அருளாளன் அருளிய ஆறு வார்த்தைகள்.......!!!
இளையாழ்வாருக்கு(இராமானுஜருக்கு) ஏற்பட்ட சந்தேகத்தை திருக்கச்சி நம்பிகளிடம் கூற அவரும் அதை தேவப்பெருமாளிடம் எடுத்துரைக்க, பேரருளானும் மனமுவந்து ஆறு வார்த்தைகளை அருளிச்செய்தார்.
1. "அஹமேவ பரம் தத்துவம்"
நாராயணமே உயர்ந்த தத்துவம், நாராயணனே பரம் பொருள்.
2. "தர்சநம் பேத ஏவச"
சித்தாந்தம் ஆத்ம பரமாத்ம பேதத்தையுடையது.
ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.
3. "உபாயேஷு ப்ரபத்திஸ்யாத்"
மோட்சத்திற்கு ப்ரபத்தியே சிறந்த உபாயம்.
சரணாகதியே மோட்சத்திற்கு வழி.
சரணாகதியே கடைத்தேறுவதற்கு உகந்த வழி.
4. "அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்"
அந்திம காலத்தில் ஸ்ம்ருதி வேண்டியதில்லை. இவ்வாறு சரணமடைந்தவன் ஆக்கை முடிவில் நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை.
5. "தேஹாவஸாகே முக்கிஸ் யாத்"
சரீர முடிவில் மோட்சமுண்டு – பிறவியின் முடிவில் மோட்சமுண்டு, மரணமானால் வைகுந்தம் ப்ராப்தமாகும்.
6. "பூர்ணாசார்ய ஸ்மாச்ரய"
பெரிய நம்பிகளையே நாட வேண்டியது. அவரைக் குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல்.
இந்த "ஆறு வார்த்தைகளை" தாமே ஆசிரியர் போல இருந்து ராமானுஜருக்கு விளக்கினார் திருக்கச்சி நம்பிகள்.🙏🏻🙏🏻
No comments:
Post a Comment