ஸ்ரீவைஷ்ணவர்களைப் பூசிப்பது என்பதே ஒரு மெய்யடியவனின் நோக்கமாதல் வேண்டும் !
ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோராராதநம் பரம் |
தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் பரம் ||
என்கிற ப்ரமாண வசநம் இவ்வுண்மையை நமக்கு உணர்த்துகிறது !
பூசைகளுக்குள்ளே விஷ்ணுவைப் பூசிக்கை சிறந்தது.. அதைக் காட்டிலும் சிறந்தது அவனடியார்களைப் பூசிக்கை !
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நாம் உணவிடும் போது நம்மிடம் இருக்க வேண்டிய பண்பு நலன்களை வார்த்தா மாலை தெரிவிக்கிறது !
ஆறு குணங்கள் உணவிடுபவருக்குத் தேவையாம் ..
1 இழவு : வந்திருப்பவர் மெய்யடியவர்.. பெருமானுக்கு உயிர் போன்ற ஞாநீ.. அவனுக்கு நெருக்கமானவர்.. அவர் ஏற்றத்திற்குத் தக்கபடி நாம் உணவளிக்கவில்லையே என்கிற குறை நமக்கு ஏற்பட வேண்டும் !
2. இரப்பு - நாம் ஒரு அடியவருக்கு உணவிடுகிறோம் என்றெண்ணாமல் , இப்படிப்பட்டவர் நம் வீட்டில் உண்பது நம் பாக்கியம் .. இவ்வாய்ப்பு அடிக்கடி நமக்குக் கிட்ட வேண்டும் என்று உளமாற நினைக்கை அவசியம் !
3. இறுமாப்பு - ஒரு ஸ்ரீவைஷ்ணவர் நம் குடிசையில் உண்டு நமக்கு அருள் செய்கிறாரே !! நமக்கு ஆர் நிகராகக் கூடும் என்கிற ஸாத்விக அஹங்காரம் நமக்கு முக்கியம்.
4. துணுக்கம் - அடியவர்களுக்குப் பரிமாறும் போது ஏதேனும் பிழை நேர்ந்து விடுமோ என்றஞ்ச வேண்டும் ! உணவு அவருக்குப் பிடித்தாற் போல் இருக்க வேண்டுமே என்கிற பதற்றம் , பரிவு முக்கியம்..
5 . சோகம் - பழுதே பல பகலும் போயின என்றபடி , இப்படி அடியவர்களை இத்தனை நாள் பூசியாது போனோமே..பாவியேன் பல நாளும் இழந்திருந்தேனே என்கிற வருத்தம் நமக்கு ஏற்பட வேண்டும் !
6. வாழ்வு- அடியவரை உபசரிக்கும் பேறு பெற்ற நாளைத் தான் நாம் நாளாக எண்ண வேண்டும்.. இன்று தான் எனக்கு நல்விடிவு ஆயிற்று என்றிருக்கை முக்கியம்.
நான் வாழ்ச்சி பெற்றேன்.. என் பிறவி பயனுள்ளதாயிற்று என்று நினைக்கை முக்கியம்..
இதுவே மேற்கண்ட வார்த்தையின் பொருள்..

No comments:
Post a Comment