Thursday, September 17, 2020

Routines of a brahmin

பார்ப்பான் பார்ப்பான் என ஓலமிடும் ஆக சில அரசியல் கட்சிகளே
இதை படியுங்கள்....

இறை நம்பிக்கையில் உண்மையான ஹிந்த்க்கள் வேதம் 7 வருடம் படித்து சாஸ்திர சம்பிரதாயங்களை முறையாக கற்றால் அனைவரும் அர்ச்சகர் ஆகலாமே

வேதம் படிக்க விரும்பும் ஒவ்வொரு ஹிந்துவும் பிராமணர்கள் ஆக கீழே கண்ட வாழ்க்கை முறையில் குருகுல கல்வி கற்க வேண்டும்..

அதற்கு 
முதலில் சராசரி மாணவர்கள் மத்தியில் இருந்து முற்றிலும் மாறி சிறு வயதில் தாய் தந்தை பாசத்தை மறந்து, ஆடி ஓடி விளையாடும் பருவத்தை மறந்து, சிகை அலங்காரம் மறந்து, உடை அலங்காரம் மறந்து, வாயிக்கு ருசியான உணவுகளை மறந்து,

10 வயதிற்குள் பாட சாலையில் சேர வேண்டும் 

தினமும் வீட்டிற்கு போய் வர அனுமதி இல்லை குருகுல கல்வி கல்வி அங்கேயே 7 அல்லது 8 வருடம் கண்டிப்பாக தங்கி தான் படிக்க வேண்டும்.

பாடசாலையில் விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து..

குளித்து விட்டு, ஸந்தியாவந்தனம், ஸமிதானம் முடித்து...

ஸ்வாமிக்கு முறை ப்ரகாரம் பூஜை செய்து...

காலை 7:00 மணி முதல் 8:00மணிவரை உபநிஷத் பாராயணம் செய்து....

8:00 மணிக்கு பழையது சாப்பிட்டு...

9:00மணிக்கு பாடத்திற்க்கு அமர்ந்து... 11:00வரை பாடம் படித்து,

(இதன் நடுவில் வாத்யார் சந்தை சொல்வார்.. அதாவது புதிய பாடத்தைச்சொல்லிதருவார்..)

அதன் பிறகு பகவானுக்கு நைவேத்யம் செய்து.. மாத்தியாண்ஹிகம் முடித்து 12:00மணிக்கு மத்திய ஆகாரத்தை சாப்பிட்டபிறகு..

ஸமஸ்க்ருத க்ளாஸ் பாடத்தில் அமரந்து அதை முடித்து விட்டு...

மத்தியம் உறக்கத்தை தவிர்த்து..

2:00 மணிக்கு வேத பாடத்தை ஆரம்பித்து 4:30 மணிக்கு முடித்து விட்டு....

துணிகளை துவைத்து விட்டு... முகத்தை அலம்பி ஸந்தியா வந்தனம், ஸமிதாதானம் செயதுவிட்டு... பகவான் பூஜையில் அமர்ந்த அவருடைய அஷ்டோத்ரங்கள் சொல்லிவிட்டு....

கிழமைக்கு தகுந்தாற் போல்

1)திங்கள்"கிழமை ருத்ரம்,சமகம்,

2)செவ்வாய், துர்கா சூக்தம், ஶ்ரீ.சூக்தம், 3)புதன் , விஷ்ணு ஸஹஸ்ரநாமம்,

4) வியாழன் தோடகாஷ்டகம்,

5) வெள்ளிக்கிழமை, மறுபடியும்.. துர்கா சூக்தம், ஶ்ரீ.சூக்தம்,

6) சனிக்கிழமை, மறுபடியும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம்,

7)ஞாயிற்றுக்கிழமை, ஆதித்ய ஹ்ருதயம்..

இதை எல்லாம் முடித்து மறுபடியும் வேத பாடத்தை ஆரம்பித்து 9:00 மணிக்கு இரவு ஆகாரத்தை முடித்து விட்டு ...

மதியம் நடந்த ஸமஸ்க்ருத பாடத்தை படித்துவிட்டு.. 10:00மணிக்கு படுகைக்கு செல்ல வேண்டும்....

மறுபடியும் காலை தொடரும்.. இப்படியாக பாடசாலை ஏழுவருடம் படிக்க வேண்டும்....

