Sunday, August 20, 2017

Vedas speak of Jeeva Kaarunyam

கருப்பு சட்டை திராவிட விஷமிகள் வேதகாலத்தில் இந்துக்கள் அனைவரும் மாட்டிறைச்சி சாப்பிட்டனர் என்றும்.,யாகங்களில் பசு பலியிடப்பட்டன என்றும் உண்மைக்கு புறம்பான முறையில் அவதூறு பேசிவருகின்றன. அதற்காக வேதங்களை வெட்டியும் ஒட்டியும் பித்தலாட்டம் செய்துவருகின்றனர். 
உண்மையில் வேதங்கள் பசுவதையை கடுமையாக எதிர்க்கிறது. எல்லா உயிர்களிடமும் ஜீவகாருண்யம் பேணவேண்டும் என்றே வலியுறுத்துகிறது. அதற்கு வேதங்களே உள்ளங்கை நெல்லிக்கனி போல.

வேதங்களில் இருந்து சின்ன சாம்பில். 

க்ருதம் துஹானாமதிதிம்
ஜனாயாக்நே மா ஹிம்சிஹி: யஜுர்
வேதம் – 13.49 

"பாதுக்காக்கப் படவேண்டிய பசுக்களையும் காளைகளையும் கொல்லாதீர்!"
——————————————————–
ஆரே கோஹா ந்ருஹா வதோ வோ
அஸ்து ரிக் வேதம் – 7.56.17
"ரிக்வேதத்தில் பசுவதை என்பது
மாபாதகம் என்றும் மனிதரைக்
கொல்வதற்குச் சமம் என்றும்
கூறப்படுகிறது. இத்தகைய
கொடுஞ்செயலைச்
செய்தவர் தண்டிக்கப்பட
வேண்டுமென்றும் கூறுகிறது"
——————————————————–
சூயவஸாத் பகவதீ ஹி பூயா அதோ
வயம் பக்வந்த: ஸ்யாம
அத்தி த்ர்நாமாக்ன்யே விஷ்வதாநீம்
பிப ஷுத்தமுதகமாசரந்தீ
ரிக் வேதம் 1.164.40 / அதர்வ வேதம்
7.73.11 / அதர்வ வேதம் 9.10.20
அக்ன்ய பசுக்கள் – இவைகளை
எக்காரணம் கொண்டும்
கொல்லக்கூடாது –

அவை தாங்களே தங்களை சுத்த ஜலம்,
பச்சைப் புற்களை உண்டு
ஆரோக்கியமாக்கிக் கொள்ளும், இதன்
மூலம் நாம் நற்பண்புகள், ஞானம்
மற்றும் செல்வம்
படைத்தவர்களாவோம்.
——————————————————–
கெள என்ற பதத்திற்கு அர்த்தமாக
அக்ன்ய, அஹி, அதிதி என்ற
பதங்களையும் நிகண்டு தருகிறார்.
யஸ்கரும் இதையே – அக்ன்ய –
கொல்லக் கூடாத ஒன்று
அஹி – வதை செய்யக் கூடாத ஒன்று
அதிதி – துண்டு துண்டாக வெட்டப்
படக்கூடாத ஒன்று
பசுவின் இம்மூன்று பெயர்களும்
மிருகவதை கூடாதென்பதை
வலியுறுத்துகிறது. இவை
வேதங்களில் மீண்டும் மீண்டும்
பசுக்களைக் குறிப்பதாய்
வருகிறது. ——————————————————–
அக்ன்யேயம் சா வர்ததம் மஹதே
செளபாகாய
ரிக் வேதம் – 1.164.27
"பசு – அக்ன்ய – நமக்கு
ஆரோக்கியமும் வளமும்
கொணர்கிறது" சுப்ரபாணாம்
பவத்வக்ந்யாயா: ரிக்வேதம் – 5.83.8
"அக்ன்ய பசுவிற்கு சுத்த ஜலம்
கிடைக்க மிகச் சிறந்த வசதி
செய்யப்பட்டிருக்க வேண்டும்"
யஹ் பெளருஷேயேன
க்ரவிஷா சமன்க்தே யோ அஷ்வேன
பஷுநா யாதுதானா:
யோ அக்ன்யாயா பரதி க்ஷீரமாக்நே
தேஷாம் ஷீர்ஷானி ஹரசாபி
வ்ரிஷ்சா ரிக் வேதம் – 10.87.16
"மனித, குதிரை அல்லது
மிருகங்களின் சதைகளைப்
புசிப்பவர், அக்ன்யப் பசுக்களைக்
கொல்பவர் இவர்களை கடுமையாகத்
தண்டிக்க வேண்டும்."
விமுச்யத்வமக்ஹ்ன்யா தேவயாநா
அகன்மா யஜுர் வேதம் 12.73
"அக்ன்ய பசுக்கள் மற்றும் காளைகள்
உனக்கு வளங்களைக் கொணர்பவை"
மா காமனாகாமாதிதிம் வதிஷ்டா
ரிக் வேதம் 8.101.15
"பசுக்களை கொல்லாதீர்.
பசு ஒரு வெகுளி மற்றும் அதிதி –
அதாவது துண்டு துண்டாக வெட்டப்
படக்கூடாதது"
அந்தகாய கோஹாதம்
யஜுர் வேதம் – 30.18
"பசுவதை செய்பவர்களை அழி!" 

