______________________________________
*ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர*
*தெய்வத்தின் குரல்*
( *1873*) *24.07.2021*
_________________________
*நமஸ்காரத் தத்வம்*
________________________
*நமோ நம:*
👉பகுதி - *32*
________________________
*அபிவாதனம்*
- பகுதி - *6*
_________________________
*தெய்வத்தின் நாமத்திற்கு முன்பும் !*
_________________________
*துறவிக்கு அபிவாதனம் கூடாது*
_________________________
*ஸ்ரீமஹாபெரியவா*
*Volume 7*. *பக்கம்* *982*
****************************************
தெய்வத்தின் குரல் - ஏழாம் பகுதி*
*(*மஹா பெரியவா அருளுரை*)*
*தெய்வ விஷயம்*.
*நமஸ்காரத் தத்வம்*
(தற்போதய பகுதி)
*நமோ நம*: (32)
(தலைப்பு)
*அபிவாதனம்*
(நேற்றைய இந்த பாகத்தின் கடைசி உரைகள் மீண்டும் இன்றும்)
அந்த ப்ரதிவசனத்திற்கு 'ப்ரத்யபிவாதனம்' என்று பெயர்.அது சொல்லத் தெரியாதவனுக்கு நமஸ்காரம் பண்ணப்படாது என்றுகூடச் சொல்லியிருக்கிறது.நமஸ்காரம் பண்ணினவன் தெரிவித்துக் கொண்டபடி அவன் சர்மாவை (பெயரை) 'இன்ன பெயருள்ள சர்மா' என்று கூப்பிட்டு "தீர்க்காயுஷ்மான் பவ ஸெளம்ய!" என்று சொல்வதே அந்த ப்ரத்யபிவாதனம்.
ப்ரத்யபிவாதனம் சொல்லத் தெரியாதவனுக்கு நமஸ்காரம் கூடாது என்கிற மாதிரியே வேறே சில பேருக்கும் (கூடாதென்று) சொல்லியிருக்கிறது. எல்லாம் தெரிந்தவரானாலும் ஒரு பெரியவர் படுத்துக் கொண்டிருக்கும்போதும், ஜபம்-பூஜை பண்ணும்போதும், ஹோமம் பண்ணும்போதும், தலையில் எண்ணைய் வைத்துக் கொண்டு ஊறிக் கொண்டிருக்கிறபோதும், கையில் தீர்த்த பாத்ரம், புஷ்ப-அக்ஷதை, தர்ப்பை – ஸமித், நெய் முதலியவை வைத்துக் கொண்டிருக்கும் போதும், ஆஹார வஸ்துக்கள் வைத்துக் கொண்டிருக்கும் போதும், ஆஹாரம் பண்ணும்போதும், இன்னும் சில ஸந்தர்பங்களிலும் நமஸ்காரம் பண்ணப்படாது.
சில பேருக்கு நமஸ்காரம் பண்ணினாலும் அபிவாதனம் சொல்லக்கூடாது என்றும் தர்ம சாஸ்திரத்தில் விதிமுறை இருக்கிறது.'யதீன்', அதாவது எங்கள் மாதிரி ஸந்நியாஸிகளுக்கு, அபிவாதனம் சொல்லக்கூடாது.நமஸ்காரம் பண்ணணுமே தவிர 'அபிவாதயே' சொல்லப்படாது.'யதீன்' என்று சொல்லி முடிக்குமுன் இன்னும் நாலைந்து பேரையும் சொல்லியிருக்கிறது.
தேவான், நதீம், ஸபாம், வ்ருக்ஷாம், அக்னீனபி ததா யதீன்|
தண்டவத் ப்ரண்மேத் பூமெள நாபிவாதனம் ஆசரேத் ||
இங்கே சொல்லியிருக்கிறவர்களுக்கெல்லாம் கழி மாதிரி நிலம் தோய விழுந்து தண்டவத்தாக நமஸ்கரிக்கத் தான் வேண்டுமானாலும் அபிவாதனம் கூடாது.யாரார்?முதலில் தேவர்கள், அதனால்தான் கோவிலிலும் அகத்துப் பூஜையிலும் நமஸ்கரிக்கிறபோது 'அபிவாதயே' சொல்வதில்லை.அப்புறம் நதிகள், கங்கா பூஜை பண்ணுகிறோம்.ராமேச்வரத்தில் ஸமுத்ர பூஜை செய்கிறோம்.அங்கேயெல்லாம் அபிவாதனம் கூடாது.ஒரு ஸபை நடக்கிறது.அதிலே பல பெரியவர்களும் இருக்கிறார்கள்.தனிப்படக் கண்டால் அந்த ஒவ்வொருத்தருக்கும் அபிவாதனத்தோடேயே நமஸ்காரம் செய்யணும்.ஆனால் ஸபையாக அப்படிப் பல பேர் உள்பட ஜனங்கள் சேர்ந்திருக்கிறபோது, ஸபைக்கு நமஸ்காரம் உண்டாயினும், அபிவாதனம் சொல்லப்படாது.அச்வத்தம் மாதிரி வ்ருக்ஷங்களுக்கும் அபிவாதனமில்லாத நமஸ்காரம் மட்டுமே.அக்னிக்கும் அப்படியே தான்.
