Tuesday, August 25, 2020

Gopala vimsati slokas 12 to 18 in tamil

Courtesy: Smt.Dr,Saroja Ramanujam

கோபால விம்சதி

12.அத்ராஹிதசாரு வம்சநாலா; மகுடாலம்பி மயூரபிஞ்சமாலா:
ஹரிநீலசிலாவிபங்க நீலா: பிரதிபா: ஸந்து மம அந்திமப்ரயாணே

.அதராஹிதசாரு வம்சநாலா; - அழகிய அதரங்களில் வைக்கப்பட்ட புல்லாங்குழலுடனும், 
மகுடாலம்பி மயூரபிஞ்சமாலா:- கிரீடத்தை அலங்கரிக்கும் மயில் தோகைகளுடனும்
ஹரிநீலசிலாவிபங்க நீலா: பிரதிபா:-இந்த்ரநீலமணியை ஒத்த ஒளியுடனும் (காணப்படும் உருவம் )
மம அந்திமப்ரயாணே- என் அந்திமகாலத்தில் 
ஸந்து – தோன்றட்டும்

அந்திம ஸ்மரணை என்பது அவன் அருளால்தான் ஏற்படும். அதற்கு அவன் இந்த்ரநீலமணி போன்ற ஒளி பொருந்திய உருவம், அதரத்தில் புல்லாங்குழல், கிரீடத்தில் மயில் தோகை இவற்றுடன் கண்முன் தோன்ற வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.

கிருஷ்ணகர்ணாம்ருதத்தில் இதுபோலவே ஒரு அழகிய சித்திரம்.,

வ்யத்யம்சபாதம் அவதம்ஸித பர்ஹிபர்ஹம்
சாசீக்ருதானனநிவேசித வேணுரந்த்ரம் 
தேஜ: பரம் பரமகாருணிகம் புரஸ்தாத்
ப்ராணப்ரயாணஸமயே மம ஸந்நிதத்தாம்

பாதங்களை குறுக்காக வைத்து, மயில்தோகையை சிரசில் அணிந்து , முகம் சாய்த்து குழலுடன், கருணையே உருவான அந்த தேஜோமயமான உருவம் என் பிராணன் வெளியேறும் சமயம் என் கண்முன் தோன்றட்டும்.

13. அகிலான் அவலோகயாமி காலான் மஹிலாதீனபுஜாந்தரஸ்ய யூன:
அபிலாஷபதம் வ்ரஜாங்கனானாம் அபிலாபக்ரமதூரம் ஆபிரூப்யம்

மஹிலா ஆதீன – பிராட்டியின் வசத்தில் உள்ள , புஜாந்தரஸ்ய – திருமார்பை உடையவனான , யூன: -இளைஞனான கண்ணனுடைய, வ்ர்ஜாங்கனானாம் – கோபஸ்த்ரீகளின், அபிலாஷ பதம்-ஆசைக்குரிய , அபிலாபக்ரமதூரம்- வாக்கால் விவரிக்கமுடியாத , ஆபிரூப்யம்-உருவ அழகை, அகிலான் காலான் – எல்லா காலங்களிலும் , அவலோகயாமி- காண்கிறேன்.

14. ஹ்ருதி முக்தசிகண்டமண்டநோ லிகித: கேன மம ஏஷ சில்பினா 
மதனாதுரவல்லவாங்கனானாம் வதநாம்போஜ திவாகரோ யுவா
கேன சில்பினா- எந்தச்சிற்பியால், முக்தசிகண்டமண்டன:- அழகிய மயில் தோகையை அணிந்தவனாய், மதனாதுரவல்லவாங்கனானாம்- காதலுற்ற இடைப்பெண்களின் , வத்னாம்போஜதிவாகர: - முகத்தமரையை மலரச்செய்யும் சூரியனைப்போன்ற , ஏஷ யுவா-இந்த இளைஞன், மம ஹ்ருதி- என் உள்ளத்தில், லிகித: -வரையப்பட்டுள்ளான்!

முந்தைய ஸ்லோகத்தில் அவன் உருவம் எப்போதும் தன் முன் காணப்படுவதாகக் கூறியதன் காரணத்தை இந்த ஸ்லோகத்தில் கூறுகிறார். அவன் உருவம் அவர் உள்ளத்தில் சிற்பியால் செதுக்கப்பட்டது போல நிரந்தர இடம் கொண்டுள்ளதாம்.

கோபாலவிம்சதி

15.மஹசே மஹிதாய மௌலினா வினதேனாஞ்சலிம் அஞ்சனத்விஷே 
கலயாமி விமுக்தவல்லவீ வலயாபாஷித மஞ்சு வேணவே

இந்த ஸ்லோகத்தில் தேசிகர் கண்ணன் புல்லாங்குழல் வாசிப்பதை வர்ணிக்கிறார்.
அஞ்சனத்விஷே – மைபோன்ற , மஹசே- ஒளியான , விமுக்தவல்லவீ – கவரப்பட்ட மனமுடைய கோபியரின், வலயாபாஷித,-வளைகளோடு ஸம்பாஷிக்கும், மஞ்சுவேணவே- இனிய குழலை உடைய, மஹிதாய – வந்தனைக்குரிய கண்ணனை, வினதேன மௌலினா- தலை வணங்கி , அஞ்சலிம் கலயாமி- நமஸ்கரிக்கிறேன்.

நீல நிற ரத்தினம் போன்ற .கண்ணன் குழலூதுகிறான். அதற்கேற்ப வளைகளால் ஒலி எழுப்பும் கோபியருடன் அந்தக் குழல் சம்பாஷிப்பது போல் தோன்றுகிறதாம்.

