Thursday, November 24, 2022

Story of pallaandu pallaandu

ஒரு சமயம் பாண்டிய மன்னன் வல்லப தேவன் இரவு, நகர் வலம் சென்றான். 
ஒரு வீட்டுத் திண்ணையில் முதியவர் ஒருவர் படுத்திருப்பதைக் கண்டான்.
 அவரருகே சென்று எழுப்பி, "பெரியவரே ,தாங்கள் யார்.?" என வினவினான்.
" நான் புனித கங்கையில் நீராடிவிட்டு, சேதுக்கரைக்குச் சென்றுகொண்டிருக்கிறேன்," என்றார் முதியவர்.
"ஓ...அப்படியா ? மிக்க மகிழ்ச்சி.ஆன்மிகப் பற்றுடைய தாங்கள் ஏதாவது ச்லோகம் சொன்னால் நன்றாக இருக்கும்," என்றான் மன்னன்.
முதியவர் சுலோகமும் சொல்லி அதற்கான பொருளையும் சொன்னார். "
 மழைக் காலமான ஆடி முதல் ஐப்பசி வரை இன்பமாய் வாழ ,மற்ற எட்டு மாதத்திலும்  உழைக்க வேண்டும். இரவுக்குத் தேவையானதை பகலிலும்,முதுமைக்குத் தேவையானதைஇளமையிலும் தேட வேண்டும். அதே போல அடுத்த பிறவிக்கு வேண்டியதைஇப்பிறவியிலேயே தேட வேண்டியது அவசியம்," என்றார் முதியவர் .
அவரை வணங்கி வழியனுப்பி வைத்த மன்னன். முதியவர் சொன்ன முதல் மூன்று விசயங்களை முடித்து விட்டேன். அடுத்த பிறவிக்கு வேண்டியதை இப்பிறவியிலேயே தேடுதல் என்றால் என்ன....!! என்று குழம்பியவாறே,அரண்மனைகுச் சென்றான். 
    மறுநாள் குலகுரு செல்வ நம்பியையும், பண்டிதப் பெருமக்கள் பலரையும் அழைத்து , இது குறித்து விசாரித்த போது யாரும், மன்னனின் சந்தேகத்தைப் போக்க இயலவில்லை.
   மன்னன் ஒரு மூங்கிலின் உச்சியில் ஒரு பொற்காசு முடிப்பைக்கட்டி ,அரண்மனை வாசலில்நடுமாறும்,மன்னனின் சந்தேகத்தை தெளிவுறச் செய்வோர்களுக்கு இந்தப் பொற்காசுகள் அடங்கிய முடிச்சு இலவசம் என்றும் அறிவிக்கச் செய்தான்.
   அன்றைய இரவில் ஸ்ரீவில்லிபுத்தூர் 
பெரியாழ்வார்  கனவில் பெருமாள் தோன்றி," பரம்பொருளைத் தொழுது அருளைப் பெறுதலே ,அடுத்த பிறவிக்கான தேவை," என்று சொல்லி மன்னன்  சந்தேகம் போக்கும்படி கூறி மறைந்தார்.
  பெரியாழ்வாரும்அதன்படியே அரண்மனையருகே வந்து ,வாசலில் மூங்கில் மரமருகே நின்றபடி, வல்லப தேவனை அழைத்து, " மன்னா,! நாராயணனே பரம்பொருள்,இப்பிறவியில் அவரை வணங்கி அருள் பெறுதலேஅடுத்தபிறவிக்கான தேடல்  ஆகும்,"என்று சொல்லி முடிக்கும் தறுவாயில் மூங்கில் மரம் வளைந்து ,தாழ்ந்து பொற்காசு முடிச்சை நீட்டியது. மன்னனும் ஆச்சரியமடைந்து பெரியாழ்வாரின் கருத்தை ஏற்றான்.
அதே நேரத்தில் கருட வாகனத்தில் பெருமாளும் காட்சியளித்தார். அப்போது தான் ஆழ்வாரும் பல்லாண்டு பல்லாண்டுஎனத்தொடங்கும் பாசுரம் பாடினார்.

No comments:

Post a Comment