Saturday, August 17, 2024

Live in the present - Buddha

*உன்னையே நீ உணர்ந்து கொள்:*

ஞான உபதேச பதிவு :  499

புத்தரை ஒருவர் கடுமையான  வார்த்தைகளில் திட்டினார் . புத்தரின் பிரதான சீடன் அவரை தாக்க முற்படும்போது, அதைத் தடுத்து, சீடனுக்கு இவ்வாறு உபதேசம் வழங்கினார்.  "என் மீது அவன் கவனம் கொண்டதால், என் மீது கோபம் கொண்டான், அவன் கோபம் கொண்டதினால் அதையே நான் அவனுக்குத்  திருப்பி தர வேண்டும் என்று அவசியமில்லை. நான் அதை ஏற்றுக் கொண்டு கடந்து செல்கிறேன். ஏனென்றால், நான் புத்தா. அவன் வேறொருவர். இருவருக்கும் வித்தியாசம் உள்ளது" என்று கூறி விட்டுச் சென்றார்.

இந்த உபதேசத்தை கேட்ட அந்த நபர் சிறிது நேரம் கழித்து புத்தரை தேடினர்.  இறுதியில் நதிக்கரையில் குளித்துவிட்டு கரை ஏறிய புத்தரை அவர் கண்டார். நான் உணர்ச்சிவசப்பட்டு தங்களை திட்டி விட்டேன், என்னை மன்னித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். 

ஆனால் புத்தா,  "இந்த நொடியில்  தவறு செய்யாத நீ , இறந்த காலத்தில் வாழ்ந்த அந்த மனிதன் செய்த தவறுக்காக , இந்த நிகழ்காலத்தில் நீ மன்னிப்பு கேட்பது சரியானது அல்ல" என்றார். 

இருப்பினும் அந்த நபர் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்ததால் புத்தர் இவ்வாறு கூறினார். 

"நான் நதியில் இறங்கிய போது என் உடலை தொட்டு தழுவிச் சென்ற அந்த நீரைக் கொண்டு வா உன்னை மன்னித்து விடுகிறேன்" என்றார்.

 இதனால்தான் ஞானத்தை அடைந்த புத்தர் உயர்ந்த நிலையில் இன்று இருக்கிறார். 

இந்த கணத்தில் மட்டும் வாழ வேண்டும் என்பதே புத்தரின் பிரதான உபதேசம். ஏனென்றால் , இறந்த கால நினைவுகளுடன்  நிகழ்காலத்தில் இருந்தால், நீ நிகழ்கால நினைவுகளை தொலைத்து விடுவாய் என்பதே மனித வாழ்வில் உன்னதமான மாற்ற முடியாத விதி.

பிரபஞ்சம் ஒவ்வொரு வினாடியும் ஏதோ ஒன்றை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அது அண்ட வெளிகளில் நிகழும் அற்புதமான புதிய நட்சத்திரங்களின் பிறப்பிலிருந்து, பழைய நட்சத்திரங்களின் அழிவுகள் வரை  இது தொடர் நிகழ்வுகளாக இருக்கின்றன. இதன் விளைவாகவே மனித சிந்தனைகள் ஒரு மணி நேரத்திற்கு 3,000 முதல் 5,000  முறை வந்து செல்கின்றன. 

பிரபஞ்ச விளைவு தத்துவத்தை அறிந்தவர்கள் ஞானத்தை அடைந்தவர்கள் என்று பொருள்.  ஞானத்தை அடைவதற்கு புற சூழல்களை தவிர்த்து, அக சூழல்களை எண்ணுதல் வேண்டும். உன் உடலின் இயக்கங்களை உன்னால் மாற்ற முடியாது.  

உன்  இதயம்  ஒருபோதும் துடிப்பை நிறுத்தாது.
மனித இதயம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 300 லிட்டர் ரத்தத்தை வெளியேற்றுகிறது. இது ஒரு நாளைக்கு சுமார் 7,200 லிட்டர் ஆகும்.

