Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
யாதவாப்யுதயம் - அத்தியாயம் 6
அத்தியாயம் 6
இந்த அத்தியாயம் சித்ரஸர்கம் எனப்படுகிறது. ஏனெனில் இதில் அனேக சித்ர ஸ்லோகங்கள் , அதாவது உதாரணமாக ஒன்று அல்லது இரண்டு எழுத்துகள் மட்டுமே கொண்ட ஸ்லோகங்கள்.
நந்தரும் மற்ற கோபர்களும் இந்திர பூஜைக்கு ஆயத்தம் செய்கையில் அதை தடுத்து கண்ணன் கூறினான்.
இது ஒரு ரசிக்கத்தக்க இடம். இதில் கண்ணன் ஒன்றும் அறியா பாலகன் போல் பேசுகிறான். அவன் கூறியதாவது,
"சிறியவனாகிய அடியேன் எல்லாம் தெரிந்தவன் போல் பெரியோர்களாகிய உங்களிடம்பேசினாலு ம் ஒரு கிளியின் பேச்சைப் போல் என் பேச்சை கேட்டருள வேண்டும். ( அதாவது அவன் கூறுவது ஏற்கெனவே பெரியோர்களால் கூறப்பட்டது என்று பொருள்.)
அதாவது, தான் பூஜிக்க வேண்டிய தேவதையை விட்டு இன்னொருவரை பூஜிப்பானாகில் அவன் இரு தேவதைகளாலும் கைவிடப்பெறுகிறான். பாபத்தையும் அடைகிறான் . மலைகள் மற்ற எல்லாமே பகவான் நாராயணனின் அம்சம். ஆகவே நமாக்கு மழையும் ஆவினங்களுக்கும் நமக்கும் தேவையான நீரும் காடும் நிறைந்த இந்த மலையையே பூஜிக்க வேண்டும். இவைகளைத் தருவது இந்த கோவர்தனமலையே அன்றி இந்திரன் அல்ல.
பஹுமதோ மனுஜா ததாதே த்ருதிம்
பஹுமதோ அபி அயம் அனன்ய த்ருதி: ஸதாம்
கிரிசதோ உன்னதிமான் அதிக: ஹ்யசௌ
கிரிச தோஷ க்ருதோ அபி மஹீப்ருத: (யாதவா.6.14)
இந்த மலை எல்லோருக்கும் சௌக்கியம் அளிப்பதுடன் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.நூறு மலைகளுக்கொப்பான இது பரமசிவனுக்கு உகந்த இமயமலையினும் சிறந்தது.
இந்த ஸ்லோகத்தில் யமகசதுஷ்டயம் , அதாவது முதல் வரியில் இரண்டு பதங்களும் அடுத்த வரியில் இரண்டு பதங்களும் வெவ்வேறு பொருளில் உள்ளன. பஹுமத =சௌக்கியம் அளிப்பது, கொண்டாடப்படுவது., கிரிசத உன்னதிமான்- நூறு மலைகளுக்கொப்பான,கிரிசதோஷ- கிரீசன் என்னும் சிவனுக்கு உகந்த )
கோவர்தனமலையின் சிறப்பைக் கூறும் சில ஸ்லோகங்கள் சித்ரச்லோகங்கள் எனப்படுவன.
