நாரத பக்தி சூத்திரம்
56. கௌணீ த்ரிதா குணபேதாத் ஆர்தாதி பேதாத் ச
சாதாரண பக்தி மூன்று விதம். அவை பக்தனுடைய மூன்று குணத்தையும் நோக்கத்தையும் பொறுத்தது.
இது 54-வது சூத்திரத்தில் முக்கிய அல்லது பராபக்தியைக் காட்டிலும் வேறானது. ஆனால் அது முடிவில் பராபக்தியாக மாறிவிடும்.
1. மூன்று குணங்களாகிய ஸத்வம் ரஜஸ் தமஸ் இவைகளின் வகைப்படி உண்டாகும் பக்தி.
முக்தியடையும் நோக்கத்துடன் வரும் பக்தியானது சாத்வீக பக்தி. இந்த உண்மை பக்தர்களின் பக்தியானது பராபக்தியில் முடியும்.
பலனை எதிரபார்த்துச்செய்யும் பக்தி ராஜஸ பக்தியாகும். ராவணன் சிறந்த சிவபக்தனாயினும் அதன் மூலம் கிடைத்த வரத்தை உலகை அடக்கி ஆளவே பயன்படுத்தினான். பாணாசுரனும் இதற்கு ஒரு உதாரணம்.,
ஆடம்பரமாகப் புகழையோ பொருளையோ விரும்பி அதற்கான தேவதைகளை உபாசிப்பது ராஜஸ பக்தியாகும்.
பேத புத்தியுடன் பிறரைப் பழிவாங்கவோ ஹிம்சிக்கவோ துர்தேவதைகளை வழிபடுவது தாமச பக்தியாகும்.,
2.மூன்றுவகை நோக்கம் கொண்ட பக்தர்கள்.
இது பின்வரும் பகவத் கீதை ச்லோகத்தில் கூறப்பட்டுள்ளது.
சதுர்விதா பஜந்தே மாம் ஜனா: ஸுக்ருதின: அர்ஜுன
ஆர்த்தீ ஜிக்ஞாஸு அர்த்தார்த்தீ ஞாநீ ச பரதர்ஷப (ப.கீ. 7.16)
"நற்செயல்கள் செய்கின்றவர்களாகவும் என்னிடம் பக்தியுள்ளவர்களாகவும் இருக்கும் மனிதர்கள் நால்வகைப்படுவர். அவர்கள், துன்பமடைந்தோர், உண்மை அறிவை வேண்டுவோர், இஷ்டாபூர்த்தியை வேண்டுவோர், ஞானிகள் என்பவராவர். "
இதில் ஞானி என்பவன் பராபக்தியை அடைந்தவன். மற்ற மூவரும் சாதாரண பக்தி கொண்டவர்கள்
.
ஆர்தன்- துன்பம் வரும்போது அதை போக்கிக்கொள்ள இறைவனை பக்தி செய்பவர். இதற்கு கஜேந்திரன், திரௌபதி, உதாரணம்.
ஜிக்ஞாஸு- அறிவைப் பெற வேண்டி ஆவலுடன் பக்தி செய்பவர்கள். உத்தவர், பரீக்ஷித், வியாசர், வசிஷ்டர் விஸ்வாமித்திரர் போன்றவர்கள்.
அர்த்தார்த்தீ- ஏதோ ஒரு பயனை வேண்டி பக்தி செய்பவர்கள். இதற்கு துருவன் , சுக்ரீவன், விபீஷணன் உதாரணங்கள்.
உன்னத பக்தி அதாவது நான்காவதாக சொல்லப்பட்ட ஞானி என்பதற்கு உதாரணம் பிரஹ்லாதன், ஹனுமன், நாரதர், முதலியோர்
No comments:
Post a Comment