விஷ்ணு ஸஹஸ்ர நாமம்
912 முதல் 940 வரை கஜேந்திர மோக்ஷ வரலாற்றைக் குறிப்பதாகக் கருதப் படுகிறது.
912. சப்தஸஹ:- எல்லா வேதங்களாலும் கோஷிக்கப்படுவதால் எல்லா சப்தங்களையும் தாங்குகிறவர் . கஜேந்திரனுக்கு உதவியது போல்தெளிவான வாக்கு இல்லாத ஜீவராசிகளின் சப்தங்களையும் கேட்டு ஆவன செய்பவர்.
913. சிசிர:- மூவகை தாபங்களால் வருந்தினோர்க்கு களைப்பாறும் குளிர்ந்த இடமாக இருப்பவர். கஜேந்திரனின் துன்பத்தைப் போக்கியவர் . .
914. சர்வரீகர: -இரவு போன்ற இருளைச் செய்பவர். ஞானிகளுக்கு இரவு போன்றது சம்சாரம். அஞ்ஞானிகளுக்கு இரவு போன்றது ஆத்மஞானம்.
யாநிசா சர்வபூதானாம் தஸ்யாம் ஜாக்ரதி ஸம்யமீ
யஸ்யாம் ஜாகர்த்தி பூதானி ஸா நிசா பச்யதோ முனே: - கீ. 2. 69
'எல்லா ப்ராணிகளுக்கும் எது இரவோ அதில் மனமடங்கிய முனிவன் விழித்திருக்கிறான். எதில் ப்ராணிகள் விழிப்புடன் இருக்கின்றனவோ அது முனிவனுக்கு இரவு போன்றது. '
ச்ரு என்றால் ஹிம்சை . சர்வரீ என்பது கொல்லும் ஆயுதங்கள். கஜெந்திரனைக் காக்க எல்லா ஆயுதமும் ஏந்தி வந்தாராம்
915. அக்ரூர:-கொடுமை இல்லாதவர். தவறு செய்தவர்க்கும் திருந்த சந்தர்ப்பம் அளிக்கிறான். ராவணனையும் இன்று போய் நாளை வா எனக்கூறியவன். கஜேந்த்ரனுடன் முதலைக்கும் சேர்த்து மோக்ஷம் அளித்தவன். அவன் தண்டிப்பதும் திருத்துவதற்காகவே.
916. பேசல: - அழகுள்ளவர். கஜெந்திரனைக் காக்க விரைந்து வருகையில் ஆபரணங்களை தாறு மாறாக அணிந்து வந்தாலும் மிக அழகாகத் தோற்றம்அளித்தார்.
917. தக்ஷ: -சாமர்த்தியம் மிகுந்தவர். வேகமாக வந்தவர் .
918. தக்ஷிண:-பக்தர்களைக் காப்பதில் வல்லமை உடையவர்.
919. க்ஷாமிணாம் வர: -பொறுப்பவரில் சிறந்தவர் . ராமர் க்ஷமயா ப்ரிதிவீஸம: , பொறுமையில் பூமியைப் போன்றவர் என்று வர்ணிக்கப்படுகிறார்.
920.வித்வத்தம: - எல்லாம் அறிந்தவர்
921. வீதபய:- பயத்தைப் போக்குகிறவர்
922. புண்யச்ரவணகீர்த்தன:-தம்மைப் பற்றி கேட்பவர்க்கும் கீர்த்தனம் செய்பவர்க்கும் புண்ணியம் அளிப்பவர். கஜேந்திரனின் வரலாறு கேட்பவர்க்கும் சொல்பவர்க்கும் புண்ணியத்தை அளிக்கும் .
923. உத்தாரண: -சம்சாரக்கடலில் இருந்து கரையேற்றுபவர் . கஜேந்திரனுடன் முதலையையும் கரையேற்றினார்.
924. துஷ்க்ருதிஹா-பாவம் செய்பவரை அழிப்பவர்.
925.புண்ய: - புண்ணியத்தை அளிப்பவர்
926. துஸ்ஸ்வப்ன நாசன:- கெட்ட கனவுகளை போக்குபவர் . கஜேந்திர மோக்ஷம் நினைப்பவர்க்கு கெட்ட கனவுகள் வராது என்று பாகவதம் கூறுகிறது.
927.வீரஹா-வி +இர+ஹா- கஜேந்திரனுடைய பந்தங்களை அறுத்து மோக்ஷம் அளித்தவர். சம்சாரத்தில் உழல்வோருடைய கர்ம வினையை அழித்து மோக்ஷம் அளிப்பவர்..
928.ரக்ஷண: -பக்தர்களைக் காப்பவர்
929. ஸந்த: - ஸந்தனோதி இதி ஸந்த: - பக்தர்களின் புகழை பரப்புபவர்.
930.ஜீவன: - எல்லாஉயிர்கட்குள்ளும் பிராணனாக் இருந்து ஜீவிக்கச்செய்பவர்
931. பர்யவஸ்தித: -எங்கும் வ்யாபித்து இருப்பவர்.
932. அனந்தரூப:- ஆதிசேஷ வடிவானவர். அல்லது கணக்கற்ற வடிவினர்
933. அனந்தஶ்ரீ: - அளவற்ற மஹிமை உடையவர
934. ஜிதமன்யு: - ஹ்ருஷீகேசராக இருப்பதால் கோபத்தை வென்றவர்
935. பயாபஹ: - பக்தர்களின் பயத்தைப் போக்குகின்றவர்
936. சதுரஶ்ர: -ஸகலவல்லமை உடையவர்
937. கபீராத்மா- ஆழங்காண முடியாதவர்
938. விதிச: - விதிப்படி கர்மபலன்களை அளிப்பவர்
939. வ்யாதிச:- இந்த்ராதி தேவர்களுக்கு வெவ்வேறான கட்டளைகளை வகுப்பவர்
940. திச: -திசதி இதி திச: - வேதங்கள் மூலம் எல்லா கர்மங்களுக்கும் பலனைச் சுட்டிக் காட்டுபவர்
No comments:
Post a Comment