9000 நானோ மோட்டார்கள் கொடுக்கும் அழுத்தம் உடலில் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் தான் ரத்தம் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்கிறது.  

நீ உள்ளே செலுத்தக்கூடிய அனைத்து விதமான உணவுகளில் இருக்கக்கூடிய நஞ்சுகளை  கல்லீரல் சுத்தப்படுத்துகிறது.  

ஒரு மனிதன் ஒரு நாளுக்கு சுமார் 17,280 முதல் 28,800 முறை சுவாசிக்கிறார்.
ஒரு நொடியும் தாமதிக்காத உன்னுடைய நுரையீரல் உயிர் கற்றை உள்வாங்கி நீ இறந்து போகாமல் உயிர்ப்புடன் வைக்கிறது. 

72,000 நாடிப் புள்ளிகள் உன் உடலை இயக்கிகொண்டு இருக்கிறது. உனது உடலில் உள்ள மொத்த நரம்பு மண்டலங்களின் நீளம் 1,60,000 கிலோ மீட்டர் ஆகும்.

இப்படி உனக்குள் ஒவ்வொரு கணமும் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் நிகழக்கூடிய தன்மைகள் நிகழ்ந்து கொண்டே இருப்பதை நீ அறியாமல்,  ஒன்றுக்கும் பயன்படாத நினைவுகளால்,  அற்புதமான சிந்தனைகளை அலட்சியப் படுத்துகிறாய். 

எனவே புத்தர் கூறியதையே நானும் கூறுகிறேன். இந்த நொடியில் மட்டும் வாழ், இந்த நொடியில் கவனம் வை. இந்த நொடியில் அற்புதமாக உன்னையே நீ உணர்ந்து கொள்.



*வாழத் தான் வாழ்க்கை....*

Realize yourself.
Enlightenment Record : 499

Someone scolded the Buddha in harsh words. When the Buddha's chief disciple tried to attack him, he prevented it and gave the disciple thus instruction. He left saying, "Because he focused on me, he got angry with me, and because he got angry, I don't necessarily have to return the same to him. I accept that and pass on. Because I am a Buddha. He is someone else. There is a difference between the two."

After listening to this teaching, the person sought the Buddha after some time. At last he saw the Buddha who had bathed on the bank of the river and came ashore. I scolded them emotionally and asked them to forgive me.

But the Buddha said, "You who have done no wrong at this moment, it is not right for you to apologize in this present time for the wrong done by that man who lived in the past."

However, the man continued to insist, so the Buddha said this.

He said, "When I went down into the river, bring the water that touched my body and embraced me, and I will forgive you."

 This is why the Buddha who attained enlightenment is in a high state today.

Buddha's main teaching is to live only in the moment. Because if you live in the present with the memories of the dead, you will lose the memories of the present as the supreme immutable law of human life.

The universe is creating something every second. It is a series of events in the universe, from the birth of new stars to the destruction of old stars. As a result, human thoughts come and go 3,000 to 5,000 times an hour.

Those who know the philosophy of cosmic effect mean that they have attained enlightenment. Achieving wisdom requires ignoring the external environment and considering the internal environment. You cannot change the movements of your body.

Your heart never stops beating.
The human heart pumps about 300 liters of blood per hour. This is about 7,200 liters per day.

Blood flows from one end to the other due to the pressure exerted by the 9000 nano motors on the body.

The liver cleans out the impurities that may be present in all kinds of foods that you may ingest.

A human breathes about 17,280 to 28,800 times a day.
Without a moment's delay your lungs absorb the life beam and keep you alive without dying.

72,000 pulse points run your body. The total length of nervous systems in your body is 1,60,000 kilometers.

In this way, you ignore wonderful thoughts with useless memories, not knowing that every moment in you is happening in the entire universe.

So I am saying what the Buddha said. Just live in this moment, focus on this moment. Realize yourself wonderfully in this moment.


*Life Worth Lliving...*

No comments:

Post a Comment