விஷ்ணு ஸஹஸ்ர நாமம்
941. அனாதி-தாமே அனைத்திற்கும் காரணமாக இருப்பதால் தமக்கு காரணம் இல்லாதவர்.
942. பூர்புவ:- பூலோகமாகவும் புவர்லோகமாகவும் இருப்பவர்.
943. லக்ஷ்மீ: - உலகின் சோபையாய் இருப்பவர்
944.ஸுவீர;-மகத்தான வீர உடையவர்
945.ருசிராங்கத: -அழகான தோள்வளைகள் உடையவர். மிக்க அழகான தம் திவ்ய மங்கள விக்ரஹத்தை பக்தர்கள் கண்டு களிக்கும்படி செய்பவர்.
946.ஜனன:-உயிர்களைப் படைப்பவர்
947.ஜனஜன்மாதி: -ஜனங்களின் உற்பத்திக்குக் காரணமானவர்
948. பீம:- பிபேதி அஸ்மாத் இதி பீம: . தேவர்கள் பயந்து அவரவர் கடமையைச் செய்யக் காரணமானவர். பஞ்ச பூதங்களும் அவர் ஆணைக்கு உட்பட்டு செயல்படச் செய்பவர்
949. பீமபராக்ரம:- அசுரர்களுக்கு பயத்தைக் கொடுக்கும் பராக்ரமம் உடையவர்
950.ஆதாரநிலய: -எல்லவற்றிற்கும் ஆதாரமாக இருப்பவர்
951. தாதா- தாமே தருமத்தை உபதேசித்தும் அனுஷ்டித்தும்
952.புஷ்பஹாஸ:-மலர்ந்த புஷ்பம் போன்றவர்
953. ப்ரஜாகர:-எப்போதும் விழித்துக் கொண்டிருப்பவர்
954.ஊர்த்வக:- எல்லாவற்றிற்கும் மேல் இருப்பவர்.
955. ஸத்பதாசார: -சதாசாரங்களில் பக்தர்களை ப்ரவர்த்திக்கச் செய்பவர்.
956.ப்ராணத:-எல்லோருக்கும் உயிரளிப்பவர்
957. ப்ரணவ:- ஓம்கார பொருளாய் இருப்பவர்
958.பண:-எல்லாவற்றையும் இயக்குபவர்.
959. ப்ரமாணம்-எல்லாவற்றிற்கும் ப்ரமாணமாக இருப்பவர், வெத ப்ரமாணமாக இருப்பதால்.
960. ப்ராணநிலய:-பிராணனுக்கு உறைவிடமாக இருப்பவர் அல்லது ஜீவாத்மாவிற்கு உறைவிடமாக இருப்பவர்.
961. ப்ராண த்ருத்-எல்ல உயிர்களையும் போஷிப்பவர்
962. ப்ராண ஜீவன:- பிராணிகலை ஜீவிக்கச் செய்பவர்.
963. ததவம்- பரம்பொருள் ஆகியவர்
964. தத்வவித்—தமது ஸ்வரூபத்தை தாம் மட்டுமே அறிபவர்.
965. ஏகாத்மா- ஒன்றேயாகிய ஆத்மா. எல்லாவற்றிலும் அந்த்ராத்மாவாக இருப்பதால்.
ஏகோ தேவ: ஸர்வபூதேஷு கூட: ஸர்வவ்யாபீ ஸர்வ பூதாந்தராத்மா- உபனிஷத்.
966. ஜன்மம்ருத்யுஜராதிக;- பிறப்பு இறப்பு மூப்பு இவற்றைக் கடந்தவர்.
ந ஜாயதே ம்ரியதே வா விபஸ்சித்- உபனிஷத்.
967. பூர்புவஸ்வஸ்தரு;- பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் என்ற மூன்று உலகத்தையும் வியாபிக்கும் ஸம்ஸார வ்ருக்ஷ வடிவினர்.
968. தார:- ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிப்பவர்.
969. ஸவிதா- ஸூதே ஸர்வம் இதி ஸவிதா. எல்லாவற்றையும் உண்டாக்குகிறவர்
970. ப்ரபிதாமஹ:- பிதாமஹரான ப்ரம்மாவின் பிதாவானவர். எல்லா கல்பங்களிலும் தோன்றும் ப்ரம்மாக்களுக்கு தந்தையானவர்.
971. யக்ஞ:- யாகமே உருவானவர்.
972. யக்ஞபதி:- யாகங்களின் பலனை அளிப்பவர்.
973. யஜ்வா- யாகங்களை செய்பவரும் அவரே.
974.யக்ஞாங்க:-யாகங்களைத் தன் உறுப்புகளாகக் கொண்ட யக்ஞ வராஹ மூர்த்தியானவர்.
975. யக்ஞவாஹன: -யாகங்களை நடயத்துபவர்.
976. யக்ஞ ப்ருத்-யாகங்களை ஏர்ருக் கொள்பவர்.
977. யக்ஞ க்ருத்- ஆதியில் யக்ஞத்தை சிருஷ்டித்தவர்.
