"எப்போதும் ராமநாமா சொல்லிண்டு இரு"
கும்பகோணம் பக்கத்துலே கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானத்திலே கொஞ்சநாள் தங்கு. (என்ன, ஆஞ்சநேய ஸ்வாமி, ராமசேவைக்குப் போயிட்டாரா?" என்று கேட்டார் பெரியவா குறும்புத்தனமாக. !!!!!)
வட இந்தியாவில் வேலை பார்க்கும் நம் ஊர்காரர் ஒருவர், மஹாபெரியவா தரிசனத்துக்கு வந்தார். அவருக்கு ஒரு பிரச்சினை. செவிகளில், எப்போதும் ஏதோ பேச்சு கேட்டு கொண்டே இருக்கிறது !
அந்தப் பேச்சு, ஆஞ்சநேயருடைய குரல் என்ற எண்ணம் எப்படியோ வந்துவிட்டது அவருக்கு.
இந்தத் தெய்வீக சக்தியை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா ? நண்பர்கள் தான் சும்மா இருக்க விடுவார்களா ? குறி சொல்வதற்கு என்று ஒரு நாளை ஒதுக்கினார்.
யாருக்குத்தான் கஷ்டங்கள் இல்லை ? எனவே கூட்டமான கூட்டம். அதிலும் கட்டணம் ஏதுமில்லை என்றால் கூட்டத்துக்குக் கேட்க வேண்டுமா ?
ஆனால் குறி சொல்கிற அன்பருக்குத்தான் மன நிம்மதி இல்லை. பெரியவாளிடம் வேண்டிக்கொண்டார் :
"வடக்கே இருப்பதற்கு எனக்குப் பிடிக்கவில்லை. பெரியவா அனுக்ரஹத்தாலே, மெட்ராசுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கணும் …."
"எங்கிட்ட ஏன் சொல்றே ? உனக்குத்தான் ஆஞ்சநேயர் அருள் பரிபூரணமா இருக்கே … ஹனுமானிடமே பிராத்தனை பண்ணிக்கோயேன் …."
அன்பர், அப்படியே கூசிக்குறுகிப் போய்விட்டார்.
" ஆஞ்சநேயர் பேசுகிறார் என்பது நானாகச் சொன்னதுதான். என்ன துர்தேவதையோ தெரியவில்லை. என்னைத் தூங்கவிடமாட்டேன் என்கிறது ..... அது சொல்கிற பதில் சிலபேர்களுக்குப் பலித்துவிடுவதால் எல்லோரும் நம்புகிறார்கள். எனக்குத்தான் நம்பிக்கையில்லை.
பெரியவா என் கஷ்டத்தைப் போக்கணும் …"
பெரியவாள் சொன்னார்கள் :
"எப்போதும் ராமநாமா சொல்லிண்டு இரு. கும்பகோணம் பக்கத்துலே கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானத்திலே கொஞ்சநாள் தங்கு. "
பத்து நாள்கள் கழித்து மகிழ்ச்சியோடு வந்து பெரியவாவை தரிஸனம் செய்தார் அன்பர்.
"என்ன, ஆஞ்சநேய ஸ்வாமி, ராமசேவைக்குப் போயிட்டாரா?"
என்று கேட்டார் பெரியவா குறும்புத்தனமாக. !!!!!
ஸ்ரீ மஹாபெரியவாளின் ஆக்ஞைப்படி ( புரட்டாசி பௌர்ணமி திதியில் ) ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகளின் ஆராதனை ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது

No comments:
Post a Comment