Friday, November 17, 2023

Anger and silence

*நீங்கள் உங்கள் பெற்றோரிடம் கையேந்தினால், அது புண்ணியம். உங்களின் பெற்றோர்கள் உங்களிடம் கையேந்தினால், அது பாவம்.*

*பாவத்தையும், புண்ணியத்தையும் சம்பாதிப்பது உங்கள் கையில் தான் உள்ளது.*

*ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை ஐம்புலன்களால் உணர்ந்து இறையிடம் ஒப்படைத்து வாழ்ந்தால், அந்த எண்ணம் நிறைவேறுவது உறுதி.*

*மனம் தூய்மையானதாக இருந்தால், எதைக் கண்டும் பயப்படத் தேவையிருக்காது. கவலைப்படுவதால் மனதின் ஆற்றலும், உயிரின் சக்தியும் வீணாகிறது. எதிலும் அளவறிந்து வாழப் பழகினால் சிக்கலுக்கு இடமிருக்காது.*

*உங்களை கோபப்படுத்துவது ஒருவரின் நோக்கமாக இருக்குமானால்... பதிலுக்கு கோபப்படாமல் இருந்து வெல்வது உங்கள் கொள்கையாகவே இருக்கட்டும்.*

*மனிதர்களை நீங்கள் நினைப்பது போல் எண்ணாதீர்கள். அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொண்டு நகருங்கள்.*

*எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும் ஆனால் நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து பிறரையும் வாழ வைக்கும்.*

*கோபத்தில் மௌனத்தை காக்கும் எவரும் தங்கள் வாழ்க்கையில் தோற்றதில்லை

No comments:

Post a Comment