Wednesday, October 2, 2024

Andal naachiyar

*ஆண்டாள் நாச்சியார்!*

மானுடம் தழைக்க வந்த மண்மகள் ஆண்டாள் நாச்சியார்!

நதிமூலம், ரிஷிமூலத்திற்கு அப்பாற்பட்ட தெய்வப்பிறவி ஆண்டாள் நாச்சியார்!

பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் உள்ள உறவை, நட்பை, அன்பை, பாசத்தை, பண்பை தனது தேன்தமிழ் "திருப்பாவை" மூலம் எளிமையாக, இனிமையாக எடுத்துரைத்தவள் ஆண்டாள் நாச்சியார்!

"அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின்
இன் துணைவி மல்லி நாடாண்ட மடமயில்
மெல்லியலாள் ஆயர்குல வேந்தன் அகத்தாள்
தென்புதுவை வேயர்பயந்த விளக்கு!"

ஆண்டாள் யார்? 
"ஆயர்குலவேந்தன் அகத்தாள்" - *ஸ்ரீகிருஷ்ணன்!*

அவள் யார் புதல்வி?
"தென்புதுவை வேயர்பயந்த விளக்கு" - *பெரியாழ்வார்*!

பகவான் நம்மை ரக்ஷிக்காவிடில் அவனுக்கு பெருமையில்லை.
பகவானை நாம் சேவிக்காவிடில் நமக்கு பெருமையில்லை.
இதையே *ஜலமத்ஸ்ய ந்யாயம்* என்பர்!

தண்ணீரிலிருந்து எடுத்தால் மீன் மாண்டு போகும். தண்ணீரும் கெட்டுப் போகும்.
பகவானின் திருவடியை பற்றினால் தான் நமக்கும் வாழ்வு. தண்ணீர் போன்ற பரமாத்மாவிற்கும் மகிழ்ச்சி!
எனவே பகவானோடு அந்த சிந்தனையோடே சதா இருக்க வேண்டும் என்கிறாள் ஆண்டாள்! - *வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க*

பூமாதேவியின் புனரவதாரமான ஆண்டாளை நெஞ்சார வணங்க, அவளது பிரபந்தங்களை பக்தியுடன் அநுசந்திக்க, நம் அடிமனத்தின் கசடுகள் ஒழிந்து, நற்சிந்தனைகள் பெருகி, நீங்காத செல்வம் நிறைந்து வாழ்வீர்!
🙏🙏

No comments:

Post a Comment