Saturday, November 26, 2022

Dharmambika - Tyagarajar story

ஸ்ரீ சித்பராஸக்தி மஹிமை: 

ஸீதாபதே நாபை "நீ"க்கு அபிமானமுலேதா!!  ஆஹா!!  என்ன அருமையான சாஹித்யம்!! மனுஷன் அவர் ராமன் கிட்ட உருகியிருக்கார்!!  தன் பர்த்தாவை  மெச்சிக்கொண்டே  வாசல் தெளித்துக் கொண்டிருந்தாள் த்யாகராஜரின் தர்மபத்னி கமலா!!  என்ன இவ்ளோ நாழியாறது இந்நேரம் அவர் ராமனுக்கு ஸுப்ரபாதம் பாடியிருக்கனுமே!! சத்தத்தையே காணோம்!! 

கதைவை திறந்து க்ருஹத்தினுள்ளே வந்தவள் தன்னையும் மறந்து நின்றாள்!! ராமா.. ராமா..  ஆம் த்யாகய்யரின் குரல் தான் தூக்கத்தில் கூட ராமநாமம் தான்!! ஏந்நா பொழுது விடுஞ்சு இவ்ளோ நாழியாறது இன்னமும் ராமனுக்கு அபிஷேகம் பன்னலயா?! எழுந்திருங்கோ!! என்றருகில் செல்ல த்யாகய்யரின் தேகமோ நெருப்பாய் தகித்தது!!

ஏந்நா என்ன தேகம் இப்படி நெருப்பா கொதிக்கறதே!!  செய்வதறியாமல் த்யாகய்யரின் காலடியில் அமர்ந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள்!! கமலா..!! இது சாதாரண ஜ்வரம் தான்டீ!! சரியாயிடும்!! என் ராமன் என்ன அப்படி விட்டுருவானா!! 
த்யாகய்யர் சொல்ல கமலாவோ! நீங்க சும்மா இருங்கோ!!

 ஸதா ராமா ராமா னு அந்த அயோத்தி நாதன  நினைச்சுட்டு உங்க ஆரோக்யத்தை கவனிக்காம விட்டுடேள்!! இருங்கோ!! நான் வைத்யர் க்ருஹம் வரைக்கு போய் அவர அழைச்சுன்டு வந்தரேன்!! அதெல்லாம் ஒன்னும் வேணாம்டீ!!கமலா!!  நீங்க அமைதியா இருங்கோ!!உங்களுக்கு ஒன்னும் தெரியாது!! வைத்யர் க்ருஹத்திற்க்கு புறப்பட்டாள் கமலா!! 

வைத்யர் தூரதேசத்திற்க்கு போய் நாலுநாள் ஆறதே நோக்கு தெரியாதாடீ!! வைத்யரின் மனைவி சொல்லிக்கொண்டிருக்க கமலாவின் மனமோ த்யாக்ய்யரை நினைத்து பதறிக்கொண்டிருந்தது!! நான் என்ன செய்வேன்!! 

ராமச்சந்த்ரா..!!ப்ரபோ..!! ஐயாறு க்ஷேத்ரத்தில் ஜ்வலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ தர்மஸவர்த்தினியம்பிகா ஸன்னதியில் அபிஷேக மணி ஓலித்துக்கொண்டிருந்தது!! அம்பா தர்மா!!நீதான்டீ என் ஆத்துக்காரர காப்பாத்துனும்!! தர்மஸம்வர்த்தினியம்பிகையின் ஸன்னதியிலே அமர்ந்து கொண்டாள் கமலம்!! 
மாமீ..!! ஆத்துல இருக்கேளா..!! யாரோ ஒரு பெண் நிரம்ப அழகுடனும் ஆஜானுபாகுவாக குரல் கொடுத்துக்கொண்டிருந்தாள்!! 

க்ருஹத்திற்க்கு முன்னே ஸப்தம் கேட்க்க வாசல் வந்தாள் த்யாக்கய்யரின் மகள் ஸீதா!! யாரு!! மாமீ நீங்க!! என்ன வேணும்?! இது கமலா மாமீ க்ருஹம் தானே!? ஆமாம் இதோ உங்க அம்மா கொடுத்த மருந்து இது!!  ஆத்துல கொடுக்க சொன்னா!! உள்ளே வாங்கோ மாமீ!! வரவேற்றாள்!! ஸீதா!! 

