ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் க்ருதி
ப. அபி4மான(மெ)ன்னடு3 கல்கு3ரா
அனாது2டை3ன நாது3பை நீகு
அ. அபராத4மு(ல)ன்னி மன்னிம்பு(ம)ய்ய
அபி4ராம பட்டாபி4ராம நாயந்து3 (அபி4)
ச. கன்ன தல்லியு கன்ன தண்ட்3ரியு
அன்னியு நீவே(ய)னி நம்ம லேதா3
நினு வினா க3தி நா(கெ)வரு லேரே
நன்னு ப்3ரோவு த்யாக3ராஜ வினுத (அபி4)
அன்பு என்றுண்டாகுமய்யா,
அனாதையான என்மீது உனக்கு?
குற்றங்கள் யாவற்றையும் மன்னியுமய்யா;
களிப்பூட்டும் பட்டாபிராமா! என்னிடம்
அன்பு என்றுண்டாகுமய்யா,
அனாதையான என்மீது உனக்கு?
பெற்ற தாயும், பெற்ற தந்தையும்,
யாவும் நீயேயென நம்பவில்லையா?
உன்னையன்றி கதியெனக்கெவருமிலரே;
என்னைக் காப்பாய், தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
அன்பு என்றுண்டாகுமய்யா,
அனாதையான என்மீது உனக்கு?
No comments:
Post a Comment