(சிரித்து) ஜாக்ரதையாக இப்போது ஒன்று சொல்கிறேன்: ஸ்த்ரீகளில் தாயார் தவிர மற்றவர்களுக்கு அபிவாதனம் இல்லாமலேதான் நமஸ்காரம். இதை முதலிலேயே சொல்லியிருந்தால் நவீன காலத்தில் ஸ்த்ரீ ஸமத்வம் சொல்கிறவர்களுக்குக் கோபம் வரும் என்பதால் தான் ஜாக்ரதைப்படுத்திக் கொண்டு, 'ஆனானப்பட்ட தேவர்கள், ஸந்நியாஸிகள், புண்ய தீர்த்தங்கள், வித்வத் ஸபைகள் ஆகியவற்றிக்குக் கூடத்தான் அபிவாதனம் இல்லை. அதனால் இங்கே உசத்தி-தாழ்த்தி காட்டிப் பாகுபடுத்தவில்லை. ஏதோ நமக்குத் தெரியாத, தெரிவிக்க முடியாத காரணத்துக்காகத்தான் இப்படி விதி இருக்கிறது' என்று காட்டுவதற்கு அநுகூலமாகச் சொல்லிக்கொண்டு போகிறேன்!
ஸ்த்ரீகளில் ஸ்தானத்தில் உயர்ந்த எல்லாருக்கும் நமஸ்காரம் பண்ணலாமானாலும் தாயாரொருத்திக்கே நமஸ்காரத்தோடு அபிவாதனமும் சொல்லுவது.சிஷ்டாசாரத்தில் இப்படித்தான் நடந்து வருகிறது.குருபத்னிக்கும், தாயார் காலமானபிறகு தமையன் பத்னிக்கும் தாயார் ஸ்தானமே கொடுப்பதும் சிஷ்ட ஸம்ப்ரதாயத்தில் வந்திருக்கிறது.
தன்னைவிட உயரத்தில் இருப்பவருக்கோ, கீழ் மட்டத்தில் இருப்பவருக்கோ (நமஸ்காரம் செய்யக்) கூடாது என்றும் இருக்கிறது.குருவைத் தவிர மற்றவர்களுக்கு இந்த விதி என்றும் இருக்கிறது. குருப்பட்டம் கட்டிக் கொண்டால் மற்றவர்களைவிட நிறைய நமஸ்காரத்தை வாங்கிக் கொண்டு கஷ்டப்பட்டுத்தான் ஆகணும் என்று வைத்திருக்கிறது!
*இனி இன்றைய தொடர்ச்சி*.........
நமஸ்காரம் பண்ணுபவனும் இப்படியிப்படி இருக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறது.நமஸ்கரிக்கப்படுபவனுக்குச் சொன்ன அதே வஸ்துக்களை இவனும் கையில் வைத்துக் கொண்டு நமஸ்கரிக்கக் கூடாது.புருஷர்களானால் மேலே வஸ்திரம் கூடாது.அதை இடுப்பில் கட்டிக்கொண்டே பண்ணணும்.திறந்த உடம்பாக என்பது முக்யம்.ஒளிவு மறைவு இல்லாமல் தன்னை அப்படியே ஒழித்துத் தருவதற்கு ஹ்ருதய பாகத்தை மூடாமல் காலில் விழுவது அடையாளம்.அதனால் சட்டை போட்டுக் கொண்டு (நமஸ்கரிப்பது) கூடாது.
நமஸ்காரம் பண்ணுபவன், வாங்கிக் கொள்பவன் இரண்டு பேரும் அசுத்தனாயிருக்கப்படாது.இந்தக் காலத்தில், ரொம்பவும் மடித் தப்பாக இருக்கப்படாது என்று 'லிபர'லாக அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.
