Friday, January 14, 2022

Ramanujar & chellapillai

கரை காண முடியாத பெருமைகள் !!
செல்லப்பிள்ளை கைங்கர்யம்...
ஸ்ரீராமானுஜர் காஞ்சியில் வரதராஜனுக்கு சேவை செய்து கொண்டிருந்தார். பின்னர் அரங்கன் அவரை தனக்கு கைங்கர்யம் செய்ய அழைக்க , ஸ்ரீரங்கநாதருக்கு சேவை செய்து கொண்டு ஸ்ரீரங்கத்திலேயே இருந்தார். ராமானுஜர்க்கு பெருமாள் முன் தான் ' தாஸன் ' என்கிற மனோ பாவம் உண்டு. அவரே புருஷன் என்பதால் அவருக்கு ஸத்ரீ ஆகிறார். இதனால் இவர் காஞ்சியை பிறந்த ஊராக எண்ணினார்.. காந்தி வரதன் இவருக்கு ' தந்தை' .
ஒரு தகப்பன் காலாகாலத்தில் வரன் தேடி பெண்ணிற்கு கல்யாணம் செய்து கொடுப்பது போல், இவரை அரங்கனுக்கு சேவை செய்ய அனுப்பி விட்டார். இதனால் ராமானுஜருக்கு ஸ்ரீரங்கம் புகுந்த ஊராக மனோபாவம். கம்பீரமான ரங்கன் !!
கிருமி கண்ட சோழன் ஸ்ரீரங்கத்தை கலவர பூமியாக்கிய போது ராமானுஜர் அவ்வூர் விட்டு வெளியேறி, கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரம் என்ற மேல் கோட்டையில் வாசம் செய்தார்.. அங்கு இவருக்கு கைங்கர்யம் செய்ய செல்லப் பிள்ளையாக பெருமாள் கிடைத்தார் . 12 வருடங்கள் ஆகியதும் பெரிய பெருமாளுக்கு ராமானுஜர் மேல் கோட்டையிவேயே தங்கி விடுவார் என அஞ்சி அவரை உடனே திரும்பி வர சொல்லிவிட்டார்.
ராமானுஜருக்கு நிலை கொள்ள முடியாத நிலை. ஸ்ரீரங்கம் சென்றால் செல்லப் பிள்ளையை பிரிய வேண்டும். . அப்பொழுது தான் தாயாறாயிருந்து இருக்கும் உடையவருக்கு, ஒரு தாய் தன் பிள்ளையை விட்டு பிரிய வேண்டிய நிலையில், எத்தனை மனத் துயர் அடைவான் என்கிற அனுபவம் ஏற்பட்டதாம்.
தன் பிள்ளை வேலை நிமிதாதமாய் வெளியூர் போய்விடுகிறான்.. கணவனோ தான் இருக்கும் இடத்தை விட்டு நகர மறுக்கிறார். பிள்ளையை பார்க்கும் ஆவலில் ஒருவாரம் அவனுடன் சென்று தங்கினாள். ஒரு வாரம் ஆனவுடன் கணவரின் ஞாபகம் வர ஆரம்பித்தது. அவர் வேளா வேளைக்கு ஒழுங்காக சாப்பிட்டாரா, உடம்பு நன்றாக இருக்கிறதா என்றகவலையோடு பிள்ளையை பிரிய மனம் ம் இல்லாமல் தவித்தாள். பிறகு அவனுக்கு தேவையானவற்றை செய்து வைத்துவிட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.
இதே நிலையில் தான் இருந்தார் ராமானுஜர். செல்லப்பிள்ளை நாராயணனை 12 வருட காலம் ஆசையோடு வளர்ந்து வந்தார். பெரிய பெருமாள் கூப்பிட, அவருக்கு தன்னை விட்டால் யார் ஒழுங்காக பார்த்துக் கொள்வர் என மனைவி நினைப்பது போல் ராமானுஜர், மேல் கோட்டையில் பெரிய பெருமாளுக்குபூஜை, உத்ஸவம் அனைத்திற்கும் ஏற்பாடு செய்து, தன் செல்ல பிள்ளைக்கு எந்த வித குறையும் வந்து விடக் கூடாது என எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டு பிறப்படுகிறார்.
கிளம்பும்போது அங்கிருந்தவர்களை கண்ணீர் மல்க பார்து, தானே ஒர் தாயாகி,
