எங்ஙனும் நாமிவர் வண்ண மெண்ணில்
ஏது மறிகிலம் ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறைவுமெல்லாம்
தம் மனவாகப் புகுந்து, தாமும்
பொங்கு கருங்கடல் பூவைகாயாப்
போதவிழ் நீலம் புனைந்த மேகம்
அங்ஙனம் போன்றிவ ரார்கொலென்ன
அட்ட புகரத் தேனென்றாரே
பெரிய திருமொழி – 2 1123
பொருள் ; இவருடைய குணங்களை நாம் எப்படி அறிய முற்பட்டாலும் அறிய இயலவில்லை. பெண்களின் வளையல்களையும், நெஞ்சத்தையும், அடக்கத்தையும் தம்முடையவனாக ஆக்கிக் கொண்டு இவ்விடம் வந்து சேர்ந்து கரிய கடல் பூவைப்பூ, காயாம்பூ, கருநெய்தல், அழகிய மேகம் ஆகியவற்றைப் போல் இருக்கும் இவரை அட்டபுயகரத்தேன் என்றார்.
அட்டபுயகரம் - காஞ்சீபுரம்
மூலவர் – ஆதி கேசவப் பெருமாள் , கஜேந்தர வரதன், மேற்குத் திருமுக மண்டலம். நின்ற திருக்கோலம்
தாயார் – பத்மாஸனி, அலர்மேல் மங்கை
தீர்த்தம் – கஜேந்த்ர புஷ்கரிணி
விமானம்- கக நாக்ருதி , சக்ராக்ருதி விமானம்
பெருமான் எட்டு புஜங்களுடன் சக்ரம், கத்தி, புஷபம், அம்பு ஆகியவை வலப் புறமும், சங்கம், வில், கேடயம், கதை ஆகியவை இடது புறமும் ஏந்திய வண்னம் அச்சரியமாக சேவை சாதிக்கிறார். கஜேந்தரனை ரக்ஷித்த ஸ்தலம்.
மங்களாசாஸனம்–திருமங்கையாழ்வார் 1118,-1127 2674-128
பேயாழ்வார் – 2380
மொத்தம் – 12 பாசுரங்கள்
ஆழ்வார் திருவடிகளே சரணம்!
No comments:
Post a Comment