வித்யை, அநுஷ்டானம், ஞானம் முதலிய ஏதோ ஒன்றில் தேர்ச்சியடைந்தவர்கள் ஸமவயஸானாலும், அல்லது வயஸில் சின்னவர்களானாலுங்கூட நமஸ்காரம்.மற்றவர் விஷயத்தில் மூன்று வயஸாவது பெரியவனாயிருப்பவருக்கே நமஸ்கரிக்கணும் என்று ஒரு அபிப்ராயம் இருக்கிறது. அப்படிப் பார்க்காமல், பொதுவாக நம்மைவிட வயஸில் கொஞ்சம் பெரியவராயிருப்பவரிலிருந்து ஆரம்பித்து எல்லோர் முன்னாலுமே உடம்பைக் கீழே போடுவது நல்லது; எளிமைப் பண்புக்கு உதவுவது. ஆவணியவிட்டத்தன்று முஹுர்த்த காலமே பெரியவனுக்கும் நமஸ்கரிப்பதாக சிஷ்டாசாரம்; அன்றைக்குத் தேடித் தேடிப் போய் நமஸ்கரிப்பார்கள்….
பாகம் முடிவு.
தெய்வத்தின் நாமத்திற்கு முன்பும்!
நமஸ்காரம் பண்ணுகிறவனின் நாமத்தைச் சொல்வதற்கு முன்னே அவன் செய்கிறது 'ப்ரநாமம்' – ப்ரணாமம் – என்று வேடிக்கையாகச் சொன்னேன். ஸகலமான பேரும் நமஸ்காரம் பண்ணுகிற ஸாக்ஷாத் பரமேச்வரனுக்கும் மஹாவிஷ்ணுவுக்குங்கூட அவர்களுடைய நாமத்துக்கு முன்னாடி நம்முடைய நமஸ்காரம் இருக்கிறது. எங்கே?
அவர்களுடைய மந்த்ரங்களான பஞ்சாக்ஷரீ அஷ்டாக்ஷரீகளில்தான். (சிவ பஞ்சாக்ஷரீயில்) முதலில் "நம:", அப்புறமே ஈச்வர நாமாவைச் சொல்லும் 'சிவாய". (நாராயண அஷ்டாக்ஷரீயில்) முதலில் "நமோ", அப்புறமே விஷ்ணு நாமாவைச் சொல்லும் "நாராயணாய".
நாங்கள் (துறவிகள்) நமஸ்காரத்தை நாராயணனுக்கே ஸமர்ப்பித்தாலும் பரமேச்வரனும் நமஸ்கார ப்ரியன் தான். 'அபிஷேகப்ரியன்' என்று பொதுவில் சிவனைச் சொல்வது. மஹா விஷ்ணுவை 'அலங்கார ப்ரியன்' என்பார்கள். (சிரித்து) சிவன் 'மடிப் பார்ப்பான்'! ஓயாமல் முழுகிக் கொண்டு! பெருமாள் ராஜாதிராஜனாக லோக பாலனம் பண்ணுவதால் கிரீட, குண்டல, வஸ்த்ர, பூஷணாதிகளால் ராஜ அலங்காரம் பண்ணிக் கொள்பவன்…. ஈச்வரன் நமஸ்கார ப்ரியனுந்தான் என்று சொல்லவந்தேன். 'ஸ்ரீருத்ரம்' என்று ப்ரஸித்தமாக வேதம் அவனை ஸ்துதிப்பதில் ஒரே 'நமோநம' மயமாகவே இருக்கும். அதற்கு 'நமகம்' என்றே ஒரு பெயர்….
பாகம் முடிவு.
துறவிக்கு அபிவாதனம் கூடாது
அபிவாதன ஸமாசாரத்தில் இருந்தோம். அதை நான் சொன்னதற்குக் காரணம் – எங்களுக்கு அபிவாதனம் சொல்லித்தான் நமஸ்காரம் பண்ணணும் என்பதாகவே இருக்கும் என்று யாராவது நினைத்தால், அதுதான் இல்லை என்று காட்ட வந்தேன். முன்னேயே காட்டியதைக் கொஞ்சம் 'ஆலாபனை' செய்கிறேன்: ஸந்நியாஸிக்கு நமஸ்காரம் பண்ணும்போது அபிவாதனம் சொல்லக்கூடாது என்று சாஸ்திரம் இருப்பதைச் சொன்னேன்.
