Monday, August 17, 2020

Daumya maharishi & Devaka shishya - spiritual story ̆

06/07/2020 முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தின் விளக்கத்தை மேலும் தொடர்கிறார்.

மகாபாரதத்தில் இருந்து ஒரு ஸ்தோத்திரத்தை விரிவாகப் பார்த்தோம். யாசர் நம் கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் அதிலிருந்து போகும், அதற்கான சரித்திரத்தையும் மேற்கொண்டு தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறார்.

*தௌமியர் என்கின்ற மகரிஷிக்கு மூன்றாவது சிஷ்யனான வேதகாவிற்காக எந்த அளவு பொறுப்பு எடுத்துக் கொண்டார் என்பதைப் பார்க்க இருக்கிறோம்.* 

இந்த மாணவனுக்கு கிரகித்துக் கொள்ளக்கூடிய சக்தி அதாவது ஞாபக சக்தி எல்லாவற்றிலும் குறைவாக இருக்கிறது.

இது பாடசாலைகளுக்குள் அனேகமாக எல்லா குழந்தைகள்  இடத்திலும் இருக்கும். ஏனென்றால் குழந்தைப் பருவத்திலேயே வீட்டில் இருக்கின்ற வரை அவனுக்கு வேத சப்தம் ஆனது காதிலே விழுந்திருக்காது. 

*அத்தியனத்திற்கு என்று வந்துவிட்டால் அவன் வசிக்கக்கூடிய புதியது. வேதமும் அட்சரமும் புதியது. முதன் முதலில் அப்போதுதான் அவன் காதில் விழுகின்றது அதனால் கிரகண சக்தி என்பது குறைவாக இருக்கிறது.*

லௌகீகமான படிப்பிற்கும் வேத படிப்பிற்கும் இதுதான் வித்தியாசம். *லௌகீக படிப்பிலே வருடம்தோறும் வகுப்புகள் மாறும் ஆசிரியர்கள் மாறுவார்கள் புத்தகங்கள் மாறும். அந்த அந்த வருட படிப்பிற்குப் பிறகு அந்த புத்தகங்கள் நமக்கு தேவை இல்லாமல் இருக்கும். முதலாம் வகுப்பிலேயே நாம் படித்த பாடங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை மறந்துவிடலாம். ஆனால் வேதத்திலே அவன் முதன் முதலில் எந்த மந்திரத்தை கற்றுக் கொள்கின்றானோ அது அவனுடைய ஆயுள் காலம் வரைக்கும் அவன் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.* வேத புத்தகங்கள் 5 இருக்கின்றது என்றால் அவை அனைத்தும் அவனுடைய மூளையிலே பதிவு பண்ண வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் சொல்லி அவனுடைய மூளையிலே அந்த வேத மந்திரங்களை சேர்க்கிறோம்.

*அந்த அளவுக்கு அந்த குழந்தைக்கு ஞாபகசக்தி வேண்டும். குருகுல முறை பாடசாலையில் என்ன வழக்கம் என்றால் முதலில் அவனுக்கு சந்தியாவந்தனம் செய்வதில் என்னவிதமான மந்திரங்களோ அதை சொல்லிக் கொடுப்பார். பின்பு ஸமிதாதானம் மந்திரங்களை சொல்லிக் கொடுப்பார்கள். பின்பு உபநயன மந்திரங்களையும் முதலில் சொல்லிக் கொடுப்பார்கள். ஏனென்றால், உபநயனம் நடக்கின்ற பொழுது அதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால், அது அந்தக் குழந்தையின் உடைய ஞாபக சக்தியை குறை பண்ணும். உபநயனத்தில் நான்காவது நாளில் தண்டுதோத்தாசனம் என்று ஒன்று உண்டு அதாவது தண்டு நீர். இது முக்கியமான ஒன்று ஏனென்றால் அந்த குழந்தைக்கு, அவன் படிக்கக்கூடிய தான படிப்பு அவனுடைய பகுதிகளே நன்றாக நிலைத்திருக்க வேண்டும். அந்தப் படிப்புக்கு தகுந்த வேலையும் கிடைக்க வேண்டும். அவனுடைய வாழ்க்கையிலே அடுத்த ஆசிரமத்திற்கு அவன் சீக்கிரம் போக வேண்டும். என்கின்ற இந்த மூன்று பிரார்த்தனைகள் பிரார்த்திக்க படுகின்றது அந்ததண்டுதோத்தாசனம் சம்பவத்தில்.*

