திரங்கள் பலவும், உபாசனை மந்திரங்களும் உள்ளதால் இதற்கு 'யாஞ்ஜிகீ உபநிஷதம்' என்று பெயர். பல இடங்களில் இருந்து தொகுக்கப்பட்டதாகத்தான் இது காணப்படுகிறது.  தொடர்ச்சியாக விஷயம் கூறப்படவில்லை.  ஆனால் ஆரம்பத்தில் உள்ள பரமாத்ம பிரகரணமும், முடிவில் உள்ள ஜ்ஞான சாதனமாகிய ஸந்யாஸ பிரகரணமும் இதை உபநிஷதங்களுடன் ஒன்று படுத்துகிறது.

உபநிஷதங்கள் வேதங்களின் ஶிரஸ் - தலையாயது என்று கூறப்படுகிறது. வேதங்களே எல்லா தர்மங்களின் மூலமாகும்.  உபநிஷதங்கள் அளவற்ற பலத்தை அனைவருக்கும் அளிக்கும் சுரங்கங்களாக இருக்கின்றன.  உலகம் முழுவதிற்கும்  பலம் அளிக்கக் கூடிய சக்தி அவற்றில் இருக்கின்றன.

* ஹரி: ஓம்*

ஶாந்தி பாட:

ௐ ஸ॒ஹ நா॑வவது । ஸ॒ஹ நௌ॑ பு⁴நக்து । ஸ॒ஹ வீ॒ர்யம்॑ கரவாவஹை ।
தே॒ஜ॒ஸ்விநா॒வதீ॑⁴தமஸ்து॒ மா வி॑த்³விஷா॒வஹை᳚ ।
ௐ ஶாந்தி॒: ஶாந்தி॒: ஶாந்தி॑: ॥

பொருள்:
ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் பகவான் காப்பாராக !  அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக ! நாம் இருவரும் ஈடுபாடு மிக்க ஆற்றலுடன் உழைப்போமாக ! கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும் ! எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக !

ௐம் ஶாந்தி॒: ஶாந்தி॒: ஶாந்தி॑:

ॐ स॒ह ना॑ववतु । स॒ह नौ॑ भुनक्तु । स॒ह वी॒र्यं॑ करवावहै । ते॒ज॒स्विना॒वधी॑त मस्तु॒ मा वि॑द्विषा॒वहै᳚ । ॐ शान्तिः॒ शान्तिः॒ शान्तिः॑ ॥

sa ha nav avatu saha nau bhunaktu saha viryam karavavahai tejasvi nav adhitam astu; ma vidvisavahai; aum, santih, santih, santih.

Meaning:

May He protect us both; may He nourish us both together; may we both become energetic by working together; may our study illumine (our minds); may there be no hatred between us. Aum, peace, peace, peace.

No comments:

Post a Comment