வைராக்யங்களான குணக் கடலாகவும், யதீந்தரரான எம்பெருமானார் திறத்தில் ப்ரேமையே வடிவெடுத்தவராகவும் விளங்கும் அழகிய மணவாள மாமுனியை வணங்குகின்றேன்.
⇒என்று மாமுனிகளைப் பார்த்து கைகூப்பி ஸேவித்தது ஓதி மறைந்தது.
*அந்த வைணவ சபையே அதிர்ந்தது. இது மணவாள மாமுனிகளுக்கு நம்பெருமாள், குமாரானாக வந்து, உகந்து அளித்த தனியன்.
1. திருபல்லாண்டு (12 பாசுரங்கள்)–பெரியாழ்வார்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்கு முழுங்கும் அப்பாஞ்ச்சன்னியமும் பல்லாண்டே
*வல்லபதேவ பாண்டியனுக்கு எழுந்த ஐயம் தீர்க்கும் பொருட்டு மதுரையில் நடைப்பெற்ற சமயவாதத்தில் வென்று, அரசனால் அளிக்கப்பட்ட பட்டத்துயானை மீது வரும்பொழுது திருமால் திருமகளோடு வானத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளியிருக்கக் கண்டு இறைவனின் வடிவழகில் மயங்கி எங்கே இறைவனுக்கு கண்திருஷ்டி விழுந்துவிடுமோ என்றஞ்சி பாடப்பட்ட திருப்பல்லாண்டு.
*மணிவண்ணா உன்னோடு ;நின் வலமார்பினில் வாழ்கின்ற என் தயாராகிய மங்கையும் ; நின் வல பாகம் உள்ள சக்ராயுதம் என்னும் சுடராழியும் ; சங்கம் என்னும் பாஞ்ச்சன்னியமும் போன்ற உன் அனைத்து ஆயுதங்களும் பல்லாண்டு வாழ்க.
*மேலும் சாற்றுமறை எனும் வைணவ தினசரி வழிப்பாட்டின் தொடக்கம் மற்றும் முடிவின்போதும், வைணவ கோயில்களின் திருவிழாக்களில் சுவாமி புறப்பாடு மற்றும் புறப்பாடு முடிந்து திருக்கோயில் திரும்பும்போதும் இன்றளவும் பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாடப்பட்டே பின்னரே சுவாமியை திருக்கோயிலுக்குள் எழுந்தருள செய்கின்றனர். இவ்வழக்கம் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது இராமானுசர் கொள்கைகளை பின்பற்றும் பிறபகுதி வைணவக் கோயில்களிலும் அனுசரிக்கப்பட்டுவருகிறது.
2. பெரியாழ்வார் திருமொழி (461 பாசுரங்கள்)-பெரியாழ்வார்
வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அளறாயிற்றே
*ஒளி நிறைந்த நீண்ட கண்களையுடையவனும், கேசி என்னும் அசுரனைக் கொன்றவனுமான, பேரெழில் மிக்கத் தலைவன் கண்ணன் பிறந்த திருநாளை முன்னிட்டு, அழகிய, வேலைப்பாடுகள் அமைந்த, உயரமான மாளிகைகள் நிறைந்த திருக்கோட்டியூரானது, கோகுலத்தை மிஞ்சும் வண்ணம் பேரெழில் பெற்றது; ஆயர்களும், ஆய்ச்சியரும், தங்கள் முன் எதிர்படுவோர் அனைவர் மீதும் நறுமண எண்ணையையும், வண்ணப் பொடிகளையும் தூவிக் குதூகலித்தனர். அவர்களின் இந்த மகிழ்ச்சி ஆரவாரச் செய்கையினால், கண்ணன் வீட்டின் பரந்த முற்றமும் நறுமண எண்ணெயும், வண்ணப் பொடியும் கலந்த சேறாய் மாறியிருந்தது.
3. திருப்பவை (30 பாசுரங்கள்)–ஆண்டாள் நாச்சியார்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
*அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
*இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 107 வது திருபார்கடலும் ,108 வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த இரு திருப்பதிகளை முடிவாக அடைய முடியும். இப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.
