Friday, November 17, 2023

Beejaksharam in Kanda sashti kavacham

சஷ்டி கவசத்தில் புதிரான ஒரு வரியில் அபூர்வமான ஒரு ஒரு ரகசிய மந்திரம் உண்டு..

கந்தசஷ்டி கவசம் பாடும்போது,  
 "ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும், உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும், கிலியும்சௌவும் கிளரொளி ஐயும் நிலைபெற்று என் முன் நித்தமும் ஒளிரும்" என்ற வரிகள் வருகின்றன. 

இதன் பொருள் பலருக்கும் தெரியவில்லை. 
"ஐயும்" (ஐம்), 
"கிலியும்" (க்லீம்) 
"சௌவும்" (ஸெளம்) ஆகியவை "பீஜாக்ஷரங்கள்"எனப்படும். 
இதை "பீஜம்+அட்சரம்" என பிரிப்பர்.

"பீஜம்" என்றால் "உயிர்ப்புள்ள விதை"'.

 "அட்சரம்"என்றால் "எழுத்து".

 "உயிர்ப்புள்ள எழுத்து விதைகள்" ஒன்று சேர்ந்தால் அது "மந்திரம்"ஆகிறது.

அந்த மந்திர விதைகள் நம் மனதில் தூவப்பட்டால் அது வளர்ந்து பக்தியின், சித்தியின், முக்தியின், ஞானத்தின் உச்சத்தை எட்ட முடியும். பக்தியின் உச்சத்துக்குச் செல்பவன் இறைவனின் காலடியை அடைவான். 

"ஐம், க்லீம் என்ற மந்திர எழுத்துக்களும், உயிர்களை எல்லாம் உய்விக்கும் ஒளிபொருந்திய "ஸெளம்" என்ற மந்திர எழுத்தும், எழுச்சி மிகுந்த ஒளிமயமான ஐயும்...

இப்படி பல்வேறு முறைகளில் ஓதப்பெறும் ஆறெழுத்து மந்திரத்தின்  (சரவணபவ, குமாராயநம)  மூலாதார எழுத்துக்குரிய நாத தத்துவமாய் விளங்கும் ஆறுமுகனே! என் மனக்கண் முன், தினமும் நிலையாக நின்று ஒளிர வேண்டும். என்பது இந்த  வரிகளின் பொருள். 

முருகனுக்குரிய  ஆறெழுத்து மந்திரமான  "சரவணபவ" உடன் 
           "ஓம் ஐம் சரவணபவாய நம",
           "ஓம் க்லீம் சிகாயை வஷட்",
           "ஓம் ஸெளம் சுப்ரமண்யாய நமஹ"
என்று மந்திரங்களைச் சேர்த்துச் சொல்லும்போது, அதன் சக்தி மிக மிக அதிகமாகிறது. ஆனால், இதை சாதாரணமாக சொல்வதை விட ஒரு குருவின் மூலம்  உபதேசம் பெற்று, முறையாக கற்று  சொன்னால் நினைக்க முடியாத சித்திகளை எல்லாம் முருக பெருமான் அருளினால் வரங்களாக பெறலாம்.

 இது சத்தியம்.  கந்தசஷ்டி கவசம் எழுதிய தேவராயசுவாமிகள், தனது பாடல் வரிகளில் இந்த மந்திரச் சொற்களைச் சேர்த்து விட்டார்.  

இந்த வரிகளைச் சொன்னால், நாம் நியமத்துடன் மேற்கண்ட மந்திரங்களைச் சொன்னதாக அர்த்தமாகிறது. நமது முக்திக்காக நம் மகான்கள் செய்த நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல!

மந்திரம் இதோ:-
-----------------------------

ஓம் ஐம் க்லீம் சௌம் சரவண பவாய குமார தேவாய நமஹ.

No comments:

Post a Comment