அதற்கும் முன்னேயே சொன்னேன், ஸந்நியாஸி நிர்நமஸ்காரனும், நிராசீர்வாதக்காரனும் என்று. இவனுக்கு நமஸ்காரம் என்பதே ஜன ஸமுதாயத்தின் 'ஸெண்டிமென்'டை 'ரெஸ்பெக்ட்' பண்ணிப் போனால் போகிறதென்றுதான் 'அலவ்' பண்ணியிருக்கிறது என்றும் சொன்னேன்…சொன்னேனோ, சொல்லவில்லையோ? இப்போது சொல்கிறேன்.
தன்னை நமஸ்கரிக்கிறவன் யார், என்ன என்பதைப் பற்றி நினைக்காமல், ஒரே நினைப்பு ஆத்மாவைப் பற்றியதாகத்தான் ஸந்நியாஸி இருக்க வேண்டும் என்பதாலேயே இப்படி வைத்தது. தன்னை வந்தனை பண்ணுபவன்… நிந்தனை பண்ணுபவனுந்தான் – எவனானால் என்ன என்று உதாஸீனமாகவே இருக்க வேண்டியவன் ஸந்நியாஸி.
குரு பீடத்தில் இருக்கிற எங்களுக்கும் ஸந்நியாஸி வேஷம் இருப்பதால் (நமஸ்கரிப்பவர் அபிவாதன வாசகம் சொல்லக்கூடாதென்ற) அந்த 'ரூல்' இங்கேயும் அமல் செய்யப்படுகிறது.
தெரியாத்தனத்தால் எனக்குச் சில பேர் நமஸ்காரம் பண்ணினவிட்டு "அபிவாதயே" என்று ஆரம்பிப்பார்கள். உடனே, கூட இருப்பவர்கள், "கூடாது, கூடாது!" என்றுன் சத்தம் போட்டுக் கொண்டு தடுப்பார்கள். எனக்குச் சிரிப்பாக வரும். ஏனென்றால்: அந்த அபிவாதனத்தில் வருகிற நல்ல நல்ல விஷயங்கள் – ரிஷிகளின் பெயர், கோத்ரப் பெயர், ஸுத்ரப் பெயர், வேதப் பெயர் என்ற நல்ல விஷயங்களே – ஸந்நியாஸிக்கு அவச்யமில்லைதான் என்று சாஸ்திரத்தில் தடை போட்டிருக்கிறது. ரூலாக இருப்பதை infringe பண்ணினால் (மீறினால்) பாபம் என்று இங்கேயும் அமல் படுத்துகிறோம்… ஸரி! ஆனால், நான் என்ன பண்ணுகிறேன் என்றால், அந்த அபிவாதனத்தில் சொல்லப்படும் நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டு, நமஸ்காரம் பண்ணுபவர்களைப் பற்றிய ஊர் அக்கப் போர் அத்தனையும் விசாரித்துத் தெரிந்து கொள்கிறேன்! ரிஷி ப்ரவரம் வேண்டாம் என்று விட்டு விட்டு, நமஸ்காரக்காரனின் மாமா யார், தாத்தா யார், அடுத்தாத்துக்காரன் யார், ஆஃபீஸர் யார், எப்பவோ அவன் பார்த்த வேலை என்ன, இருந்த ஊர் என்னென்ன என்று ஜாடா விசாரித்துத் தெரிந்து கொள்கிறேன்! அவர்கள் ரிஷி உறவு, வேத உறவு சொல்வதையெல்லாம் 'வேண்டாம்' என்று வைத்துவிட்டு, யாரையாவது ஒருத்தரைச் சொல்லி அவருக்கு எத்தனையோ சுற்றி வளைத்து இவனுக்கு உள்ள உறவை நானாகவே வேறே சொல்லி, அப்படித்தானா என்று நிச்சயப்படுத்திக் கொள்கிறேன். ஞான த்ருஷ்டி, அபார ஞாபக சக்தி, அது, இது என்று ஸ்தோத்ரமும் ஸம்பாதித்துக் கொள்கிறேனே!
Formal-ஆகக் கேட்டுக் கொள்ளாத, கோத்ர-ஸுத்ராதி அபிவாதன ஸமாசாரங்களையும் informal-ஆகக் கேட்டுத் தெரிந்து கொள்ளத்தான் செய்கிறேன்.
*மேலும் நாளையும் தொடரும்*.......
*மஹா பெரியவா திருவடிகள் சரணம்*
**********************************
*"Deivathin Kural*-Part-7*
*Maha Periyava's Discourses*
Note: We have now got the essence of this subject for our english readers.*A perfect rendition courtesey by Lt. Col KTSV Sarma in advaitham.blogspot*. Our thanks.