4. நாச்சியார் திருமொழி (143 பாசுரங்கள்)-ஆண்டாள் நாச்சியார்
தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டல மிட்டு மாசிமுன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,
உய்யவு மாங்கொலோவென்று சொல்லி
உன்னையு மும்பியையும் தொழுதேன்,
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே.
*தைமாதம் முழுதும் நீ எழுந்தருளவேண்டிய இடத்தைச் சோதித்து மண்டல பூஜைக்காக குளிர்ந்த மண்டலாகாரத்தை இட்டு மாசி மாதத்தின் முதற்பக்ஷத்தில் அழகிய சிறிய மணல்களினால் நீ எழுந்தருளும் வீதிகளை அழகுண்டாவதற்காக நன்றாய் அலங்கரித்து உன்னையும் உன் தம்பியான சாமனையும் தொழுதேன். உக்கிரமானதும் நெருப்புப் பொறிகளை உமிழா நிற்பதுமான ஒப்பற்ற திரு வழியாழ்வானை திருக்கையில் அணிந்துள்ள திருவேங்கட முடையானுக்கு என்னை கைங்கரியம்பண்ணும்படி கல்பிக்கவேணும்
5. பெருமாள் திருமொழி (105 பாசுரங்கள்)-குலசேகர ஆழ்வார்
இருளரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தியணிபணம் ஆயிரங்களார்ந்த
அரவரச பெருஞ்சோதி அனந்தனென்னும்
அணிவிளங்கும் யர்வெள்ளையணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர் பொன்னி
திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என்
கண்ணினைகள் என்று கொலோ களிக்கும் நாளே?
*மிகவும் தெளிந்து விளங்கும் நீரினையுடைய காவிரியானது, தனது அலைகள் என்ற கைகளால் இதமாகத் திருவடிகளைப் பிடித்து விடும்படி தழுவி ஓடும் இடமான திருவரங்கம் என்னும் நகரத்தில், இருளானது சிதறி ஓடும்படி, ஓளி வீசும் மாணிக்கக்கற்களை பொருத்தியுள்ள நெற்றியினையும், மிகவும் நேர்த்தியான ஆயிரம் படங்கள் கொண்டு நாகங்களுக்கு அரசன் என்னும் மிகுதியான கம்பீரத்தையுடைய ஆதிசேஷனாகிய அழகுள்ள வெண்மைநிற படுக்கையில் கண்வளர்கின்ற நீல ரத்னக்கல் போன்ற பெரியபெருமாளை, என்னுடைய கண்கள் குளிர்ந்து வணங்கி நான் மகிழ்வுறும் நாளானது எந்நாளோ?
*என்றவாறு அரங்கனை நினைத்து ஏங்குகிறார் அரங்கனை அடைவதற்கு இந்த ஏக்கம் தாபமிருந்தால் போதும் அவன் செயல்பட தொடங்கிடுவான்.
6. திருச்சந்த விருத்தம் (120 பாசுரங்கள்)-திருமழிசை ஆழ்வார்
தருச்சந்தப் பொழில் தழுவு தாரணியின் துயர் தீர
திருச்சந்த விருத்தம் செய் திருமழிசைப்பரன் வருமூர்,
கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கும் மணநாறும்,
திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம்பதியே
*எம்பெருமானின் பெருமைகளை அநுபவித்து மகிழ்கிறவர் திருமழிசை ஆழ்வார். 'இவ்வுலகிலுள்ள மக்கள் பகவானை நினைக்காமல் துன்புறுகிறார்களே! துன்பம் நீக்கும் வழியாது?' என்று சிந்தித்தார். ராஜஸ தாமஸ நூல்களால் மனங்கலங்கி தேவதாந்தரங்களை நாடுவதுதான் துன்படையக் காரணம் என்று தெளிந்தார். ஸ்ரீமந்நாராயணனே பரதேவதை; தத்தவப் பொருள்' என்பதை விளக்குவதற்காகவே இப்பிரபந்தத்தை அருளியுள்ளார். 'பர, வ்யூஹ, விபவ, அர்ச்சாவதாரங்களில் எம்பெருமான் காட்டிய பெருமைகளை வாசித்தும் கேட்டும், அவனையே வணங்கும் பாக்கியத்தை எம்பெருமான் எனக்குக் கொடுத்திருக்கிறானே! என்னே கருணை!' என்று கூறி மகிழ்கிறார்.