 உங்க அம்மா எனக்கு பால்யதோழி!! ஏதச்சையா கோவில்ல பார்த்தேன்!! இந்த கஷாயத்தை கையில வைச்சுன்டு நின்னுட்டு இருந்தா!! அம்பாளுக்கு ஏதோ ப்ரார்த்தனையாம்!! அதான் இத ஆத்துல கொடுக்க சொன்னா!! அதான் வந்தேன்!! சிரித்துக்கொண்டே கஷாயத்தை த்யாக்கயருக்கு கொடுத்தாள் அந்த பெண்!! கஷாயத்தை குடிக்க குடிக்க தன்னையும் அறியாமல் தர்மா..தர்மா என புலம்பினார் த்யாக்கய்யர்!! 

என்னப்பா எப்பவும் ராமா ராமானு சொல்லுவேள்!! இப்போ தர்மா..தர்மா னு அம்பாள் பேர் சொல்றேளே!! அடீ!!கொழந்தே!!  "இரும்பு" வில்ல வைச்சுன்டு இருந்தா "பரந்தாமன்!!"  "கரும்பு" வில்ல வைச்சுன்டு இருந்தா "பரதேவதை!!" அவ்ளோ தான் இதிலென்ன பேதம்!!

த்யாக்கய்யரின் பேச்சு கொஞ்சம் விசித்ரமாக இருக்க புரிந்து கொண்டாள் ஸீதா!! எல்லாம் தர்மாம்பா பார்த்துப்போ!! சரி நான் வரட்டுமா!! என நின்றாள் அந்த பெண்!! என்ன மாமீ  பேசறேள்!!  எல்லாம் அம்மா பார்த்துப்போனு தான் அப்பா சொல்லுவார்!! நீங்கென்னமோ!!  தர்மாங்கிறீங்க?! 

அடீ!!அசடு!!  "கமலா" நோக்கு மட்டும் தான் மாதா!! அந்த "தர்மா" இந்த லோகத்துக்கே மாதா!! சரி நான் வரேன்!! நொடியில் கூறி மறைந்தாள்!! அந்த பெண்!! 
தர்மா!! என் ஆம்படையான கைவிட்டுடாதே!! எனக்கூறிக்கொண்டே க்ருஹத்திற்க்கு வர ஸுப்ரபாதம் பாடிக்கொண்டிருந்த த்யாகய்யரை பார்த்து ஆச்சர்யத்துடன் நின்றாள்!!  கமலம்!! என்னநா! உடம்பு சரியாடுத்தா!!எப்படி!!என்ன பன்னேள்!! சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருந்தாள்!! கமலா!! என்னடீ ஓளர்ற நீ தான் உன் தோழி கிட்ட கஷாயத்த கொடுத்து அனுப்பினயே மறந்துட்டயா?! என்ன சொல்றேள் நா!! அப்படி யாரையும் நா அனுப்பலயே!! 

அப்போ வந்தது?! நான்தான் வந்தேன் என்பதை போல ஆலய மணியை ஓலிக்க வைத்தாள் தர்மாம்பிகா!! அம்பா!! பரதேவதே!! கருணாஸாகரா!! நீயா வந்தே என கமலா ஆனந்த கண்ணீருடன் தேவீயை ஸன்னிதியை நோக்கி விரைய!! "கமலா" நோக்கு மட்டும் தான் "மாதா!!" ஆனா "தர்மா" இந்த லோகத்துக்கே "மாதா!!"   எனும் வார்த்தைகள் மட்டும் த்யாகய்யரின் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது!! 

"பஞ்சநதி தீர விஹாரனி அம்மா தர்மஸம்வர்தினி இம்மேதினி நீக்கு சரியொவரம்மா மாயம்மா!!"


ஜய ஜகதம்ப ஸிவே!!
ஜய ஜய காமாக்ஷி!!

No comments:

Post a Comment