பிராட்டி நம்மை உஜ்ஜீவிக்கச் செய்யும் உபகாரங்கள்.....!!!
1. தன்னை அடைந்து வழிபடுபவர்களின் சரணாகதியை ஏற்றுக் கொள்கிறாள் (ஆச்ரயிப்பதற்கு ஸுலபமானவள்)
2. அவர்கள் எம்பெருமானிடம் செய்யும் சரணாகதியை அவர் ஏற்றுக் கொள்ளும்படி, தான் அவரை அடைகிறாள்.
3. ஆச்ரிதர்களுடைய ஆர்த்த த்வளியை (ப்ரார்த்தனையை) தான் பரிவுடன் கேட்கிறாள்.
4. அவர்களுடைய ப்ரார்த்தனைகளை எம்பெருமான் பரிவுடன் கேட்கும்படி செய்கிறாள். (யார்தான் குற்றம் செய்யவில்லை? என்றெல்லாம் பரிந்து பேசுகிறாள்) - தன் அம்சமான பூமி பிராட்டி மூலம் - பொறுமையை உணர்த்துகிறாள். தன் இன்னொரு அம்சமான நீளா தேவியின் மூலம் - ஆச்ரிதர்கள் செய்த தோஷங்கள் தோன்றாதபடி செய்து விடுகிறாள்.
5. தன்னை அடைந்தவர்ளின் உபாய விரோதி ( உபாயமான பக்தி (அ)ப்ரபத்தியை செய்ய முடியாமல் தடுக்கும் பாப வர்க்கங்கள் ) மற்றும் ப்ராப்தி விரோதி (மோக்ஷத்தை அடைய முடியாமல் தடுக்கும் பாப வர்க்கங்கள்) இவைகளைப் போக்குகிறாள்.
இதனை நம்மாழ்வாரும் "வேரிமாறாத பூமேலிருப்பாள்வினை தீர்க்குமே" என அத்புதமாக அருளிச் செய்கிறார்.
6. தன்னை அடைந்தவர்களுக்கு கைங்கர்யம் செய்ய ஏற்றவாறு அவர்களுக்கு குணங்களின் பக்குவ நிலையை உண்டாக்குகிறாள்.
பிராட்டி செய்யும் உபகாரங்கள் எண்ணிலடங்கா. அப்படிப்பட்ட உபகாரங்களை மனத்தால் எண்ணி, அவள் கோஷ்டியில் சேர்ந்து விட்டால் பிராட்டியின் க்ருபையோடு எம்பெருமான் க்ருபையும் கிட்டும்.
ஆகவேதான் ஆசார்யர்கள் - சிஷ்யர்களுக்காக முதலில் ஸ்ரீ ப்ரபத்தி செய்துவிட்டு , எம்பெருமானிடம் ப்ரபத்தி செய்கிறார்கள்.
No comments:
Post a Comment