யதிநோ காம் ஹன்சி யத்யஷ்வம் யதி
பூருஷம் தம் த்வா சீசேனா வித்யாமோ யதா நோசோ அவீரஹ அதர்வ வேதம் – 1.16.4
"யாரேனும் உங்களின் பசுக்கள்,
குதிரைகள் அல்லது மக்களை
அழிப்பாராயின், அவர்களை ஈயக்
குண்டினால் கொன்று விடுங்கள்"
வத்ஸம் ஜாதமிவாக்ன்யா அதர்வ
வேதம் – 3.30.1
பிறரைக் – கொல்லப் படக்கூடாத –
ஆக்ன்யப் பசு தன்
கன்றுகளை எவ்வாறு நேசிக்குமோ
அவ்வாறு நேசியுங்கள் தேனு
சதனம் ரயீநாம்
அதர்வ வேதம் – 11.1.34

பசுவே அனைத்து வளங்களுக்கும்
ஆதாரமாம் ரிக்வேதத்தின் 28 ஆம்
சூக்தம் அல்லது 6வது மண்டல
ஸ்லோகம் அனைத்தும் பசுவின்
பெருமையைப் பாடுகிறது. ஆ
காவோ அக்னமன்னுத
பத்ரமக்ரந்த்சீதந்து ஃபூயோ ஃபூயோ
ரயிமிதஸ்ய வர்தயன்னபின்னே ந தா
நஷந்தி ந
பதந்தி தஸ்கரோ நாசாமமித்ரோ
வ்யதிரா ததர்ஷதி காவோ பகோ
காவ இந்த்ரோ மே அச்சான் யூயம்
காவோ மேதயதா
மா வ ஸ்தேநா ஈஷத மாகன்ஷ:
1. அனைவரும்
பசுக்களை தொந்தரவுகளிலிருந்து
காத்து ஆரோக்கியமாக
வைத்திருக்க வேண்டும்.
2. பசுக்களைப் பராமரிப்பவரைக்
கடவுள் ஆசிர்வதிக்கிறார்.
3. பகைவரேயானாலும் பசுக்களின்
மீது எந்த ஆயுதப் பிரயோகமும்
செய்யலாகாது.
4. பசு வதை யாரும் செய்யக்
கூடாது.
5. பசு வளமையும் வலிமையும்
கொணர்கிறது.
6. பசுக்கள் ஆரோக்யமாகவும்
மகிழ்வுடனுமிருந்தால் ஆண்-
பெண்களும்
வியாதிகளற்று வளம் பெறுவர். 7.
பசுக்கள் சுத்தமான் தண்ணீரைப்
பருகியும் பச்சைப் புல்லைப்
புசித்துமிருக்கட்டும். அவைகளைக்
கொல்ல வேண்டா,
அவை நமக்கு வளத்தையளிப்பவை.
—————————————————–

