புகுவேன் எனதே நின்பாதம் போற்றும் அடியார் உள்நின்று நடுவேன் பண்டு தோள்நோக்கி நாணம் இல்லா நாயினேன் நெகும் அன்பு இல்லை நினைக்காண நீயாண்டு அருள அடியேனும் தகுவனே என் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே.
-திருவாசகம்
தெளிவுரை :
வெட்கம் கெட்ட நான் முன்பு உன் அடியார்கள் திருக்கூட்டத்தில் இருந்து கொண்டு எனது தோளின் வலிமையையும் அழகையும் பார்த்து மனம் மகிழ்ந்திருந்தேன். உனது சொரூபத்தைக் கண்டு பரவசமடைவதற்கான பேரன்புஎன்னிடமில்லை. இந்நிலைமையில் நீ என்னை ஆள உனக்கு அடிமையாய் இருக்க நான் தகுந்தவனா? என் தந்தையே என் இயல்பு இப்படியும் சிறுமையுறுமோ? இக் கீழ்மையை நான் சகியேன். எனக்குச் சொந்தமாகிய உன் திருவடியையே நான் அடையவேண்டும்.
No comments:
Post a Comment