1.ஏகக்ரியான்விதச்லோகவ்ரித்தி
ஒரே ச்லோகத்தில் பதம் பிரிப்பதனால் இரு அர்த்தங்கள்
அப்ராந்தமதிசய்யேஹா விராஜிததமாகமே
நிசாமயாலீனகனம் சாலௌகம் அதிநந்தனம் (யாதவா.6.77)
வேறுவிதமாக பதம் பிரிக்க,
அப்ராந்தமதி சய்யேஹ விராஜி ததமாகமே
நிசாமயாலீனகனம் சாலௌகம் அதிநந்தனம்
இதன் மேலோட்டமான பொருள்,மேகங்களின் எல்லையைக் கடந்து மிகவாகி நிற்கும் மரங்கள் நிறைந்த இம்மலையில் தம்முள் மேகங்கள் மறையவாய் மிக்க ஆனந்தமளிக்கும் ஆச்சா மரங்களின் தோப்பைக் காண்க, என்பதாகும். இதையே வேறுவிதமாகப் பிரித்துப பொருள் கூறினால் விரிவான் சம்பத்து உடையவரே, சுகமாக இருக்கும் பட்சிகளால் இலங்குகின்ற இம்மலையிலே பூக்களில் அண்டித் திரியும் வண்டுகள்பரவியுள்ள ஆனந்தமளிக்கும் மலையருவியை ஒன்றிய மனத்துடன் காண்க , என்பதாகும்.
2.த்வயாக்ஷரச்லோகங்கள்- இரண்டு எழுத்துக்கள் மட்டுமே கொண்டவை
சாருசாரீ ருசா ரோசீ ருருசாரைரசர்சரு:
சிரோச்ச்ரோசிரசரோ ருசிரோருசிராசர: (யாதவா. 6-78)
இதில் ச ர என்ற இரு எழுத்துக்கள் மட்டுமே காணப்படுகின்றன. இதேபோல 14 ஸ்லோகங்கள் உள்ளன.
3. ஏகாக்ஷரஸ்லோகங்கள்-
நாநா நாநா நாநா நாநா நாநா நாநா நாநா நாநா
நாநா நாநா நாநா நாநா நாநா நாநா நாநா நாநா (6.96)
இந்த ஸ்லோகத்திற்கு விருவுரையாளர்கள் நான்கு விதமாகப பொருள் கூறுகிறார்கள்.
இது போன்ற மற்ற ஸ்லோகங்கள் ,
நயாநயாநயாநயா நயாநயாநயாநயா
நயாநயாநயாநயா நயாநயாநயாநயா(6.98)
இதையே எழுத்தை மாற்றி ,
யானயான யானயான யானயான யானயான
யானயான யானயான யானயான யானயான
என்று படித்தால் சிறிது மாற்றிப் பொருள் கொள்ளலாம்.
இந்த வகை ஸ்லோகங்கள் அனுலோம ப்ரதிலோம வகையைச் சார்ந்தவை.
4. கடைசியாக ஸர்வதோ பத்ரம் எனப்படுபவையாகும். ஒவ்வொரு வார்த்தையும் திருப்பிப் போடப்பட்டுள்ளன.
மாயாபாஸா சாபாயாமா யாசூதாயா யாதாசூயா
பாதாயாயா யாயாதாபா ஸா யாயாகே கேயாயாஸா (6.99)
இந்த சித்ரஸ்ரகத்தின் முடிவில் தேசிகர் கூறுகிறார்,
இந்த மலையில் உள்ள ஆச்சரியங்களில்(சித்திரம்) சிலவே சொல்லப்பட்டன. மேலும் பதினாயிரக்கணக்கான சித்ரங்கள் உள்ளன . ஆயினும் பஹ்வானின் பூஜை ஒன்றே முக்கியசம் என்பதனால் அவை விடப்பட்டன.
இதன்மூலம் தேசிகர் தம் நிலயைக் கூறுகிறார். அதவது இவ்வாறு பல சித்ரா ஸ்லோகங்களைக் கூற முடியும் என்றாலும் முக்கிய நோக்கமாகிய பகவானின் சரித்திரத்தை உத்தேசித்து சில மட்டுமே கூறுவதாகச் சொல்கிறார்.
இந்தத் தருணம் கோபர்கள் மலையின் மேல் ஒரு திவ்ய உருவத்தைக் கண்டனர். அது கண்ணனின் பிரதிபிம்பம் போலவே தோன்றிற்று.
No comments:
Post a Comment