Thursday, April 25, 2019

Vishnu Sahasranama 277 to 284 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்-3௦

277. ஓஜ:, தேஜ:, த்யுதிதர: - ஓஜ: ( பலம்) தேஜ: ( கீர்த்தி) த்யுதி: ( ஒளி) தான் தரதி இதி – இவை உடையவன்.

278. பிரகாசாத்மா- ஸ்வயம் பிரகாசம் உடையவன்.

279. ப்ரதாபன:- உலகை ஒளிபெறச் செய்பவன். சூரியன் முதலிய ஒளி வடிவங்களின் ஒளியாய் இருப்பவன்.

280. ருத்த: -RdhdhaH- ருத்தி என்றால் ஸம்ருத்தி அல்லது செல்வம் ,அனந்த கல்யாண குணங்களாகிய செல்வத்தை உடையவர்.

281. ஸ்பஷ்டாக்ஷர: -அக்ஷரம் அல்லது அகாரம் நாரயணனைக் குறிக்கிறது. வேதம் என்றும் கொள்ளலாம். வேதத்தின் மூலம் பிரகாசப்படுத்தப்பட்டவன். உதாத்த ஸ்வரமுள்ள ஓம் என்னும் எழுத்தினால் குறிப்பிடப்படுபவன். 'ஓமித்யேகாக்ஷரம் பிரம்ம,' –உபநிஷத்.

282. மந்த்ர: - மந்தாரம் த்ராயதே இதி மந்த்ர: - அவனுடைய நாமாக்ஷரத்தைச் சொல்பவரை காப்பாற்றுபவன் அல்லது வேதம் ஒதுபவரைக் காப்பாற்றுபவன். அவனே மந்தரம் அவனே வேதம்.

283. சந்த்ராம்சு:- சந்திரனைப்போல் குளிர்ந்து சம்சாரமாகிற நெருப்பு எரிக்காமல் காப்பவன்.

284.பாஸ்கரத்யுதி: - பா என்றால் ஒளி. தத் கரோதி இதி பாஸ்கர: ஒளி வடிவமாக உள்ளவர். 'ஆயிரம் சூரியன் ஒருங்குகூடி உதிக்குமேயானால் அது பகவானுடைய பிரகாசத்திற்கு சமம்.' ( ப. கீ. 11. 12).

  

No comments:

Post a Comment