அதோடு இந்த வேத சாஸ்திர பாடசாலை மாணவர்கள் இழப்பது ஏராளம்

இவர்கள் பள்ளி மாணவர்கள் போல சிறு வயது விளையாட்டுக்களில் ஈடுபட்டு சந்தோஷமாக இருக்க முடியாது, எப்போதும் வேதம் படிப்பும் பணியும் செய்து கொண்டு இருக்கனும்

இவர்கள் எல்லா தரப்பினரின் மாணவர்கள் போல தலைமுடி வெட்டி ஸ்டைலா அழகு பார்த்து மகிழ முடியாது எப்போதும் பாதி மொட்டையடித்து குடுமி தான் 

இவர்கள் மற்ற குழந்தைகள் போல சினிமா டிவி சர்க்கஸ் நாடகம் ஷாப்பிங் என்று எந்த ஜாலி வாழ்க்கை முறையை அனுபவிக்க முடியாது எப்போதும் தெய்வீக பணியில் தான் சிந்தித்து பணியில் இருக்கனும்

இவர்கள் சட்டை பேண்ட் ஜீன்ஸ் டீசர்ட் என்று இளமை பருவ ஆடைகளை அணிந்து அழகு பார்க்க முடியாது எப்போதும் வேஷ்டி துண்டு தான். 

இவர்கள் எல்லா குழந்தைகள் போல வாயிக்கு ருசியாக சாப்பாடு கூட சாப்பிட முடியாது கண்டிப்பாக சைவம் உணவுகள் அதுவும் அளவான அன்ன சாதம் மட்டுமே.

இவர்கள் மற்ற குழந்தைகள் போல விடியும் வரை உறங்க முடியாது எப்போதும் என்ன மழை பெய்தாலும் என்ன பனி பெய்தாலும் கடும் குளிரிலும் காலை நான்கு மணிக்கு குளித்து விட வேண்டும் 

இவை எல்லாவற்றையும் விட மிகப்பெரிய இழப்பு என்னவென்றால் இவர்கள் தாய் தந்தையுடன் கூடி ஆடி விளையாடி சந்தோசமாக வீட்டில் ஒன்றாக சேர்ந்து இருக்க முடியாது என்பது தான் மிகப்பெரிய இழப்பு,, தீபாவளி பொங்கல் மட்டுமே வீட்டிற்கு வரமுடியும்.

ஏழுவருடம் வீட்டை பிரிந்து தாய் தந்தையை பிரிந்து தான் குருகுல வாழ்க்கை வாழ வேண்டும் ..

அப்படி எல்லாம் படித்தத வேதங்களை வைத்துக்கொண்டு வாழ்நாள் பூராவும் ஆலயங்களில் அர்ச்சகராக தூய்மையான நெறியான வாழ்க்கை வாழவேண்டும்....

இப்படி இந்த குருகுல வாழ்க்கையில் வேதபாட சாலை சிறார்களை போல நாம் ஒரு வாரம் முழுவதும் இருக்க முடியுமா..??

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

( நாங்களும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று இப்பொழுது வந்தவர்கள் ஒரு வரிடம் படித்தவர்கள் மட்டுமே )

குறிப்பு: இப்படிக்கு

முரளி ( சென்னை )
1)நான் பிராமணர் அல்ல!

நான் TVS GROUP ல் வேலை செய்ததால் பிராமணம் நட்பு அதிகமாக கிடைத்தது .. எண்ணெய் கும்பகோணம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை போன்ற பாடசாலைக்கு அழைத்துச் செல்வார்கள் , நான் ஒரு வாரம் தங்கி பார்த்துள்ளேன் உண்மை சம்பவங்கள் இதுதான் ( கண்ணீர் வரவழைத்து விட்டது )

2)நான் பிராமணர்களின் தயவுக்காக காத்திருக்கும் நபரும் அல்ல!!

Share All Groups

Facebook உலக பிராமணர் page

இந்த லிங்கை கிளிக் செய்து பேஸ்புக் உலக பிராமணர் பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் பிராமணர்கள் பற்றிய பழக்க-வழக்கங்கள் சம்பிரதாயங்கள் உங்களுக்கு உடனுக்குடன் வந்து சேரும்

அனைத்து Whatsap மட்டும் Facebook குரூப் களுக்கும் சென்று சேருங்கள் , 
உங்கள் நண்பர்கள் மற்றும் சொந்தங்களுக்கு பகிர்ந்திடுங்கள்

No comments:

Post a Comment