978. யக்ஞீ- எல்லா யாகங்களும் அவருக்கு அர்ப்பணம் ஆக உடையவர்.
979. யக்ஞ புக் – யாகங்களை அனுபவிப்பவர்.
980. யக்ஞஸாதன: - யாகங்கலை தம்மை அடையும் சாதனமாகக் காட்டுபவர்.
981. யக்ஞாந்தக்ருத்- யாகங்களை முற்றுப் பெறச் செய்பவர்
982. யக்ஞ குஹ்யம் – யக்ஞங்களுள் ரகசியமான ஞான யக்ஞமாக இருப்பவர் .
மேற்கூறிய நாமங்கள் யாகயக்ஞங்கள் பலனை எதிர்பாராது பகவதர்ப்பணமாக செய்யும் எல்லா கர்மங்கள் இவைகளுக்கு அவரே, செய்பவர், செய்யும் கர்மம், அதை அனுபவிப்பவர் எல்லாமாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது
.
983.. அன்னம்- எல்லோராலும் அன்னம் போல அனுபவிக்கப்படுகின்றவர் .
'உண்ணும்சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யுமெல்லாம் கண்ணன், என்ற நம்மாழ்வார் வாக்குப்படி.
984. அன்னாத:- உலகம் அனைத்தையும் ஸம்ஹார காலத்தில் உண்பவர்.
985. ஆத்ம யோனி:-தாமே தனக்குக் காரணமாக இருப்பவர்
986. ஸ்வயம் ஜாத:- அதனால் தானாகத் தோன்றியவர்.
987. வைகான:- ஸம்சார துக்கத்தை வேரோடு பெயர்ப்பவர்
988. ஸாமகாயன:-சாம வேதத்தால் துதிக்கப்படுகிறவர்
989. தேவகீ நந்தன:-தேவகியின் புதல்வனான க்ருஷ்ணன்.
பீஷ்மர் இதனால் இங்கு கூறப்பட்ட எல்லா நாமங்களுக்கும் அதிபதி கண்ணனே எனக் குறிப்பிடுகிறார்..
990. ஸ்ரஷ்டா- அவரே ஸ்ருஷ்டிகர்த்தா
991.க்ஷிதீச:- பூதேவியின் நாதனாக இருந்தவரே இங்கு பூபார்த்தைத் தீர்க்க அவதரித்துள்ளார் என்பது பொருள்.
992. பாபநாசன:- நினைத்தாலும் நாமங்களைக் கூறினாலும் எல்லா பாவங்களையும் போக்குகிறவர்.
993.சங்கப்ருத்- பாஞ்ச ஜன்யம் தரித்தவர்.
பாஞ்சஜன்யம் முதல் தன்மாத்திரையான சப்த உருவாதலால் சூக்ஷ்ம ரூபமான பஞ்ச பூதங்களைக்(தன்மாத்திரை) குறிக்கும்
994.நந்தகீ- நந்தகீ என்ற பகவானின் வாள் ஞானஸ்வரூபமானது.
995.சக்ரீ- சக்ரதாரி. மனஸ் தத்துவத்தைக் குறிக்கிறது
996. சார்ங்கதன்வா- சார்ங்கம் என்ற வில்லை உடையவர். இது சாத்விக அஹங்காரத்தைக் குறிக்கும்.
997. கதாதர;- கதை புத்திதத்துவம்.
998. ரதாங்க பாணி- ரதத்தின் அங்கம் என்பது சக்கரம் அதைக் கையில் உடையவர். இது சக்ரீ என்ற பதத்தைத் திரும்பக் கூறியது அல்ல. மற்ற ஆயுதங்கள் இருந்தும் சக்ராயுதம் மட்டும் பிரயொகத்திற்குச் சித்தமாக அவர் கையில் உள்ளது என்று பொருள்.
பீஷ்மருக்குக் கண்ணன் அவருடைய ப்ரதிக்ஞையைக் காக்க தேர் சக்கரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு எதிர்த்து வந்தது நினைவுக்கு வந்திருக்கலாம்.
999. அக்ஷோப்ய:- கலக்கமுடியாதவர். தன் சரணாகத ரக்ஷணம் என்னும் விரதத்தில் இருந்து வழுவாதவர்.
1000. ஸர்வப்ரஹரணாயுத:-எய்துவன எல்லாம் ஆயுதமாகக் கொண்டவர். ராமாவதாரத்தில் தர்ப்பைப்புல் பிரம்மாஸ்திரம் ஆனது. நரசிம்ஹாவதாரத்தில் நகங்களே ஆயுதம். அவருக்கு ஆயுதமே தேவை இல்லை . சங்கல்ப மாத்திரத்திலேயெ எதிரிகள் அழிவார்கள். அதனால் தான் " நான் இவர்களை எல்லாம் ஏற்கெனவே கொன்றாகிவிட்டது. நீ ஒரு கருவியே என்ரு விஸ்வரூப தரிசனத்தின் போது அர்ஜுனனிடம் கூறினார்.
No comments:
Post a Comment