யஸ்மிந்த் ஸர்வாணி பூதான்யாத்மைவாபூத்
விஜானத:
தத்ர கோ மோஹா கஹ் சோகாஹ்
ஏகத்வமனுபச்யத:
யஜுர் வேதம் – 40.7
"எல்லாவற்றிலும் ஆன்மாவைக்
காண்பவர் அதன் புறத் தோற்றத்தில்
மயக்கமோ துயரமோ அடைவதில்லை,
ஏனெனில்
அவர் தன்னிலும் அவைகளிடத்திலும்
வேறற்ற
தன்மையைக் காண்கிறார்"
—————–
அனுமந்தா விஷசீதா நிஹந்தா
க்ரயவிக்ரயீ
சம்ஸ்கர்த்தா சோபஹர்த்தா ச
கதாகஷ்சேதி காடகா:
மனுஸ்ம்ருதி – 5.51
"மிருக வதையை அனுமதிப்பவரும்,
மிருகங்களைக்
கொல்வதற்காக
கொண்டு வருபவரும்,
வதை செய்பவரும், மாமிசம்
விற்பவரும்,
அதை வாங்குபவரும், அதிலிருந்து
உணவுப்
பதார்த்தம் செய்பவரும், அதைப்
பரிமாறுபவரும், அதை உண்பவரும்
கொலைப் பாதகஞ்செய்தவரே"
—————–
ப்ரீஹிமட்டம்
யவமட்டமாதோ மாஷமாதோ திலம்
ஈஷா வாம் பாகோ நிஹிதோ
ரத்னதேயாய
தந்தெள மா ஹின்சிஷ்டம்
பிதரம் மாதரம் ச
அதர்வ வேதம் – 6.140.2
"ஏ பற்களே! நீங்கள் அரிசியை,
வாற்கோதுமையை,
பருப்பு வகைகளை, எள்ளை
உண்கிறீர்கள்.
இவைகளே உமக்காக ஏற்பட்டவை. தாய்
தந்தையராக முடியும் எதையும்
கொல்லாதீர்கள்"
—————–
யா ஆமம் மான்ஸமதந்தி
பௌருஷேயம் ச
யே க்ரவீ:கர்பான்
காதந்தி கேஷவாச்டாநிதோ
நாஷயாமசி
அதர்வ வேதம் – 8.6.23
"நாம் சமைத்த இறைச்சி, பச்சை
இறைச்சி, ஆண்-
பெண் பாலர்களின் அழிவினால்
ஏற்பட்ட இறைச்சி, கரு,
முட்டை இவைகளை உண்பவர்களை
அழிக்க வேண்டும்"
—————–
அனகோ ஹத்யா வை பீம க்ரித்யே
மா நோ காமஷ்வம் புருஷம் வதீ:
அதர்வ வேதம் – 10.1.29
"வெகுளியானவற்றைக்
கொல்வது கண்டிப்பாக
பெரும் பாவமே. நம் பசுக்களையும்,
குதிரைகளையும், மக்களையும்
கொல்லாதீர்"!
இப்படித் தெளிவாக வேதங்களில்
மிருகவதை தடை செய்யப்பட்டிருக்கையில்
எவ்வாறு இச்செயல்கள் வேதங்களில்
ஊக்குவிக்கப்பட்டிருப்பதாய்ச்
சொல்கிறார்கள்?
—————–
அக்ஃன்யா யஜமானஸ்ய பஷூன்பஹி:
யஜுர் வேதம் – 1.1
"ஓ மனிதனே – மிருகங்கள் அக்ஃன்யா
அழிக்கப்படக் கூடாதவை.
அவைகளைக்
காப்பாயாக"
—————–
பஷுன்ஸ்த்ராயேதாம்
யஜுர் வேதம் – 6.11
"மிருகங்களைக் காப்பீர்"
—————–
த்விபாதவா சதுஷ்பாத்பாஹி
யஜுர் வேதம் – 14.8
"இரண்டு கால், நான்கு கால்
ஜீவன்களைக் காப்பீர்"
—————–
க்ரவி த – க்ரவ்ய (மிருக
வதை செய்பவரிடமிருந்து பெறப்பட்ட
மாமிசம்) + அத (அதை உண்பவர்) –
மாம்ஸமுண்பவர்
பிசாசா – பிசித (மாம்ஸம்) + அஸ
(உண்பவர்) – மாமிசமுண்பவர்
அசுத்ர்ப – அசு (ப்ராண வாயு) + த்ர்ப
(தன்னைத் திருப்தி படுத்திக்
கொள்பவர்) – தன் உணவிற்காக
பிற உயிர்களைக் கவர்பவர்
கர்ப த & அண்ட த – கரு மற்றும்
முட்டைகளை உண்பவர்
மன்ஸ் த – மாமிசம் உண்பவர்கள்
மாமிசம் உண்பவர்களை எப்போதும்
கீழானவர்களாகவே பார்க்கிறது
வேத
இலக்கியங்கள். அவர்களை ராக்ஷசர்கள்,
பிஷாசர்கள் என்றெல்லாம்
அழைக்கிறது. இவர்களை மேம்பட்ட
சமுதாய
வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி
வைக்கப்பட்டவர்களாகவே
கருதியிருக்கிறது.
—————–
ஊர்ஜம் நோ தேஹி த்விபாதே
சதுஷ்பதே
யஜுர் வேதம் – 11.83