*Deiva Sãkshi* – *Divine Witness*
*NAMASKARA THATHUVAM*
(Current Section)
*Namo Nama*'
(Current Topic)
"Abhivãdanam*
(Yesterday's few paragraphs repeated once again today)
122. The correct response for Abhivãdanam is known as 'Pratyabhivãdanam'. It is said that Namaskãram is not to be done and Abhivãdanam is not to be conveyed to such a person who does not know as to how to correctly respond with 'Pratyabhivãdanam'. The one receiving the Namaskãra is supposed to respond with, calling the name as announced and say, "Deerga ãyushmãn bhava, sowmya" – ''दीर्ग आयुष्मान भव सौम्य!" Like the embargo not to do Namaskãra to someone who does not know as to how to respond with formal Pratyabhivãdanam, there are some other restrictions. Even if knowledgeable of all systems and procedures, when an elder is lying down, or is in the process of doing Pooja, Japa or Homa, when he has applied oil to his head preparatory to having a bath, or when he is having such preparatory materials such as Teerta Pãtram, flowers, Akshata, darba grass and Samit (for an intended Karma) or when he is about to have food and on certain other occasions; we are not to do Namaskãra to him and say Abhivãdanam.
123. Then again there are some taboos about whom this formal announcement of Abhivãdanam is not to be done, like to people who are 'Yateen', that is Sanyãsis like us. Before finishing with Yateen there are some names listed to whom the Abhivãdanam is not to be made to: -
devãn, nadeem, sabhãm, vrukshãm, agneen api tathã yateen |
*देवान, नदीं, सभां, वृक्षं, अग्नीन् अपि तथा यतीन्* |
dandavat praNamet bhoomow nãbhivãdanam ãcharet ||
*दण्डवत् प्रनामेत भूमौ नाsभिवादनं आचरेत्* ||
For all these listed here, we are to fall flat on the ground like a pole and do Namaskãra and are not to say the Abhivãdanam of self-introduction. Who are they? They are first, the Devas, the Gods. That is why at home after a Pooja and in the temples we are not broad-casting information on our antecedents. Then the rivers, which can be and should be respected but, no Abhivãdanam please! We do Ganga Pooja in Prayag and Samudra Pooja at Rameswaram. During those occasions we are not to say the Abhivãdanam. Say there is big assembly of learned Masters. If you meet any of them separately, we should be doing Namaskãra followed by Abhivãdanam individually to each one of them. But when meeting them together as a Sabha though we have to do a Namaskãra to the Sabha collectively, no Abhivãdanam need be said here. So also, we are to do Namaskãram to trees like the Banyan or Pipal / Bodhi / Fig Religiosa aka Holy Fig, without Abhivãdanam and to the sacred Agni or fire of a Yagna Kundam.
124. Now let me carefully tell you that, for elder women other than your mother, we are supposed to do Namaskãra without Abhivãdanam. Had I said so earlier, in these days of demand for equal rights of women all over the world, people would have been ready to pick up cudgels at once. But now, since I have said that, we are not to make the Abhivãdanam statement to Devatas, Sanyãsis, Sacred Waters of Rivers and Oceans, Learned Assemblages of Sabhas and ladies other than one's own mother; it is emphasized that there is no partiality than for some unknown reasons, there is a rule like that, for which there may not be any objections, please!
125. Though for ladies who are elders we are to do Namaskãram, Abhivãdanam is done only to one's mother. That is how it has been going on in tradition. (May be the Mother will know and check as to whether the boy is correctly remembering the words or not. Anyhow, that is how it has been going on.) Guru Patni and after mother's demise, the elder brother's wife are given the same respect as shown to one's mother. Then there is a rule that we are not to do Namaskãram to anybody who is at a height or at a lower ground, may be for the obvious reason that one, he may not notice and two, you may fall down, doing a Namaskãr to someone on a lower ground. Of course, if you have taken the title as a Guru, you have to suffer in silence, receiving more Namaskãram-s than others that you cannot help!
*Continuing further from here*..........
