Sunday, January 16, 2022

do anna daanam on Pitru dinam

உங்கள் வாழ்க்கையும் உங்களுடைய அடுத்த ஏழு தலைமுறையை சேர்ந்த வம்சாவழியினரது வாழ்க்கையும் வளமாக அமைய!!!!(முழு விளக்கம்)

நம்முடைய முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசீர்வாதத்தை வாங்க முயற்சி செய்ய வேண்டும் .

அதற்கு 96 ஷண்ணவதி பிதுர்முக்தி நாட்களில் திதி நாட்களில் தர்ப்பணம் செய்ய வேண்டும்

தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில பித்ரு முக்தி ஸ்தலங்களை இங்கே பட்டியல் இட்டிருக்கிறோம்.

உங்களுக்கு அருகிலுள்ள எதிர்காலத்தில் பிதுர் முக்தி ஸ்தலங்களில் பின்வரும் நாட்களில் மனப்பூர்வமாக உங்கள் முன்னோர்களை எண்ணி தர்ப்பணம் செய்யவும்.

அதன் பிறகு அன்னதானம் செய்யவும்.

நிச்சயமாக கடன், நோய் ,எதிரி ,வம்பு,வழக்கு, மாந்திரீக பிரச்சனை ,குலதெய்வ சாபம், பித்ரு சாபம் அனைத்தும் தீர்ந்துவிடும்.


பித்ரு முக்தி ஸ்தலங்கள் என்று போற்றப்படும் ஊர்கள் சுமார் 88 நம்முடைய தமிழ்நாட்டில் உள்ளன.

ராமேஸ்வரம், 

திருச்செந்தூர், 

அக்கா மடம், 

தங்கச்சி மடம், 
தனுஷ்கோடி, 
கோடியக்கரை, 

ஆதி சேது,

 உத்தரகோசமங்கை ,

திருப்புல்லாணி கரை,
திருவெண்காடு ,   

சாயாவனம், 

ஸ்ரீவாஞ்சியம்,

 திருவிடைமருதூர் ,

திருவையாறு,

மயிலாடுதுறையில் இருந்து பன்னெண்டு கிலோ மீட்டர் தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கும் திருமங்கலம் அருள்மிகு பூலோக நாயகி சமேத பூலோக நாயகர் திருக்கோயில்,

ஆவுடையார் கோயில் அருகில் அமைந்திருக்கும் மீமிசல் மற்றும் திருப்புனவாசல்

மீமிசல் அருகில் உள்ள திரு தாண்ட தானம்,

கஞ்சனூர், 

திரை லோக்கி, 

கீழச் சூரிய மூலை,

பூவாளூர்,

சேஷம்பாடி, 

திருக்கருகாவூர் அருகில் உள்ள காவள்ளூர் முருகன் கோயில், 

மாயவரம் ரிஷபத்துறை,

மன்னார்குடியிலிருந்து முத்துப்பேட்டை செல்லும் வழியில் உள்ள உதயமார்த்தாண்டபுரம் ஸ்ரீ ஆதித்ய ஹிருதய பெருமாள் கோயில்,

மன்னார்குடியில் இருந்து மதுக்கூர் செல்லும் வழியில் உள்ள ஆவிக்கோட்டை,

மன்னார்குடி அருகே உள்ள திருராமேஸ்வரம் மற்றும் தீர்த்தாண்டாபுரம்

நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் திருப்பூண்டி அருகிலுள்ள காமேஸ்வரம்,

புதுக்கோட்டை அருகிலுள்ள பொன்பேத்தி,

திருவண்ணாமலை,

விருத்தாச்சலம்,

திருச்சி அருகிலுள்ள அன்பில்,

 ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபம்,

 கரூர் அருகிலுள்ள நெரூர்,

கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்லும் சாலையில் உள்ள மணஞ்சேரி,

கும்பகோணத்திலிருந்து ஆலங்குடி அருகில் அமைந்திருக்கும்
சேஷம்பாடி மற்றும் நரிக்குடி,

மயிலாடுதுறை அருகில் உள்ள ஆறு மொழி தேவன்,

அறந்தாங்கி அருகில் உள்ள திருக்கோளக்குடி, 

திருபுவனம்,

சென்னை அருகில் உள்ள காவேரிபாக்கம், 

காஞ்சிபுரம், 

திருக்கழுக்குன்றம்,

செங்கல்பட்டு அருகிலுள்ள திருக்கழுக்குன்றம்,

செங்கல்பட்டு நகரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்கூடல் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயில்,

தேனிமலை , 

காஞ்சாத்து மலை , 

கூத்தனூர் அருகில் உள்ள திலதைப்பதி,

இந்த ஊர்களில் ஏதாவது ஒரு ஊரில்( மட்டும்) ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு அன்றும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை அன்றும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் வரும் அமாவாசை தினத்தில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் வரும் தேய்பிறை சப்தமி ,தேய்பிறை அஷ்டமி ,தேய்பிறை நவமி மூன்று நாட்களிலும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

தை மாதம் வரும் தேய்பிறை சப்தமி, தேய்பிறை அஷ்டமி ,தேய்பிறை நவமி மூன்று நாட்களும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இதேபோல மாசி மாதம் பங்குனி மாதம் இரண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை சப்தமி ,தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை நவமி நாட்களில் கண்டிப்பாக பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இப்படி செய்து முடித்து விட்டால் அதன் பிறகு இந்தப் பிறவி முழுவதும் அனைத்து விதமான வளங்களும் நலங்களும் பெற்று மிகவும் சிறப்பான வாழ்க்கையை நிச்சயமாக அமையும் என்பது உறுதி.

சித்தர்களின் தலைவரும் தமிழ்மொழியின் தந்தையுமாகிய அகத்தியர் பரம்பரையில் உதித்த நம்முடைய சத்குரு ஸ்ரீ ல ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் அவர்கள் நமக்கு உபதேசம் செய்திருக்கும் வைரவ ரகசியம் இது!!!

No comments:

Post a Comment