"இரு காலுள்ளவையும்
நான்கு கால்களுள்ள ஜீவன்களும்
பலமும் ஆஹ்ருதியும் பெறட்டும்"
இம்மந்திரம் பெரும்பாலான
ஹிந்துக்களால் உணவருந்துவதற்கு
முன் சொல்லப்படும்.
ஒவ்வொரு ஆத்மாவும் எக்கணமும்
நலமுற்று வாழப் பிரார்த்திக்கும்
தத்துவம்
மிருக வதையை எவ்வாறு
அங்கீகரிக்கும்?
லோக சமஸ்தா சுகினோ பவந்து –
இந்த மந்திரத்தின் அர்த்தம்
தெரியுமல்லவா?
சமஸ்த என்றால் அனைத்தும் என்றர்த்தம்.
[பாகம் 2] – வேதங்கள்
அஹிம்சையையே போற்றுகின்றன!
யஞங்கள் பலரின் விருப்பமான மற்றும்
அவர்கள் பிரபலப்படுத்திய
நம்பிக்கைப்படி மிருக
வதையைக் குறிப்பதில்லை. யக்ஞம்
என்ற
சொல் வேதங்களில் ஒரு புனிதமான
செயல் அல்லது மிகவுயர்ந்த
தூய்மைப்
படுத்தும் செயல் என்றே குறிக்கப்
படுகிறது.
—————–
அத்வர இதி யக்ஞநாம –
த்வரதிஹிம்சாகர்மா தத்ப்ரதிஷேத:
நிருக்தம் 2.7
யாஸ்க ஆச்சார்யரின் கூற்றுப்படி,
நிருக்தத்தில் (பாஷாவிலக்கணம்)
யக்ஞம்
என்ற பதத்தின் ஒரு பொருள் அத்வர
என்பதாகும். த்வர
என்பது ஹிம்சை அல்லது வன்முறை
என்றாகும்.
எனவே அ-த்வர என்பது அ-
ஹிம்சை என்பது தெளிவாகிறது.
வேதங்களில் பல இடங்களில் அத்வர
பிரயோகம் காணக்கிடைக்கிறது