126. There are rules galore to be followed by the one doing Namaskãra. He should not be having in his hands what the person being respected is having. Menfolk should not be wearing the Anga Vastram or shirt. He should tie it around the hips. Bare body is important as he is surrendering without hiding anything, especially with an open heart. Both the one doing it and the one receiving Namaskãram, should not be unclean. You cannot be doing your ablutions or munching something or spitting out while doing Namaskãram. The person who is highly qualified in Vidya or Anushtãna or Gnãnam, should be respected by our doing Namaskãra, even if he is younger in age. There is one view that to do Namaskãra the other should be at least three years elder. I am of the opinion that, instead of being too finicky about it, starting from someone who looks slightly elder, it is good to lay this body down on the ground in an expression of humility, abidance and respect, aiding one's own sense of PaNivu. On the yearly day of AvaNi-Avittam even a person elder to us by one period of Muhurtam is searched for and given homage to by way of Namaskãra.
*Chapter ends*
Our Namaskãra Precedes the God's Names!
127. Before telling his own name through Abhivãdanam, what he does is 'PraNãma' (a synonym of Namaskãra), punning on the word as it sounds like 'Pre-Name'. But in fact our Namaskãra is preceding even the names of Easwara and NãrãyaNa as in Panjãkshari and Ashtãkshari Mantras, as we say, 'Om Nama: Sivãya' – 'ॐ नम: शिवाय' and 'Om Namo NãrãyaNãya' – 'ॐ नमो नारायाणाय'! Thus in both the Mantras our Namaskãram is placed ahead of their names. Though we Sanyãsis pass on your Namaskãra to NãrãyaNa, Parameswara is also fond of Namaskãra. Generally Siva is considered as being very fond of continuously bathing and so is called as 'Abhisheka Priya' – 'अभिषेक प्रिय' and Maha Vishnu is said to be fond of decorating himself and so is known as 'Alankãra Priya' – 'अलङ्कार प्रिय'. Siva is said to be ever fond of bathing as Ganges River is pouring down from his locks on his head. Maha Vishnu as the Emperor of all the worlds, as the King of all Kings, is wearing his ear rings, necklaces, silken clothes, golden ornaments inlaid with any number of the nine-gems known as Nava Ratna, in every part of the body in the fingers, hands, hips, biceps, anklets in the legs and so on. Easwara is also fond of Namaskãra, as the famous 'Sri Rudram' is so full of obeisance-s with repeated 'Nama', that it is also known as 'Namakam'!
*Chapter ends*
No Abhivãdanam to a Sanyãsi
128. We were discussing the matter of Abhivãdanam. I mentioned about the fact that, we Sanyãsis are neither supposed to receive the Namaskãra-s nor are we supposed to give Asirvadam-s. So as to remove any doubt that people may have on the subject, I wish to tell you that there is no question of your having to do Abhivãdanam before us. Let me further elaborate the issue. For a Sanyãsi, just so as to accommodate the societies' need to express their respects, this Namaskãra has been allowed, as I said earlier. Whether I said so earlier or not, I am now saying so! Sanyãsi is not supposed to even see as to who is doing Namaskãra to him and getting to know the details about that person, as his mind and entire attention is to be about Ãtma. For him the one respecting him (doing 'vandanam' – 'वन्दनम् ') and disrespecting him (doing 'nindanam' – 'निन्दनम्') are one and the same!
129. For us in Guru Peetam since we are also Sanyãsis, the rule that the one doing Namaskãrãs to us also are not to say the Abhivãdanam is applied. Not knowing this some people will get up after doing Namaskãram and start with an 'Abhivãdaye' and at once others nearby will start shouting, "No, that is not to be said here" and try to stop him. That would cause me to laugh because, the good things in it such as the name of the Gothram, names of the ancient Rishis and the name of the particular branch of the Vedas, are not required to be told to a Sanyãsi as per rules! Here too we publicise that to infringe those rules is sinful. It is alright, let it be so. But what I do is, setting aside those important things in Abhivãdanam, I enquire and get to know, the name of the person doing Namaskãra, his place of origin, the place where he is presently stationed, his father's name, Grand-father's name, his next door neighbour's name and information about his wife, children and so on. Leaving aside the information as in Abhivãdanam of relationship to the Vedas and branches of it, I go in to many of the peripheral information by probing questions, adding some knowledge of my own to ascertain to myself the man's antecedents and present interests. In the bargain I gain some name for myself and some kudos on being very insightful and having excellent memory since I make it a point to remember every detail of whosoever talks to me! There are some followers of the Matam who give me a comprehensive report of everything that happened in their lives since the last time we had met!
130. What I do not get to know formally, informally I do get to know so much more. What to do?
*To be continued*...........
*Maha Periyava thiruvadigal Saranam*.
*************************************
No comments:
Post a Comment