Thursday, September 30, 2021

Scar in Lord Vishnu

ஜெய் ஸ்ரீ மன் நாராயணா.
♥️தழும்பு♥️
நம் எல்லோருக்குமே தழும்பு என்றதுமே இதோ என் காலில் பட்டது கையில் பட்டது என்று எல்லோரிடமும் ஞாபகமாக அடிப்பட்ட நாள் கிழமை மாதம் வருடம் வரை சொல்லி விடுவோம்.ஒரு சிலருக்கு பிறவியிலேயே மச்சம் திட்டாக கருப்பாக அல்லது சிவப்பாக முகத்தில் முதுகில் கையில் தென்படும். ஆனால் இதோ என் ஆச்சார்யன் எனக்கு சங்கு சக்கரம் பொறித்த வடு தோள்பட்டையில் இருப்பதை காண்பிக்க மாட்டோம்.ஏறக்குறைய வருடத்தையும் மறந்து விடுவோம்.தனியன் கூட ,,,,,,,,,க்ஷமிக்க அதிகபிரசங்கி அடியேன்.🙏
தழும்புக்கு வருவோம்
பகவானின் திருமேனியிலும் தழும்புகள் இருக்கு என்பதை பொய்கை ஆழ்வார் முதல் திருவந்தாதி 23பாசுரத்தில் தெரிவிக்கிறார்.
பகவானின் வடிவாய் நின் வல மார்பில் மஹாலக்ஷ்மி இருக்கும் வடு, ப்ருகு முனிவர் கோப ஆவேசத்துடன் எட்டி உதைக்க பகவானின் மார்பகம் சிவந்து கன்னி போய் விட்டது அந்த வடு, நரசிம்ம அவதாரத்தில் ஹிரண்ய கசிபுவை இருகூறாக கிழித்த போது விரல்களில் வடு ஏற்பட்டது, ராமாவதாரத்தில் அம்புகள் போட்டு வைக்கும் அம்பராவை தோளிலே சுமந்த வடு.மற்றொரு தோளிலே வில்லை சுமக்க அந்த வடுவும். க்ருஷ்ணாவதாரத்தில் கண்ணன் சகடாசூரனை தன் பிஞ்சு காலால் எட்டி உதைக்க அவன் மாண்டு போனான்.எட்டி உதைத்த பிஞ்சு பாதம் சிவந்து விட்டது அந்த வடு இன்றுவரை இருக்கு.யசோதை உரலில் கண்ணனின் இடுப்பை கயிற்றில் கட்டிபோட்ட வடு இடுப்பில் இருக்க இந்த தழும்புகள் அனைத்தும் ஆழ்வாருக்கு அப்ராஹ்ருத திருமேனி உடைய பகவான் காட்டுகிறார்.மேலும் ப்ரத்யக்ஷமாக திரு அல்லி கேணியில் வீற்றிருக்கும் பார்த்தசாரதி பகவானின் திரு முகத்தில் குருக்ஷேத்திர யுத்தத்தில் பீஷ்மர் தொடுத்த அம்புகளை புஷ்பமாரியாக ஸ்வீகரித்துடன்.மேலும் காஞ்சி வரதராஜப் பெருமாளின் திருமுகம் அக்னி குண்டத்தில் இருந்து வந்த போது திருமுகத்தில் ஏற்பட்ட வடு இன்றும் சேவை ஆகிறது.மற்றும் ஊத்துக்காடு என்ற க்ஷேத்ரத்தில் காளிய நர்த்தனம் கண்ணன் திருவடிகளில் காளீயன் தன் கூறிய பற்களால் திருவடியை கொத்திய வடுக்கள் இன்றும் சேவை ஆகிறது.அவரை ஸேவிக்கும் போதே நம் மனம் நம்மை அறியாமலே வாடும்.இதோ பாசுரம் 👇தழும்பிருந்த சார்ங்கநாண் தோய்ந்த மங்கை* 
தழும்பிருந்த தாள் சகடம் சாடி*-தழும்பிருந்த பூங்கோதையாள்வெருவப் பொன்பெயரோன் மார்பிடந்த* வீங்கோத வண்ணர் விரல். 🙏🙏🙇‍♂️🙇‍♂️தாஸன் ஜோத்பூர் பாலாஜி.

No comments:

Post a Comment