Tuesday, January 25, 2022

Metti vaibhavam of Thayaar

தாயாரின் மெட்டி வைபவம்
"மெட்டி " என்பது ஒரு அணிகலன். ஸுமங்கலிகளுக்கு இருக்கவேண்டிய
ஆறு மங்கலப் பொருள்களில் ஒன்று. அவற்றில் முதலாவது, மெட்டி.
திருமங்கை ஆழ்வாரின் திவ்ய சரிதத்தைப் பார்த்தோமானால், அவருக்கு அனுக்ரஹம் செய்ய சங்கல்பித்த பகவான், திருமணக்கோலத்தில் ஸேவை சாதித்து, நீலன் (திருமங்கை மன்னன் ), ஸ்ரீவைணவர்களின் ததீயாராதனச் செலவுக்காக, பகவானின் திருவாபரணங்களைக்கொள்ளையடிக்க (திருட) பகவானின் திருவடியில் இருந்த கால்விரல் மோதிரம் என்றும், கணையாழி என்றும், மெட்டி என்றும் சொல்லப்படுகிற திருவாபரணத்தைப்
பகவான் திருவடியிலிருந்து கையால் கழட்டமுடியாமல், தன் பற்களால் கடித்து இழுத்ததும் , ஆழ்வாருக்குப் பகவான் அஷ்டாக்ஷர மந்த்ரத்தை உபதேசித்ததும் ,வைணவர்களுக்கு மிகவும் தெரிந்த உள்ளத்தைக் கொள்ளை கொள்கிற நிகழ்ச்சி .
நாம் இப்போது அநுபவிக்கப் போவது, பிராட்டியின் "மெட்டி"
அமரகோசம் , பிராட்டியைப் பற்றிச் சொல்லும்போது,
"லக்ஷ்மி : பத்மாலயா பத்மா
கமலா ஸ்ரீ : ஹரிப்ரியா
இந்திரா லோகமாதா மா
நமா மங்கள தேவதா
பார்கவி லோகஜனனி
க்ஷீர ஸாகர கந்யா"
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகிறது. இவள் மங்கள தேவதை.
இந்த மங்கள தேவதை "மெட்டி"யை அணிந்து மெட்டியை அனுக்ரஹிக்கிறாள்
சோழதேசத்தில் ஆழ்வார் மங்களாசாசனம் செய்த சில திவ்ய தேசங்களில் உத்ஸவ மூர்த்தியான பிராட்டிக்கு, "மெட்டி " உள்ளது. இந்தமாதிரியான திவ்யதேசம் ஒன்றில், கைங்கர்யம் செய்யும் பாஞ்சராத்ர ஆகம அர்ச்சகர் ஒருவர் . உத்ஸவமூர்த்தியான தாயாருக்கு, அர்க்யம் , பாத்யம் சமர்ப்பிக்கும்போது
திருவடிகளில் " மெட்டியைத் " தரிசித்து உபசரிப்பார்.
ஒருசமயம், பாண்டிய தேசத்தில், அவருக்கு ஒரு திவ்யதேச கைங்கர்யம் கொஞ்சநாட்களுக்குக் கிடைத்தது.
திருமஞ்சன சமயம்—-பெருமாள், உபயநாச்சிமார்களை எழுந்தருளப்பண்ணினார்.
க்ரமேண பூர்வாங்க கர்மாக்களைச் செய்து, அர்க்யம் ,பாத்யம் சமர்ப்பிக்கும்போது ,
உபயநாச்சிமாரான தாயாரின் திருவடிகளில் , "மெட்டி " ஸேவை சாதிப்பதைக் கண்டு, ஆச்சர்யப்பட்டார். ஏனென்றால், இந்த திவ்யதேசத்தில் உத்ஸவத் மெட்டியை சேவித்தவர் , மயங்கி விட்டார்.
"மெட்டி தேவி"யின் திருவிளையாடல் இது.
பிராட்டியின் "மெட்டி"யைப்பற்றிப் பேசிக்கொண்டே இருப்பது, "வாக் யஜ்ஞம் "
மெட்டியின் திருவுருவைத் த்யாநிப்பது, சேவிப்பது, திருக்கல்யாண குணங்களைச் சொல்வது "கீர்த்தன யஜ்ஞம்". முமுக்ஷூக்கள் பிராட்டியை முன்னிட்டு, பகவானை சரணம் அடையும் முன்பாக, பிராட்டியின் திருவடி மெட்டியில் சரணாகதி செய்வது,
" சரணாகதி யஜ்ஞம் "
மங்களம் பகவான் விஷ்ணு :
மங்களம் மதுஸுதன :
மங்களம் புண்டரீகாக்ஷ :
மங்களா யதனோ ஹரி :
மங்களம் எங்கே இருக்கிறது ?
பகவான் விஷ்ணுவே மங்களம்.
பகவான் மதுஸுதனனே மங்களம்
பகவான் புண்டரீகாக்ஷனே மங்களம்
மங்களம் எங்கே ? ஹரியிடத்தில்
அந்த மங்களம் யார் ?
பெரிய பிராட்டியார்.
அந்தப் பெரிய பிராட்டியாருக்கு,
மங்களச் சின்னங்களில் ஒன்று 'மெட்டி "
இது, பரம மங்களம்.
உருப்பட்டூர் ஸௌந்தரராஜன் 
மங்களுக்கெல்லாம் மங்களமானவளே.. அவளுக்கு
 மாதுளங்கி என்ற பெயரும் உண்டு.
நலம் தரும் சொல் நாராயணா என்றால் மங்களம் தரும் சொல் மஹாலக்ஷ்மி ஆகும்.
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்.

No comments:

Post a Comment