Monday, April 1, 2024

3 qualities of a spiritul aspirant -HH Vidhusekhara bharati Mahaswamigal

#ஜகத்குரு #ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மஹாஸ்வாமிகள்
ஒரு ஆன்மீக ஆர்வலருக்கு மூன்று முக்கிய குணங்கள் பற்றி கூறுகிறார் :-
முதலாவது அஸ்திக்யம் :- வேதக் கோட்பாடுகளில் உறுதியான நம்பிக்கை. கடோபநிஷத் கூறுகிறது என்னவெனில், அஸ்திக்யம் இல்லாத ஒருவர், உலகில் பொருள் சார்ந்த சொத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். மற்ற உலகங்கள் இருப்பதை நம்பமாட்டார். ஆன்மீக நலனுக்கான வழிமுறையான சாம்பராய: - சாம்பராயத்தை அறியாமல் இருப்பார். மேலும் சம்சார சுழற்சியில் தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பார்.

ந ஸாம்பராய: ப்ரதிபாதி பாலம் ப்ரமாத்யந்தம் வித்தமோஹேந மூடம்
அயம் லோகோ நாஸ்தி பர இதி மாநீ புந: புநர்வஷமாபத்யதே மே॥
ஆன்மீகப் பாதையில் செல்லும் எவருக்கும் இன்றியமையாத இரண்டாவது குணம் வைராக்யம் அல்லது விரக்தி. ஒருமுறை ஒருவர் கேட்டார் "நான் எனக்கும் என் குடும்பத்திற்கும் மோட்சத்தைத் தேடுகிறேன்." இந்த அறிக்கையே வைராக்கியம் இல்லாததைக் குறிக்கிறது.

 மோக்ஷ மார்க் கத்தில் குறியாய் இருப்பவர்களுக்கு  வைராக்கியம் மிகவும் அவசியம். வைராக்யம் மற்றும் சாதனா சதுஷ்டயத்தின் மற்ற மூன்று அங்கங்கள்:-  (விவேகா, ஷமாதி,ஷட்கா முமுக்ஷுத்வம்) விடுதலைக்கான தீவிர ஏக்கம்.

மூன்றாவது குணம் என்னவென்றால், ஆத்ம ஞானத்தில்,
அதை அடைவதில்,  கவனம் செலுத்துவதை இழக்காமல், நமது கடமைகளுக்கு மத்தியில் நமது முயற்சிகளில் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்.எனவே நாம் நமக்கு கிடைத்த இந்த மனிதப் பிறவியை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஸ்ரீ #ஆதி சங்கராச்சாரிய பகவத்பாதர் கூறுகிறார், ஸ்ருதி மாதா ஞானம் விஷயங்களில் நமக்கு சொல்கிறது என்னவெனில், ஒரு தாய் தனது குழந்தையின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு
சொல்லும் அறிவுரை போன்றது ஆகும்.

No comments:

Post a Comment