Monday, December 14, 2020

Mahavyadeepadam

மார்கழி மாதத்தில் வரும் வ்யதீ பாதம் மஹா வ்யதீ பாதம்.
வ்யாஸ முனிவர், மஹாபாரதம் பாகவதம் போன்ற புராணங்களை இயற்றி முடித்து பின் பூலோகத்தில் நாம் வந்த வேலை முடிந்து விட்டது. இனி மோஷத்தை வேண்டி பரமேஸ்வரனை பிரார்த்திப்போம் என்று இமாலயத்திற்கு சென்று பரமேஸ்வரனை வேண்டினார். பரமேஸ்வரரோ முனிவரே நீர் பூலோகத்திற்கு வந்த வேலை இன்னும் முடியவில்லை.
சற்று பொறும். தென் திசையில் சென்று சதுர்வேதி மங்கலம் என்ற ( இன்றைய சேரன்மகாதேவி சுற்றுசூழல்)  இடத்திற்கு சென்று தாமிரபரணி ஆற்றில் ஸ்நானம் செய்து அங்கு தவமிருங்கள்.  வேளை வரும்போது நானே வந்து  உமக்கு அருள்புரிகிறேன் என்றதும் வியாசர் கீழே கங்கோத்ரிக்கு வந்தார். அங்கு சில பெண்மணிகள் கொடிய ரோகங்களுடன் மிகவும் அருவருப்பாக இருப்பதைக் கண்டு வருத்தமுற்றவராய் தனது ஞானதிருஷ்டியால் அவர்கள் யார் என தெரிந்து கொண்டார்.
அவர்கள் யார் என தெரிந்தும் தெரியாதது போல் அவர்களை விசாரிக்கவே அவர்களும் தங்களைப்பற்றி சொல்லிவிட்டு எங்கள் ரோகங்கள் நீங்க தாங்கள் உபாயம் கூற வேண்டும் என்று நமஸ்கரித்தனர்.  உடனே வ்யாஸர் அவர்களிடம் இது கைலாசநாதன் பரமேஸ்வரனால்தான் முடியும். மேலே போய் அவரை கேளுங்கள் என்றார். ஆக அந்த நவநதிகளும் இமயமலை மேலே சென்று பரமேஸ்வரனை பணிந்தனர். பரமேஸ்வரர் இது வ்யாஸரின் ஏற்பாடு தான் என்று புரிந்து கொண்டார்.
அந்த ஸ்த்ரீகளும், வ்யாஸரிடம் சொன்ன மாதிரியே தஷிண தேசத்தில் சதுர்வேத மங்கலத்தில் தாமிரபரணி நதியில் வ்யதீ பாத யோகத்தில் ஸ்நானம் செய்து அங்கே வ்யாஸ முனிவர் தவம் செய்து கொண்டிருப்பார், அவரை தரிசனம் செய்யுங்கள் உங்கள் ரோகங்களெல்லாம் நீங்கி ஷேமமாவீர்கள் என்று ஆசிர்வதித்தார்.
அவ்வாறே நவநதிகளும் தஷிணதேசத்திற்கு வந்து மார்கழி மாதத்தில் வ்யதீ பாத யோகத்தில் ஸ்நானம் செய்து வ்யாஸ
முனிவரை தரிசித்தனர். அப்போதுதான் தெரிந்தது,  அன்று வந்தது  நமக்கு வழிகாட்டியாய் வ்யாஸர் என்று. ஆக ஸ்த்ரீகளுக்கு ரோகங்கள்  நீங்கி ஸௌந்தர்யமாகி விட்டார்கள். அந்த ஆச்ரமத்திலிருக்கும் போது பரமேஸ்வரரும் நேரில் தோன்றி வ்யாஸருக்கும் அருள் வழங்கி, இந்த வேலைக்காகத்தான் உன்னை இங்கு வரச் சொன்னேன். இன்றிலிருந்து நீ இங்கு நீளா பூதேவி ஸமேத பக்தப்ரியனாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பாயாக. நான் உனது அருகில் நவநீதகிருஷ்ணனாக இருந்து உனக்கு துணையாக இருக்கிறேன் என்று கூறி மறைந்தார்.
இந்த மஹாவ்யதீ பாத நாளில் நவநீதக்ருஷ்ணரும், பக்தப்ரியரும் அதிகாலை தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி ( நீராடுவார்கள்) . வ்யதீபாத வேளையில் நாராயண ஸுக்த ஜபம் விஷேசமாகச் சொல்லபடுகிறது.
ஆக இந்த சம்பவம் நடந்த நாள் மார்கழியில் வ்யதீ பாத யோகத்தில் என்பதால் மார்கழி மாதம் வ்யதீபாதம் மஹா வ்யதீ பாதமாக விளங்கியது. வ்யாஸருக்கும் அன்றே மோஷம் ஏற்பட்டது என்பதால் இந்த இடம் வ்யாஸ தீர்த்தம் என்றும் விளங்குகிறது. நவநதிகள் ஸ்நானம் செய்ததால் ரோகங்கள் நீங்கி பித்ரு தோஷங்கள் நீங்கப் பெற்றதால் நமக்கும் இவ்வாறு எல்லா தோஷங்களும் நீக்கி நல்வாழ்வை தரவல்லது. இந்த வ்யதீ பாத யோகத்தில் ஸ்நானம் செய்து மூதாதையர் தர்பணம் ஜபங்கள் செய்யலாம்.
ஓம் ஸர்வரோக³நிவாரிண்யை நம : ।
ஓம் வ்யதீபா³தா⁴நிவாரிண்யை நம : ।
ஓம் மஹா வ்யதீபாதே வ்யாஸ தீர்த்தே ஸ்நாநேன அஸீதி க்ருச்ர பலதாயின்யை நம : !
தாமிரபரணி மகாத்மியத்தில் தாமிரபரணி அஷ்டோத்திரத்தில்  ஸ்லோகங்கள் சொல்கின்றன.
இக் கோவிலே பக்தவத்சல பெருமாள் என்ற வ்யதீபாத ஆலயம் ஆகும். ஒவ்வொரு மாதமும் வ்யதீ பாத யோகத்தில் ஸ்நானம், மூதாதையர் தர்பணம் ஜபங்கள் நவநீத க்ருஷ்ண பக்தவத்ஸல தரிசனம் ரொம்ப விசேஷம்.
வ்யதீ பாத நாட்களில் சேரன்மகாதேவி  அக்ரஹாரத்தில் அன்னதானம் வெகு சிறப்பாக நடைபெறும்.
இந்த வருடம் மஹா வ்யதீ பாத யோகம் டிசம்பர் 22 ம் தேதி செவ்வாய்கிழமை அன்று சேரன்மகாதேவியில் நடைபெற இருக்கிறது

No comments:

Post a Comment