7. திருமாலை (45 பாசுரங்கள்)-தொண்டரடிபொடி ஆழ்வார்
காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து,
நாவலிட்டுழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே,
மூவுலகும் உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற,
ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே.
⇒*திருமாலை அறியாதோர் திருமாலை அறியாதார்…என்பர் சான்றோர்!!!
*எல்லாவுலகங்களையும் (ப்ரளய காலத்திலே) திருவயிற்றிலே வைத்து (பிரளயம் நீங்கினபிறகு) அவற்றை வெளிப்படுத்திய ஜகத்காரணபூதனே அரங்கமாநகரளானே உனது திருநாமத்தைக் கற்றதனாலுண்டான செருக்கினாலே பஞ்சேந்திரியங்களையும் வெளியில் ஓடாதபடி அடைத்து பாபராசியை வெகுதூரம் உதறித்தள்ளி ஜயகோஷம் செய்து யமபடர்களின் தலைமேல் அடியிட்டுத் திரிகின்றோம்
8. திருப்பள்ளி எழுச்சி(10 பாசுரங்கள்)-தொண்டரடிபொடி ஆழ்வார்
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்!
கனை இருள் அகன்றது, காலை அம் பொழுதாய்,
மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்,
வானவர், அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர், இவரொடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்று உளது எங்கும்,
அரங்கத்து அம்மா, பள்ளி எழுந்தருளாயே!
*சூரியன் கிழக்கே தோன்றிவிட்டான். கருமை இருள் அகன்றுவிட்டது. காலைப் பொழுது மலர்கின்றது, மலர்களில் தேன் ஒழுகுகிறது. தேவர்கள் வந்து எதிர்திசையை நிரப்புகிறார்கள். அவர்களுடன் ஆண் -பெண் யானைகளின் கூட்டமும் வந்துள்ளன. முரசு கடல் அலைபோல அதிர்கிறது. அரங்கனே எழுந்தறள்வாய்
9. அமலனாதிபிரான் (10 பாசுரங்கள்)–திருபாணாழ்வார்
அமலனாதி பிரானடியார்க் கென்னை யாட்படுத்த
விமலன், விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்,
நிமலன் நின்மலன் நீதி வானவன், நீள் மதிளரங்கத் தம்மான்,
திருக்கமல பாதம் வந்தென் கண்ணினுள்ளன வொக்கின்றதே.
*பெருமானின் பேரழகில் ஈடுபட்டுப் பாதாதிகேச வருணனையாகப் பாடியுள்ளார். பாதாதிகேச வருணனை என்பது அடிமுதல் முடிவரை உள்ள இறைவனின் அங்கங்களைச் சிறப்பித்துப் பாடுதல் ஆகும்.
10.கண்ணிநுண் சிறுதாம்பு(10 பாசுரங்கள்)-மதுரகவி ஆழ்வார்
நம்மாழ்வார், நாதமுனிகளிடம் , திவ்ய பிரபந்தத்தை அளிக்க காரணமாய் விளங்கிய, திவ்ய பிரபந்தங்கள்:
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி யபெரு மாயன் என்னப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி யென்றக்கால்
அண்ணிக்கும் அமு தூறுமென்நாவுக்கே
*முடிகளையுடைத்தாய் நுட்பமாய் கயிற்றினால் யசோதைப்பிராட்டி தன்னைக்கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட விசேஷ ஆச்சரிய சக்தியுக்தனாய் எனக்கு ஸ்வாமியான ஸர்வேச்வரனை விட்டு கிட்டி ஆச்ரயித்து தெற்குத் திசையிலுள்ள (ஆழ்வார் திருநகரியென்னும்) குருகூர்க்கு நிர்வாஹகாரன ஆழ்வார் என்று சொன்னால். பரமபோக்யமாயிருக்கும் என் ஒருவனுடைய நாவுக்கே அம்ருதம

No comments:
Post a Comment