ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 7- அத்தியாயம் 11, 12, 13
அத்தியாயம் 11
நாரதர் வர்ணாச்ரம தர்மங்களைப் பற்றி யுதிஷ்டிரருக்கு கூறுகிறார்.
சாதாரண தர்மம்
இது எல்லோராலும் பின்பற்றவேண்டியது.
ஸத்யம்- எண்ணத்திலும் செயலிலும் உண்மையாக இருத்தல்.
தயை- எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுதல்.
சௌசம் –உடல் உள்ளம் இரண்டிலும் தூய்மை.
திதிக்ஷா- பொறுமை
மற்றும் அஹிம்சை, தன்னிடம் இருப்பதை பகிர்ந்துகொள்ளல், இந்த்ரியங்களையும் மனதையும் கட்டுப் படுத்துதல், அறிவை வளர்த்தல், சமூக சேவை, திருப்தி இவையாகும்.
நான்கு வர்ணத்தாரின் தர்மங்கள்.
பிராமணர்கள் – வேதம் கற்றல், கற்பித்தல் . யாக யக்ஞாதிகளை செய்தல், தானம், நியாய முறையில் பொருள் ஈட்டியவர்களிடம் இருந்து மட்டும் தானம் பெறுதல்.
க்ஷத்ரியர்கள்- பிராம்மணர்களுக்குரிய எல்லா தர்மங்களும். அவை தவிர, தானம் கொடுப்பது மட்டுமே க்ஷத்ரியதர்மம். வாங்குவது அல்ல. சமூகத்தைக் காப்பதற்காக அந்தணர் தவிர மற்ற மக்களிடம் வரி வசூலிக்க அதிகாரம் உண்டு. யாகாதிகளில் எஜமானராக இருப்பது. இவை க்ஷத்ரியர்களின் தர்மங்கள்.
வைச்யர்கள் -விவசாயம் அல்லது வாணிபம், இதுவும் சமூக நலனுக்காகவே அன்றி சுய லாபத்திற்கல்ல.
நாலாம் வருணத்தாரின் தர்மம் சேவை செய்வது.
அத்தியாயம் 12
ஆச்ரமதர்மம்
ப்ரம்மச்சர்யாச்ரமம் – பிரம்மசாரியானவன் குருகுல வாசம் முடிந்ததும் குருவுக்கு தக்ஷிணை கொடுத்த பின் அவர் அனுமதியுடன் க்ருஹச்தாஸ்ரமத்தை கைக்கொள்ள வேண்டும். அதில் விருய்ப்பம் இல்லாவிடில் நேராக சன்யாசம் மேற்கொள்ளலாம்.
வானப்ரஸ்தாச்ரமம்
இது மூன்றாவதாயினும் மற்ற இரண்டும் பின்வரும் அத்தியாயங்களில் விரிவாக விளக்க பட்டுள்ளதால் பிரம்மச்சர்யத்திற்கு அடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. இது சன்யாசம் மேற்கொள்ளாமல் கிருஹ்ஸ்தராக இருந்து முதுமையில் வனத்திற்குச் சென்று பகவத்ஸ்மரணையில் ஈடுபட்டு தன் வாழ்வை முடிப்பதாகும். விதுரர் த்ருதராஷ்டிரரின் கடைசி காலத்தில் அதைத்தான் உபதேசித்தார்.
அத்தியாயம் 13
சன்யாசம்
ஒரு சன்யாசியானவன் ஆன்மீகம் சம்பந்தப்படாத எந்த சாஸ்திரத்தையும் பொருட்படுத்தக்கூடாது. தன் நலம் கருதி எந்தச் செயலும் செய்யக்கூடாது. . விவாதங்களில் ஈடுபடக் கூடாது. சீடர்களை அடைய முயற்ச்சிக்கக் கூடாது. ஒரு பித்தனைப் போலவும், குழந்தையைப் போலவும் சஞ்சரிக்க வேண்டும்.
இதை விளக்க நாரதர் பிரஹ்லாதனுக்கும் ஒரு அவதூதருக்கும் நிகழ்ந்த ஒரு சம்பாஷணையைக் கூறுகிறார்.
பிரஹ்லாதன் ஒரு சமயம் மலைப்பாம்பைப் போல ஒரே இடத்தில் நகராமல் இருந்த ஒரு அவதூதரைக் கண்டான்., அவர் எவ்வாறு தன் உடலைப் பேணுகிறார் என்று கேட்க அவர் பகவான் இதயத்தில் இருக்கையில் வேறு என்ன வேண்டும் என்று கூறினார்.
ஒரு தேனீ மலருக்கு மலர் ஓடி தேனை சேகரிப்பது போல் மனிதர் ஓடி ஓடி செல்வம் சேர்த்துக் கடைசியில் உறக்கம் இன்றி அமைதி இன்றி அவதிப்படுகிறான் என்றுரைத்த அவர் ஒரு மலைப்பாம்பு உணவைத்தேடிப் போவதில்லை . ஆனால் உணவு அதனிடம் தானாக வருகிறது.
அதைப்போல தானும் இருப்பதாகக் கூறி யாராவது உணவளித்தால் மட்டுமே உண்ணுவதாகவும் இல்லாவிடில் அதைப்பற்றி கவலை இல்லாமல் இருப்பதாகவும் கூறி, உடல் மீது பற்றில்லாமல் ஆன்மாவிடமே லயித்து இருப்பதாகவும் விடை அளித்தார்.
இதையே பஜகோவிந்தத்தில் ,
யோகரதோ வா, போகரதோ வா,
ஸங்கரதோ வா, ஸங்கவிஹீன:,
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்−
நந்ததி, நந்ததி, நந்ததியேவ! (baja. 19)
என்ற ஸ்லோகம் கூறுகிறது.
உலகப் பற்றைத் துறந்தவன் போகமா யோகமோ எதுவாகிலும், அவன் சித்தம் எப்போதும் பிரம்மனிடம் லயித்திருப்பதால் ஆனந்தத்தில் இருக்கிறான்.
அடுத்த இரு அத்தியாயங்கள் கிர்ஹஸ்த தர்மத்தை விவரிக்கின்றன. அத்துடன் ஏழாவது ஸ்கந்தம் முடிவுறுகிறது.
No comments:
Post a Comment