நான்குநாள் உபநயனம் செய்கின்ற பொழுது தான் அதை செய்ய முடியும். ஒரே நாளில் உபநயனம் செய்கின்ற பொழுது அந்ததண்டுதோத்தாசனம் என்பது நடக்காது. *அந்த சமயத்திலே அவனுடைய ஞாபகசக்தி காக நாம் எதையும் பிரார்த்தனை செய்ய முடிவதில்லை. அந்தப் படிப்புக்கு தகுந்த வேலையும் அவனுக்கு கிடைப்பதில்லை. வேத பாடசாலையில் சேர்ந்து வேத அத்தியயனம் செய்து அதனாலேயே புருஷார்த்தங்கள் இல்லை. அந்த மந்திரங்களை எப்படி உபயோகிப்பது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். அவனை பலபேர் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதுதான் அவன் படித்த படிப்பிற்கான உபயோகம். ஒருவன் மருத்துவ படிப்பு படித்து இருக்கின்றான் என்றால், ஒரு நான்கு பேருக்கு அவன் 4 பேருக்கு மருத்துவம் செய்ய வேண்டும் அப்போதுதான் அவன் படித்த படிப்பிற்கு பலனுண்டு. மருத்துவம் படித்துவிட்டு மளிகைக்கடை வைத்து இருந்தால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை.* அவன் படித்த படிப்பிற்கும் செய்யக்கூடிய காரியத்திற்கும் சம்பந்தமே இல்லை. அந்த சம்பந்தம் என்பது ஏற்பட வேண்டுமேயானால் இந்த
தண்டுதோத்தாசனம் நடக்க வேண்டும். அதேபோல்தான் இவன் வேதம் படித்தால் அது பல பேருக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும். இவன் பல சிஷ்யர்களை உருவாக்க வேண்டும். இவனுக்கும் அந்த மந்திரங்கள் பலனை கொடுக்கணும். அதுதான் மிகவும் முக்கியம்.

நிறைய நான்கு வேதங்களும் படித்து இருக்கிறார் ஆனால் வேறு ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார் என்றால், அது புரோஜனம் இல்லை. *அவனுக்கு வேஷ்டி வாங்கி கொடுத்து சாப்பாடு போட்டு ஒரு ரூபாய் கூட வாங்காமல் வேதம் சொல்லிக் கொடுத்ததற்கு, பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்.* அது பிரயோஜன பட வேண்டுமென்றால் இந்த
தண்டுதோத்தாசனம் நடந்திருக்க வேண்டும் சரியான முறையில். அது முன்னால் பின்னால் கொஞ்சம் ஏதோ நடந்திருக்கிறது என்றாள் *இந்த மந்திரங்களை அவன் கற்றுக் கொள்ளும் பொழுது சரியாக போய்விடும் என்ற காரணத்தினால் தான் முதலில் உபநயன மந்திரங்களை அவனுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.* அந்த உபநயன மந்திரங்களை தினமும் சொல்சொல் அந்த குழந்தைக்கு தாரணா சக்தி ஆனது கிடைக்கும். அந்தப் படிப்பு மற்றவர்களுக்கு பயன்படும்.

*ஏனென்றால் ஜென்மாவில் திருமணம் முறையான படி செய்து கொள்ள முடியவில்லை என்றால், திரும்பவும் திருமணம் செய்துகொள்ள முடியும். அதற்கு நம்முடைய தர்ம சாஸ்திரம் வழி கொடுத்திருக்கிறது. திருமணத்தை ஐந்து நாட்கள் இருந்து செய்ய முடியவில்லை ஏதோ ஒரு காரணத்தினால் ஒரு நாளில் நடந்து விட்டது அல்லது நமக்கு அதை தெரிந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்றால் பிறகு நாம் அதை இன்னொருமுறை செய்து சரிசெய்து கொள்ள முடியும். ஆனால் உபநயனத்தில் புனர் உபநயனம் என்று கிடையாது அவ்வாறு செய்து கொள்ள முடியாது. புணர் உபநயனம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் சில பிராயச்சித்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. சில பாவங்களை செய்துவிட்டால் அதற்காக சில பரிகாரங்களை செய்து புனர் உபநயனம் செய்து கொள்வது என்று ஒன்று வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்தக் கலியில் அது நிஷித்தம். கலியிலே இந்த புனர் உபநயனம் செய்யக்கூடாது. யார் புணர் உபநயனம் செய்து கொண்டிருக்கிறானோ அவன் வேதம் சொல்வதற்கு அருகதை இல்லை. சிராத்தத்திற்கு அவனை சொல்லக்கூடாது. அவனுடைய குடும்பத்திலும் சம்பந்தம் வைத்துக் கொள்ளக்கூடாது என்கின்ற அளவிற்கு  நம்முடைய தர்ம சாஸ்திரம் சொல்லியிருக்கிறது.* ஆக இந்த உபநயனம் என்பது மிக முக்கியமான ஒரு கர்மா. 

குழந்தைகளுக்கு ஆயுஷ் கர்மா என்று பெயர் அதை நாம் சரியான முறையில் செய்ய வேண்டும் அதில் ஏதாவது குறைகள் இருந்தால், அது அந்த குழந்தையை பாதித்து விடக்கூடாது என்பதற்காக, முதலில் அந்த உபநயன மந்திரங்கள் எல்லாம் சொல்லி வைத்து, அதை தினமும் பிரம்மயஞ்யமாக  சொல்ல சொல்வது வழக்கம். அது மாதிரி இந்த தௌமியர், வேதகா என்கின்ற மாணவனுக்கு அதுபோன்று செய்ய சொல்கிறார். அவர் என்ன சொல்கிறார் என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.

No comments:

Post a Comment