இது யாதவாப்யுதயத்தில் பின்வருமாறு வர்ணிக்கப்படுகிறது. 
வம்சேன க்ருஷ்ண: பிரதிஸம்பபாஷே 
வார்த்தாஹரான் வாமத்ருசான் கடாக்ஷான் (யாதவாப்யுதயம்-4.60)

கோபியர் கண்ணனுடன் அழகிய கண்களால் பேசுகின்றனர். அதற்கு அவன் குழலால் பதிலளிக்கிறானாம்.

16. ஜயதி லலிதவ்ருத்திம் சிக்ஷிதம் வல்லவீனாம் 
சிதில வலய சிஞ்சா சீதலை: ஹஸ்ததாலை: 
அகிலபுவனரக்ஷாகோபவேஷஸ்ய விஷ்ணோ:
அதரமணிஸுதாயாம் அம்சவான் வம்சநாள:

அகிலபுவனரக்ஷாகோபவேஷஸ்ய – உலகை ரட்சிக்க கோப ரூபத்தில் வந்த, விஷ்ணோ:- விஷ்ணுவான கண்ணனின் , அதரமணிஸுதாயாம் அம்சவான்- மணியான அதரங்களின் அம்ருதத்தில் திளைத்த, வம்சநாள: - குழலானது, வல்லவீனாம் – கோபியருடைய, சிதில வலயசிஞ்சா- தளர்ந்த வளைகளின் ஒலியுடன், சீதலை: ஹஸ்த தாலை: - குளிர்ந்த கைகளால் போடப்பட்ட தாளங்களினால், லலிதவ்ருத்திம்- அழகிய நடையுடன் கூடிய இசையை, சிக்ஷித: - கற்பிக்கப்படுகிறது.

.கண்ணனின் குழலில் இருந்து வரும் இசை லலிதமான நடையுடன் கூடிய ஸ்வரங்களாக இருப்பதால் ஒரு நாட்டியஇசை போலத் தோன்றிற்று. இது கோபியரின் கைகளால் போடப்பட்ட தாளத்தை ஒட்டி இருந்ததாம். அதாவது இசை தாளத்தை அனுசரித்தது. அது கோபியரால் கற்பிக்கப்பட்டது போல அமைந்தது. பகவான் பக்தர்களின் கானத்திற்கேற்ப நடனம் செய்கிறான். இது அவனுடைய பக்த வாத்சல்யம்.

கோபாலவிம்சதி

17.சித்ராகல்ப:ச்ரவஸி கலயன் லாங்கலீ கர்ணபூரம்
பர்ஹோத்தம்ஸ ஸ்புரிதசிகுரோ பந்துஜீவம் ததான:
குஞ்சாபத்தாம் உரஸி லலிதாம் தாரயன் ஹாரயஷ்டிம் 
கோபஸ்த்ரீணாம் ஜயதி கிதவ: கோபி கௌமாரஹாரீ

ச்ரவஸி கர்ணபூரம் – காதில் ஆபரணமாக 
லாங்கலீ கலயன்-தென்னம்பூ வைத்து
பர்ஹோத்தம்ஸ ஸ்புரித சிகுர:- மயிற்தோகை விளங்கும் முன்நெற்றியில் 
பந்துஜீவம் ததான: செம்பருத்திப்பூக்களுடன்
உரஸி- மார்பில்
குஞ்ஜாபத்தாம் – குந்துமணியால் கட்டப்பட்ட 
லலிதாம் – அழகிய 
ஹாரயஷ்டிம் – மாலையை 
தாரயன்- அணிந்து
சித்ராகல்ப: -இவ்வகை விசித்திர ஆபரணங்களுடன்
கோபஸ்த்ரீணாம் – கோபியருடைய 
கௌமாரஹாரீ –இளமையைக் கவர்ந்த்வனாக 
கோபி கிதவ: - ஒரு குறும்புக்காரன் 
ஜயதி – விளங்குகிறான்

18. லீலாயஷ்டிம் கரகிஸலயே தக்ஷிணே ந்யஸ்ய தன்யாம்
அம்சே தேவ்யா:: புளகருசிரே ஸந்நிவிஷ்டான்ய பாஹு:
மேகச்யாமோ ஜயதி லலிதோ மேகலாதத்தவேணு: 
குஞ்சாபீடஸ்புரிதசிகுரோ கோபகன்யாபுஜங்க:

தக்ஷிணே கரகிஸலயே - தளிர் போன்ற வலக்கரத்தில்
தன்யாம் – பாக்கியம் செய்த 
லீலாயஷ்டிம் – விளையாடும் கோலை
ந்யஸ்ய வைத்து
தேவ்யா: - நப்பினையின் 
அம்சே புலக ருசிரே – புல்லரிக்கும் தோளில் 
ஸந்நிவிஷ்ட அன்ய பஹு: - வைத்த மறு கரத்துடன் 
மேகலாதத்தவேணு: - புல்லாங்குழலைத் தன் மேகலாபரணத்தில் வைத்து
குஞ்சாபீடஸ்புரிதசிகுர:-குந்துமணி கட்டப்பட்ட முன் நெற்றியுடன்
கோபகன்யாபுஜங்க :- கோபியரின் காதலனான
மேகச்யாம: லலித:- மேகவண்ணம் கொண்ட அழகிய கண்ணன்
ஜயதி- விளங்குகிறான்


No comments:

Post a Comment