Tuesday, April 2, 2019

Vishnu Sahasranama 154 to 165 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்- 18

154. உபேந்திர:-உபகதம் இந்த்ரம் அனுஜத்வேன – வாமனராக காச்யபருக்கும் அதிதிக்கும் புதல்வராக ஜனித்ததால் இந்திரனுக்கு அனுஜன், இளைய சகோதரன் ஆகிறார்.

155. வாமன:-வாமனனாக அவதரித்தவர்,
த்ரஷ்ட்ரூன் ஸ்வகாந்தா வாமானி நயதி- பார்ப்பவர்களை தன்னுடைய காந்தியால் இன்பநிலைக்கு கொண்டு செல்பவர்.

பாகவதத்தில் வாமனரூபம் கீழ்க் கண்டவாறு வர்ணிக்கப்படுகிறது. 
தர்சநீயம் மனோரமம் ரூபானுரூபாவயவம் , பகவானின் வாமன ரூபம் ஆசாகான் அங்கங்களுடன் பார்ப்பவர்களை பரவசப்படுத்துவதாக இருந்தது

156. வாமன என்றால் குள்ளமான உருவம். ப்ராம்சுய் என்றால் அதற்கு எதிர்பதம். மிகவும் உயரமான உருவம். த்ரிவிக்ரமன்.

157. அமோக: - மோக ( मोघ ) என்றால் பயன்படாத என்று பொருள். ( மயக்கம் அல்ல அது மோஹம்) பகவானின் எந்த செயலும் பொருளும் பயனும் உடையதாகையால் அமோக: எனப்படுகிறான்.

இந்திரன், மகாபலி இருவரையும் காத்ததும் அல்லாமல் மகாபலியின் பக்தியை உலகுக்கு காட்டவே எடுத்தது வாமனாவதாரம்.

158. சுசி: - தூயவன். உலகில் படைக்கப்பட்டதெல்லாம் இயற்கையில் தூயவை. ஏனெனில் எல்லாமே உள்ளும் வெளியும் பகவத்ஸ்வரூபம்.முக்குணங்களின் சேர்க்கையால்தான் மாசுள்ளவையாக மாறுகின்றன.

தன்னை ஆச்ரயிப்பவர்களை தூயவர்களாக மாறுவதாலும் சுசி எனப்படுகிறான். 'வாயினால் பாடி மனிதனால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்.' என்ற கோதை வாக்கின்படி.

159. ஊர்ஜித: - மாபெரும் சக்தி உடையோன் . ஊர்ஜ என்றால் சக்தி . இது பகவானின் ஆறு குணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

160.அதீந்திர: இந்திரனுக்கு மேற்பட்டவர். அவதாரங்கள் இந்திரனையும் தேவர்களையும் காக்கவே.அப்படி இருந்தும் இந்திரன் கிருஷ்ணாவதாரத்தின் போது அதை மறந்து கர்வம் கொண்டதால் அவனுக்கு பாடம் புகட்ட கோவர்தநோத்தாரணம் செய்யவேண்டியதாயிற்று.

அதீந்திர: என்பது அதீந்த்ரிய: இந்த்ரியங்களுக்கு எட்டாதவன் என்றும் பொருள்

161. ஸங்க்ரஹ: ஸம்யக் க்ருஹ்யதே இதி. பக்தியால் நன்கு அறியப்படுபவன். அல்லது ஸர்வம் க்ருஹ்யதே , எல்லா உயிர்களுக்கும் ஆத்மாவாக உள்ளிருந்து நடத்துபவன்.

162. ஸர்க:- ஸர்கம் என்றால் சிருஷ்டி. சிருஷ்டிகர்த்தா.'
163. த்ருதாத்மா – த்ருதம் ஸர்வம் ஆத்மநா – எல்லாவற்றையும் தாங்குபவன்.
164. நியம: -ஸர்வம் நியம்யதி, எல்லாவற்றையும் நிர்வஹிப்பவன்
165. யம: - யமயதி இதி யம: சம்ஹரிப்பவன் . 
'ஆத்மன: அந்தர: திஷ்டன் ஆத்மானம் யமயதி' என்பது உபநிஷத் வாக்கியம். எல்லாவற்றிற்கும் ஆத்மாவாக உள்ளிருந்து நடத்துபவன்


No comments:

Post a Comment