Today's Sri Chandrasekaramrutham (08.08.20):
* "சத்யம் வத" என்ற வேத விதியின் கதா ரூபம் தான் ஹரிச்சந்திரன் வரலாறு.
* "தர்மம் சர" என்கிற வேதத்தின் கட்டத்துக்கு மகாபாரதம் முழுவதும் விளக்கம் ஆகிறது.
* "மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ" என்கிற வேத வாக்கியங்களுக்கு ஸ்ரீ ராமன் சரித்திரம் இருக்கிறது.
* ஆத்ம விருத்திக்காக வேதத்தில் சொல்லப்பட்ட சூக்ஷ்மங்கள், பொது ஜனங்களுக்கு புராண/கதை ரூபத்தில் இருக்கிறது.
* நித்ய பூஜை போலவே பிரவசனமும் கோயில்களில் அன்றாடம் நடக்க வேண்டும்.
* அந்த காலத்தில் வேத தர்மங்களை "பௌராணிகர்கள்" பிரச்சாரம் செய்தனர். இப்போது இது பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் கடமையும் கூட.
* எழுத்தாளர்கள் ஜனங்களுக்குப் பிடித்ததையே மட்டும் எழுதாமல், அவர்கள் அறிவை, மனத்தை உயர்த்துகிற விதத்தில் எழுத வேண்டும்.
Pradosha Shankara Pratyaksha Shankara!
🙏🙏🙏🙏
No comments:
Post a Comment