அரிசி🤔
வாரியார் 🐘🐘 சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. பெரிய கூட்டம். முன் வரிசையில் இருந்த நாத்தீகர் ஒருவர் எழுந்து "இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்?" ஏன் இத்தனை வழிபாடு முறைகள்? ஏன் கோவிலுக்கு கோவில் வழிபாடு முறைகள் மாறுகிறது? ஏன் நிறைய பொருட்செலவில் பல விதமான அலங்காரங்கள்? என்ற வினாவினை எழுப்பினார். சம்பாஷனைகள் ஆரம்பமானது.
"உங்களது பிரதான உணவு என்ன? அதாவது அரசியா, கோதுமையா?"
"அரிசி!"
"அரிசியில் என்னென்ன பாதார்தங்கள் செய்யலாம்?"
"சாதம், பொங்கள், இட்லி, தோசை, ஆப்பம், பனியாரம், பிரியாணி, இன்னும் என்னவெல்லாமோ செய்யலாம். ஏன் இதை கேட்கிரீர்கள்?"
"இல்லை அரிசியை ஊரவைத்து தின்றுவிட்டு போகலாமே, அதையேன் மெனக்கெட்டு நேரத்தையும், பணத்தையும் செலவுசெய்து இத்தனை பதார்தங்கள் செய்ய வேண்டும்? அதற்காக கேட்டேன்"
"எப்படி சாமி வெறும் அரிசியை ஊரவைத்து திண்பது?. நாவிற்கென்று ருசி தேவைப்படுகிறதே"
"சாதாரண நாவிற்கே இத்தனை வகை ருசி தேவைப்படுகிறது, ஆனால் மூலப்பொருள் அரிசி ஒன்றுதான். அது போலத்தான் இறைவன் ஒருவனே இந்துக்கள் ஆன்மிக ருசிக்காக பல உருவங்களில் துதித்து வணங்கி மகிழ்கிறார்கள் பலவித ருபங்களில் அலங்காரம் செய்து போற்றுகின்றனர்."பல கோவிலில் பலமுறையாக வழிபாடு உண்டு என்னற்ற ஐதீகங்கள் உண்டு ஒவ்வொரு கோவிலிலும் பூஜை முறை வேறுபடும் . தாயாகவும் தந்தையாகவும் சேயாகவம் எல்லாமுமாக விளங்கும் பரம் பொருள் ஒன்றே என்று உணர்ந்து உய்ய வேண்டும். ஆட்டுவிப்பானும் ஆடவல்லானும் அவன் ஒருவனே பலவாகி நின்று அருள் புரிபவன்.
கேள்வி கேட்ட நாத்தீகர் மேடையேறி வாரியாரை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது.🔥
No comments:
Post a Comment