Friday, December 11, 2020

Sri Chandrasekaramrutham - Periyavaa

Today's "amruta bindu" from Sri Chandrasekaramrutham - 27.10.20:

* மற்ற எந்த அவயங்களையும் விட வாய்க்குத் தான் வேலை ஜாஸ்தி - ருசி பார்ப்பது, அதாவது சாப்பிடுவது, பேசுவது என்று அதற்கு இரண்டு காரியங்கள் இருப்பதாலேயே, இரண்டையும் பாதியாக குறைத்துக் கொள்ளவேண்டும் என்பது தான் பரமேஸ்வரன் அபிப்ராயமாக இருக்க வேண்டும்.

* ஆனால், நாம் இதற்கு நேர்மாறாகப் பண்ணுகிறோம்; இந்த இரண்டு வேலைகளையும் தேவைக்கு அதிகமாகக் கொடுக்கிறோம்; வாய் தான் ரொம்ப over-worked!

* அமித போஜனமாக ஓயாமல் எதாவது சாப்பாடு, நொறுக்குத்தீனி, பானம் என்று உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கிறோம்; எப்போது பார்த்தாலும் வெட்டியாக எதாவது பேசிக் கொண்டே இருக்கிறோம்.

* இந்த இரண்டையும் ரொம்பக் குறைத்துக் கொள்ளப் பழகவேண்டும்.

* மனஸைக் கட்டுப்படுத்துவதற்கு வழியாக ஒவ்வோர் இந்திரியத்தையும் கட்டுப்படுத்தி வைக்கப் பழகவேண்டும். அதில், முதலில் வாயைக் கட்டவேண்டும் - அதாவது, சாப்பாட்டிலும் கட்டவேண்டும், பேச்சிலும் கட்டவேண்டும்.

No comments:

Post a Comment