———–
அக்னே யம் யக்ஞமத்வரம் விஷ்வத:
பரி பூரஸி
ச இத் தேவேஷு கச்சதி
ரிக் வேதம் 1.1.4
ஓ ஒளிர்விடும் கடவுளே! நீங்கள்
எல்லா திக்குகளிலிருந்தும்
போதிக்கும்
அஹிம்சை யக்ஞம் அனைவருக்கும்
பயனுள்ளதாகிறது, தெய்வீக
நிலைகளைத்
தொடுகிறது, மேலும் மேம்பட்ட
ஆத்மாக்களால்
அங்கீகரிக்கப்படுகிறது.
—————–
ரிக் வேதம் யக்ஞம் என்பதை அத்வர
(அஹிம்சை)
என்றே எங்கும் குறிப்பிடுகிறது.
மற்றைய
மூன்று வேதங்களிலும் அங்ஙனமே.
இவ்வாறிருக்கையில் வேதங்கள்
மிருக
வதையை ஊக்குவிக்கிறதென்று
எவ்வாறு முடிவு செய்யலாம்?
கால்நடை மற்றும் பசு வதை
வேதங்களில்
இருக்கிறது என்ற மிகப் பெரிய
குற்றச்சாட்டு அவை தொட்டு வரும்
பெயர்களினாலேயே திரிபடைந்து
வழங்கப்படுகிறது.
உதாரணத்திற்கு அஸ்வமேத யக்ஞம்,
கோமேத
யக்ஞம், நரமேத யக்ஞம் முதலியன. மிக
அதீத
கற்பனையிலும் இச்சொற்களில்
வழங்கப்பெறும் "மேத" என்பது "பலி"
என்பதாக வழங்கப்படமாட்டாது.
யஜுர் வேதம் குதிரையைப் பற்றி
என்ன
சொல்கிறதென்ற
அற்புதமானதொன்றைப்
பார்ப்போம்.
——————————————————–
இமம் ம ஹிம்சிரேகாஷஃபம் பஷும்
கனிக்ரதம் வாஜிநாம் வாஜிநேஷு
யஜுர் வேதம் – 13.48
"மற்ற பெரும்பாலான
அனைத்து மிருகங்களையும் விட
அதி விரைவாக
ஓடும் ஓர் குளம்பினால் ஆன
கனைக்கும்
இம்மிருகத்தை வதைக்காதீர்!"
——————————————————–
அஸ்வமேத யக்ஞம் என்றால்
குதிரையைப்
பலி கொடுக்கும் யக்ஞம்
என்று பொருளல்ல! யஜுர் வேதம்
மிகத் தெளிவாகக் குதிரையைப்
பலி கொடுக்காதீர் (ம)
என்று சொல்லி விட்டது.
ஸப்தபாதத்தில் அஷ்வ என்றால் தேசம்
அல்லது சாம்ராஜ்யம்
என்று பொருள்படும்.
மேத என்றால் வதை அல்ல.
அது புத்திக்கு ஏற்றாற்ப்போல
செய்யப்படும் ஒரு காரியம் என்றும்
ஒருங்கிணைப்பு அல்லது ஆக்கம்
என்றும்
பொருள் பட ஏதுவாகிறது. இதன்
மூல அர்த்தம்: மேத — மேத்ரு சங்-க-
மேராஷ்டிரம் வா அஷ்வமேதா:
அன்னம் ஹி கெள
அக்னிர்வா அஷ்வா:
ஆஜ்யம் மேதா:
(ஷத்பதம் 13.1.6.3 )

ஸ்வாமி தயானந்த சரஸ்வதி தன்
உண்மையின் ஒளியில் (Light of Truth)
கூறுகிறார்:
"ஒரு சாம்ராஜ்யத்தின் / தேசத்தின்
பெருமை, நலன் மற்றும்
வளத்தை முன்னிறுத்தி
செய்யப்படும்
யக்ஞத்தின் பெயர் அஷ்வமேத யக்ஞம்
எனப்படும்."
"உணவைப் புனிதமாக வைக்கவும்
அல்லது புலன்களை கட்டுப்பாட்டில்
வைக்கவும்
அல்லது உணவைப் புனிதமாக
ஆக்கவும்
அல்லது சூரியனின்
கதிர்களை நற்பயன்பாட்டிற்கு
பயன்படுத்தவும்,
பூமியை அசுத்தத்திலிருந்து
காக்கவும்
செய்யப்படும் யக்ஞம் கோமேத யக்ஞம்
எனப்படும்"
ஞானபூமி — இதில் நம் தமிழ்
மொழியில் கோமகன் என்றால்
கொற்றவன் / மன்னவன் என்றும்
கண்டிருக்கிறோம், கோமகன் என்றால்
பசுவின்
மகன் என்றா பொருள்படும்?
ஒரு வேளை மேதாவிலாசம், மேதை
என்ற
சொல்லும் மேத என்ற சமஸ்க்ருத
சொல்லிலிருந்து
பிறந்திருக்கலாம்.
தமிழ் மொழியும் சமஸ்க்ருதமும்
ஒன்றையொன்று வார்த்தைப்
பிரயோகங்களை கொடுத்து
வாங்கியது என்பது
மொழியாய்வாளர்களின்
கருத்தே –"கெள என்றால் பூமி, பூமியையும் அதன்
சுற்றுச்சூழலையும்
காக்கவென்று செய்யப்படும்
யக்ஞம் கோமேத யக்ஞம்"
"வேதங்களின் அடிப்படையில்
உருவான
வழிமுறைகளின் படி இறந்தவரின்
உடலை எரியூட்டுவதன் பெயர்
நரமேத யக்ஞம்.

No comments:

Post a Comment