Slokas composed by me on dasavatara
நரசிம்ஹாவதாரம்
हिरण्यमेव कशिपुः स हिरण्यकशिपुः
हिरण्ये एव अक्षिणी स हिरण्याक्षः |
भगवत्बुद्धिविरोधिस्तु सा हिरण्यबुद्धिः
जगत्व्याप्य या ज्ञानं आच्छादयति ||
ஹிரண்யமேவ கசிபு: ஸ ஹிரண்யகசிபு:
ஹிரண்யே ஏவ அக்ஷிணீ ஸ ஹிரண்யாக்ஷ:
பகவத்புத்திவிரோதி: து ஸா ஹிரண்யபுத்தி:
ஜகத்வ்யாப்ய யா ஞானம் ஆச்சாதயதி
ஹிரண்யகசிபு என்றால் பொன்னே உணவாகவும் உடுப்பாகவும் உள்ள என்றும்( அதாவது விஷய சுகம்) ஹிரண்யாக்ஷன் என்றால் பொன்னே கண்ணாய் இருப்பது (பொன்னாசை) என்றும் முந்தைய அவதாரத்தின் விளக்கத்தில் பார்த்தோம். இந்த ஹிரண்ய புத்தி பகவத்புத்திக்கு எதிரானது. அது உலகத்தில் சூழ்ந்து நல்லறிவை மறைக்கிறது.
.
प्रकर्षेण ह्लादः प्रह्लादः यदा
भगवत्भक्तिरुदिता पुण्यवशात् |
हिरण्यः भक्तिं नाशयितुं उद्यतो
न शक्तः दृडतरो यदि भक्तिः||
பிரஹ்லாதன் பகவத் புத்தியைக் குறிக்கிறான். ப்ரஹ்லாத என்றால் அதிசய ஆனந்தம்.இது பூர்வ ஜன்ம புண்ணியவசமாக பகவத் பக்தியினால் வருகிறது. இதற்கு தடையாய் உள்ளது ஹிரண்ய புத்தி. ஒரு பக்தன் பொருளாசை மிகுந்த உலகில் துன்புறும்போது பகவான் நரசிம்ஹ உருவில் அவனை ஆட்கொள்கிறார். ஹிரண்யன் இந்த பக்தியை அழிக்க முற்பட்டாலும் திடமான பக்தியை ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஹிரண்ய கசிபுவின் வரங்கள், மரணம் , பூமியிலோ அள்ளது ஆகாயத்திலோ, ஆயுதங்களாலோ அல்லது ஆயுதங்கள் இன்றியோ , பகலிலோ இரவிலோ , மனிதனாலோ அல்லது மிருகத்தாலோ ஏற்படக்கூடாது என்பது சுகதுக்கம், லாபம் நஷ்டம் வெற்றி தோல்வி முதலிய த்வந்த்வத்தைக் (pairs of opposites) குறிக்கிறது. இந்த த்வந்த்வங்கள் மனிதனைப் பாடாய் படுத்துகின்றன.இவற்றை வெல்வதென்றால் அது த்வந்த்வாதீதன் அதாவது இந்த இருமையைக் கடந்தவனால் தான் முடியும்.
भक्तरक्षणार्थं आविर्भूतो भगवान्
न मृगं न मानुषं शुद्धसत्त्वरूपं |
मनस्शिलास्तम्भं भित्वा बहिर्गतः
हन्ति भक्तिविरोधिं रजस्तमरूपं ||
பகவான் பக்தனைக் காப்பாற்ற மனிதனும் அல்ல மிருகமும் அல்ல என்ற உரு எடுத்தார். நகத்தால் ஹிரண்யனை உள்ளேயும் இல்லாமல் வெளியேயும் இல்லாமல், வாயிற்படியில், பகலும் இன்றி இரவும் இன்றி அந்தி வேளையில் கொன்றார். ஆகவே நரசிம்ஹ உருவம் த்வந்த்வாதீதம் , இருமையைக் கடந்தது. கல் தூணாவது கல்லைப்போல் கடினமாக் உள்ள மனம். அதிலிருந்து தெய்வம் வெளிப்பட்டு பக்திக்கு விரோதமான ரஜஸ் தமஸ் இவற்றைப் போக்குகிறது.
ந மிருகம் ந மானுஷம் என்றால் பாதி மனிதன் பாதி மிருகம் என்றல்ல பொருள் . அவன் வர்ணனைக்கு அப்பாற்பட்ட பரம் பொருள் என்று அர்த்தம்.
इत्थं नाटितं भगवता भूमिकां धृत्वा
नृसिम्हरूपां हन्तुं हिरण्यबुद्धिं|
अनाद्यविद्यया ह्रदयं प्रविष्टं
कामादिरूपेण दुरासदं यत् ||
இவ்வாறு பகவான் நரசிம்ஹம் என்ற வேஷத்தில் ஒரு நாடகம் நடித்து அனாதியான அவித்யையால் ஹ்ருதயத்தில் புகுந்துள்ள ஹிரண்ய புத்தி அல்லது ஆசை என்ற வெல்ல முடியாத அரக்கனை (காமரூபம் துராஸதம்- கீதை) அழிப்பதைக் காட்டுகிறார்.
भक्त्यात्वनन्यया शक्यं मायां तर्तुं मनुष्येण
इति निरूपयितुं एव कथितं प्रह्लादश्चरितं|
यत् दुरितापहं ज्ञानप्रदं सकलधर्मसारभूतं
नृसिम्हावतारं पुनाति वक्तारं श्रोतारं च||
ப்ரஹ்லாத சரிதம் மனிதரால் பகவானுடைய மாயையை பக்தியினால் மட்டுமே கடக்க முடியும் என்று காண்பிக்கிறது. இந்த நரசிம்ஹாவதாரம் பாபங்களைப்போக்கி ஞானத்தை அளித்து சகலதர்மங்களுக்கும் சாரமாகி சொல்பவரையும் கேட்பவரையும் புனிதப் படுத்துகிறது.
கீதையில் பகவான்
தைவீ ஹ்யேஷா குணமயீ மமமாயா துரத்யயா
மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே(ப.கீ. 7- 14)
" என்னுடைய இந்தமாயை ஆனது கடக்கமுடியாதது. விதிவசமானது. யார் என்னை சரண்அடைகிறார்களோ அவர்களே இதைக் கடக்கிறார்கள்."
என்று சொல்கிறார்.
எனக்குத் தோன்றிய எண்ணம் ஒன்று.
कनककशिपु मण्डप मणिस्तम्भं भित्वा आविरभूः इति किमत्र चित्रं ?
किं न स्फुटितं बहुजन्मकर्म स्तब्धं स्तंबं इव हेलया मम ह्रुदयस्तंभम् ?
இறைவா! நீ ஹிரண்ய கசிபுவின் மணியாலும் பொன்னாலும் ஆன தூணில்வ இருந்து வந்ததில் என்ன ஆச்சரியம் ? பல ஜன்மங்களில் செய்த பாபத்தின் விளைவால் கருங்கல் போன்ற என் ஹ்ருதயமாகிற தூணில் இருந்தே எளிதில் தோன்றினாயே!

No comments:
Post a Comment