' செல்லப்பிள்ளையை கிணற்றடி பிள்ளையைப் போல் பார்த்துக் கொள்ளவும் ' எனச் சொல்லி புறப்படுகிறார்.
கிணற்றருகில் துணி துவைத்துப் கோண்டிருந்தாலும், குளித்துக் கொண்டிருநாதாலும், பிள்ளை கிணற்றருகில் விளையாடிக் கொண்டிருந்தால் ஒரு தாய்க்கு கவனமெல்லாம் பிள்ளை மேல் இருப்பதுபோல்.. குழந்தையின் மீதே கண் வைத்து தன் வேலைகளை செய்வது போல , நீங்கள் எல்லோரும் தங்கள் தங்கள் காரியங்களை செய்து கொண்டிருந்தாலும் செல்லப் பிள்ளையை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்லி விட்டுச் சென்றார்.
எப்படி அவர்களிடம் சொல்லி விட்டுச் சென்றாறோ அதே போல் நம்மிடமும் சொல்லிக் சென்றார் என உணரும் போது நமக்கும் அர்ச்சா அவதாரத்தில் பக்தி வரும்.
பெருமாளிடம் என்ன வரம் வாங்கலாம் என்ற எண்ணத்தைவிட, நமக்காக இங்கேயே தங்கிவிட்டாரே, அவருக்காக என்ன செய்யலாம் என்ற எண்ணம் வரும்.. இதுவே பக்தி. நமக்காக வைகுண்டத்தை விட்ட ஸ்ரீரங்கநாதனாகவும், திருமலையப்பனாகவும் , வரதராஜனாகவும் , பத்ரி நாராயணாகவும் அவதாரம் தாங்கி சேவை செய்ய வாய்ப்பு தருகிறார் பக்தனுகாக.
நாம் செய்யும் சிறு சாதாரண சேவையையும் ஏற்பதற்கு அர்ச்சாவதாரத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்தால், ஒரு உண்மையான பக்தன் எப்படி சேவை செய்யாமல் இருக்க முடியும் ?
சக்ரவர்த்தியாக இருந்த அம்பரீஷன் , தன் மனைவி கோவிலை பெருக்க , அவர் பெருமாளுக்கு தீவட்டி பிடிப்பாராம்...
அவர் அரண்மனையில் 100 வேலையாட்கள் உண்டு. பின் அவரும், மனைவியும் எதற்கு கோவில் பணிவிடை செய்ய வேண்டும்? இதற்கு அவர் தந்த பதில் ' நான் இந்நாட்டின் சக்ரவர்த்தி. ஆனால் எம்பெருமான் அகில உலகத்திற்க்கெல்லாம் சக்ரவர்த்தி . நமக்காக தானே .. அர்ச்சா அவதாரத்தில் அவர் இருக்கும்போது சேவை செய்யாமல் எப்படி இருக்க முடியும் ? மேலும் என் வேலையாட்கள் இந்த சேவையை செய்தால் அதன் புண்ணியம் அவர்களுக்கெல்லாம் சென்று சேரும் ? நான் செய்தால் எனக்கு அது மோக்ஷத்திற்கும் வழி காட்டும் அல்லவா ' என்றாராம்.
நம் வீட்டில் இருக்கும் விக்ரஹம் நாம் எந்த அளவு சேவை செய்ய ஆசையாக இருக்கிறோம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்,. கோவிலில் அர்ச்ச அவதாரமாக இருக்கும் பெருமான் நாம் ஏற்றும் சிறு விளக்கையும், திருவடியில் சமர்பிக்கும்
. மாலையையும் பூரணமாக ஏற்றுக் கொண்டு அநுக்ரஹிக்கிறான்.
என்றாவது ஒருநாள் இவன் நமக்கு சேவை செய்வானா? அதன் பலனாக இவனுக்குமோக்ஷம் கொடுத்து விடலாமா என நமக்காக கோவிலிலும் வீட்டிலும் அர்ச்சா திருமேனியாக நாம் செய்யும் அபசாரங்களை பொறுத்துக் கொண்டு சேவை செய்வானா என காத்துக் கொண்டிருக்கிறார்.
பெருமாளின் சேவையே பக்தி, பெருமாளின் சேவையே மோக்ஷத்திற்கு வழி..
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்.

No comments:

Post a Comment