ஜெய் ஸ்ரீ மன் நாராயணா.
🦶திருவடி🦶
திருவுக்கு பிடித்த திருவடி
திருவே பிடித்து விடும் அடி
அது திருமாலின் திருவடி.
பெரிய திருவடி ஏந்தும் அடி
திருமாலடியார்கள் அனுதினமும் தொழும் அடி
அது திருமாலின் திருவடி.
வேள்விக்கு சென்ற அடி
மூவுலகும் அளந்த திருவடி.
மாவலி சிரசுக்கு கிடைத்த அடி
அது திருமாலின் திருவடி.
காடுமேடுகள் கடந்து சென்ற அடி
அகலிகை சாபம் தீர்த்த அடி
கடல் நடுவே அணை கட்டிய அடி அதுவே
திருமாலின் திருவடி.
சகடாசூரனை உதைத்த அடி
காளியனின் சிரசில் நர்த்தனம் ஆடிய அடி
பாண்டவர்களுக்கு தூது சென்ற அடி அதுவே
திருமாலின் திருவடி.
திருவடிக்கு ஸேவை தந்த திருவடி
திவ்ய சூரிகள் துதித்த அடி
திவ்ய தேசங்களில் வீற்றிருக்கும் அடி
அதுவே திருமாலின் திருவடி. 🙏🙏🙇♂️🙇♂️
தாஸன் ஜோத்பூர் பாலாஜி
No comments:
Post a Comment