Saturday, October 5, 2024

108 divya desam

*அது என்ன 108 திவ்ய தேசங்கள் ?*

ஒரு முறை பிரம்மா வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளிடம், ""வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீர் இருக்கிறீர்?'' என்று கேட்க, 

""ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச'' என்று வேதவாக்கியத்தின் மூலம் உணர்த்தினார். 

ஸதம் என்றால் நூறு. 
ஸப்த என்றால் ஏழு. ஆக பெருமாள் இருக்கும் இடங்கள் 107. 

பெருமாள் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்தை சேர்த்தால் 108. 

இந்த திவ்யதேசங்களை எல்லாம்ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். 

நாலு வரிகளில் 108 திவ்யதேசங்கள் : --

ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் 108 திவ்யதேசக் கணக்கை நான்கு வரிகளில் கீழ்காணும் பாடல் மூலம் தருகிறார்;

"ஈரிருபதாஞ்சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர் பதின்மூன்றாம் மலைநாடு; ஓரிரண்டாம் - சீர்நாடு
ஆரோடீரெட்டுத் தொண்டை; அவ்வட நாடாறிரண்டு
கூறு திருநாடொன்றாக் கொள்"

அதாவது,

சோழ நாட்டில் 40, பாண்டிய நாட்டில் 18, மலை நாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, வடநாட்டில் 12, திருநாடு (ஸ்ரீவைகுந்தம்) 1 ஆக மொத்தம் 108 திவ்யதேசங்கள் எனக் குறிப்பிடுகிறார்.

திவ்ய தேசங்களில் இறைவன் திருக்கோலம்

திவ்ய தேசங்களில் இறைவன் திருக்கோலம் கீழ்க்காணும் எண்ணிக்கையில் இருக்கின்றன.

1. கிடந்த திருக்கோலம் - 27 திவ்ய தேசங்கள்
2. இருந்த திருக்கோலம் - 21 திவ்ய தேசங்கள்
3. நின்ற திருக்கோலம் - 60 திவ்ய தேசங்கள்.

இறைவன் திருக்கோல திசைகள்

திவ்யதேசங்களில் இறைவன் திருக்கோலம் பார்க்கும் திசைகள் கீழ்க்காணும் எண்ணிக்கையில் இருக்கின்றன.

1. கிழக்கு திசை நோக்கி - 79 திவ்ய தேசங்கள்
2. மேற்கு திசை நோக்கி - 19 திவ்ய தேசங்கள்
3. வடக்கு திசை நோக்கி - 3 திவ்ய தேசங்கள்
4. தெற்கு திசை நோக்கி - 7 திவ்ய தேசங்கள்.

"" வைகுண்டத்தில் ஓடும் விரஜா நதியே காவிரி.

 வைகுண்டமே ஸ்ரீரங்கம்.
 வாசுதேவனே அரங்கன். 

பிரணவமே விமானம். விமானத்தின் நான்கு கலசங்களே வேதங்கள். உள்ளே பள்ளி கொண்டிருக்கும் அரங்கனே பிரணவத்தால் விவரிக்கப் படும் பரம்பொருள்'' என்றெல்லாம் ஆழ்வார்களால் பாடப்பெற்ற ஆலயங்களைத் திவ்யதேசங்கள் என்று புகழ்வர். திவ்யதேசங்கள் 108 என்கிறோம்.

No comments:

Post a Comment